மீண்டும் மீண்டும் ஜியோவிடம் "பல்ப்" வாங்கும் ஏர்டெல்.!
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149/- திட்டத்தை பொறுத்தமட்டில், சமீபத்திய மாற்றத்தின் கீழ் தரவு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனத்தின் திட்டங்களை அப்படியே காப்பி அடிப்பதில் ஏர்டெல் முன்னிலை வகிக்கிறது. ஏர்டெல் நிறுவனதிக்ரு மட்டுமல்ல, வேறெந்த நிறுவனத்தினாலும் ஜியோவை விட மலிவான விலையில் அதிக நன்மைகளை உள்ளடக்கிய திட்டங்களை வழங்க முடியாது. ஆக, ஜியோவை பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை.

சமீபத்தில் வோடோபோன் ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான தரவு மற்றும் எந்தவொரு நெட்வொர்க் உடனும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்கும் புதிய ரூ.496/- திட்டத்தை அறிமுகம் செய்தது. மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் இலவச உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்பு நன்மைகளும் கிடைக்கும். நன்கு கவனித்தால் இந்த திட்டம் அப்படியே ஜியோவின் புதிய திட்டமான ரூ.459/- திட்டத்தை போலவே இருக்கும்.

ஏர்டெல் ரூ.144/- ரீசார்ஜ்
அதே பாணியில் ஏர்டெல் நிறுவனம் தற்போது ஜியோவிற்கு எதிரான போட்டித்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ரூ.144/- என்ற விலை மதிப்பை கொண்டுள்ள இந்த புதிய திட்டமானது ஜியோவின் ரூ.149/- திட்டத்தை அப்படியே காப்பி அடித்து அறிமுகமாகியுள்ளது.

28 நாட்களுக்கு செல்லுபடியாகும்
இந்த புதிய வாய்ப்பின் கீழ், ஏர்டெல் பயனர்கள் 28 நாட்களுக்கு ஒரு செல்லுபடியாகும் 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை பெறுவார்கள், உடன் வரம்பற்ற அழைப்பு நன்மைகளையம் பெறுவார்கள்.

2ஜிபி மற்றும் 1ஜிபி
எனினும், இந்த திட்டத்தின் 2ஜிபி அளவிலான தரவை மட்டுப்படுத்தப்பட்ட ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற பயனர்களுக்கு 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான தரவு கிடைக்கும்.

வாராந்த வரம்பு 1000 நிமிடங்கள்
அழைப்பு நன்மைகளை பொறுத்தமட்டில், ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்புகளுக்கு வாராந்த வரம்பு 1000 நிமிடங்கள் ஆகும் மற்றும் நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் என்ற வரம்பிற்குள் "வரம்பற்ற" குரல் அழைப்புகளை வழங்குகிறது.

வரம்பற்ற இலவச எஸ்எம்எஸ் நன்மை கிடையாது
ஒருவேளை அந்த வரம்பு முடிந்துவிட்டால், மீதமுள்ள காலத்திற்கு ஒரு நிமிடத்திற்கு 10 பைசா என்ற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149/- திட்டத்தினை போல வரம்பற்ற இலவச எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் இல்லை.

ஜியோ ரூ.149/- நன்மைகள்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149/- திட்டத்தை பொறுத்தமட்டில், சமீபத்திய மாற்றத்தின் கீழ் தரவு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுழற்சிக்கும் தற்போது 2ஜிபி டேட்டாவிற்கு பதிலாக மாதத்திற்கு 4ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இந்த மாற்றத்துடன் ஜியோ வழங்கும் வழக்கமான இலவச குரல் அழைப்பு நன்மைகள், வரம்பற்ற எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலையும் பயணர்கள் பெறுவார்கள்.

ஜியோ வழக்கம்போல முன்னிலை வகிக்கிறது
ஒட்டுமொத்தமாக பார்த்தால், இந்த புதிய ஏர்டெல் திட்டமானது எதிர்பார்த்த அளவிலான போட்டியை நிகழ்த்தாது என்றே தோன்றுகிறது. ரூ.144/- திட்டத்தோடு ஜியோவின் ரூ.149/- திட்டத்தை விலைப்புள்ளியில் மட்டுமே ஒப்பிட முடிகிறது, வழங்கும் நன்மைகளை பொறுத்தமட்டில் ஜியோ வழக்கம்போல முன்னிலை வகிக்கிறது.


Click it and Unblock the Notifications