ரூ.100 முதல் திட்டங்கள்: ஏர்டெல்லின் பலே அறிவிப்பு..!

|

தொலைதொடர்பு நிறுவனங்களிடையே ஏற்படும் போட்டி காரணமாக, ஒவ்வொரு நிறுவனமும் போட்டிப் போட்டுக் கொண்டு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் பாரதி ஏர்டெல் தங்களது போஸ்ட் பெய்டு சந்தாதாரர்களுக்கு இரண்டு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.100 முதல் திட்டங்கள் அறிவிப்பு

ரூ.100 முதல் திட்டங்கள் அறிவிப்பு

ஏர்டெல் நிறுவனம் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 மற்றும் ரூ.200-க்கு இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. தாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் திட்டத்துடன் வழங்கப்படும் இன்டெர்நெட் பேக்கேஜ் தவிற ரூ.100 மற்றும் ரூ.200 செலுத்தினால் 35 ஜிபி டேட்டா வரை கூடுதலாக வழங்க உள்ளது.

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு

மேலும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் கணக்கில் 500 ஜிபி டேட்டா கேரி ஃபார்வர்ட் வசதியும் வழங்குகிறது. பணம் செலுத்தி கூடுதல் இணையத்தை பயன்படுத்த முடியாமல் போனால். அந்த டேட்டாவை அடுத்த மாதக்கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அப்படியெல்லாம் போக முடியாது: அனில் அம்பானி ராஜினாமாவை நிராகரித்த கடன்தாரர்கள்அப்படியெல்லாம் போக முடியாது: அனில் அம்பானி ராஜினாமாவை நிராகரித்த கடன்தாரர்கள்

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவின் படி மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். இதனால் பல்வேறு சிக்கலில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதேபோல் ஆயிரக்கணக்கான கோடி நஷ்டத்தில் இருப்பதாகவும் பெரும்பாலான முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தெரிவித்தன.

சேவைக் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவிப்பு

சேவைக் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவிப்பு

இதையடுத்து, வருகிற டிசம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது சேவைக்கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் உடனடியாக நிலுவைத் தொகையை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என்ற கட்டளைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உடனடியாக செலுத்த வேண்டாம் இரண்டு ஆண்டு கால அவகாசம் எடுத்துக் கொள்ளும்படியும், தவணை முறையில் செலுத்த முயற்சிக்கவும் என தெரிவித்தார்.

ஏர்டெல் நிறுவனம் அளித்த நம்பிக்கை

ஏர்டெல் நிறுவனம் அளித்த நம்பிக்கை

இந்த அறிவிப்புக்கு பிறகு கட்டணங்கள் உயர்த்தப்படுமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது. இந்த நிலையில் ப்ரீபேய்டு சேவைகள் பலவற்றை பெரும்பாலான நிறுவனங்கள் நிறுத்தியது. தற்போது ஏர்டெல் நிறுவனம் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel Announces Two New Add-On Postpaid Plans Starting At Rs. 100

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X