Home
News

2026 முழுவதும் வேலிடிட்டி.. ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் திட்டம்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 5ஜி டேட்டா..

ஆண்டு முழுவதும் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் (airtel). குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களும் தினசரி டேட்டா, 365 நாள் வேலிடிட்டி, ஓடிடி, அன்லிமிடெட் 5ஜி, தினசரி எஸ்எம்எஸ் உள்ளிட்ட அனைத்து நன்மைகளையும் வழங்குகின்றன.

குறிப்பாக அடிக்கடி ரீசார்ஜ் செய்யாமல் நீண்ட கால வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் மட்டுமே இந்த திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், 2026 முழுவதும் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் எதிர்பார்க்கும் பயனர்கள் எப்போது மற்றும் எந்த திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

2026 முழுவதும் வேலிடிட்டி.. ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் திட்டம்..

ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3599 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் மட்டும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) ஒரு வருடம் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2.5 டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஏர்டெல் திட்டம் 1 வருடத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த ஜியோஹாட்ஸ்டார் OTT நன்மை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

2026 முழுவதும் வேலிடிட்டி.. ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் திட்டம்..

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் வழங்கப்படுகிறது. பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data), தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.

எப்போது ரீசார்ஜ் செய்ய வேண்டும்?
ஆண்டு முழுவதும் ரீசார்ஜ் இருக்க வேண்டும் என்றால், டிசம்பர் 31, 2025 அன்று மேலே உள்ள இரண்டு திட்டங்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்போது தான் 2026-ம் ஆண்டில் 365 நாட்களும் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel annual plans come with unlimited calling and 5G data valid till the end of 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X