Home
News

ஓரம்போங்க அம்பானி சார்.. Airtel அறிவித்துள்ள T20 திட்டங்கள்!

டி20 கிரிக்கெட் உலக கோப்பை (T20 Cricket World Cup) போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில்.. பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் தனது ப்ரீபெய்டு (Prepaid), போஸ்ட்பெய்ட் (Postpaid), ஹோம் பிராட்பேண்ட் (Home Broadband) மற்றும் டிஜிட்டல் டிவி (Digital TV) வாடிக்கையாளர்களின் டேட்டா பயன்பாட்டு தேவைகளை மனதில் கொண்டு டி20 கிரிக்கெட் போட்டி திட்டங்களை (T20 Cricket Tournament plans) அறிமுகப்படுத்தியுள்ளது. டி20 தொகுப்பின்கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தாவுடன் வருகின்றன.

ஏனென்றால் இந்தியாவில் டி20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டியின் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் பார்ட்னர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தான். அதாவது உங்களிடம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்திற்கான அணுகல் இருந்தால் மட்டுமே உங்களால் டி20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளை லைவ் ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

ஓரம்போங்க அம்பானி சார்.. Airtel அறிவித்துள்ள T20 திட்டங்கள்!

இல்லையென்றால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலை தான் அணுக வேண்டியிருக்கும். இந்த சிக்கலை சரிசெய்யவே.. டெய்லி 3ஜிபி டேட்டா, 1 ஆண்டு வேலிடிட்டி, 1 ஆண்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா என விலைக்கு ஏற்ப பல்வேறு நன்மைகளை வழங்கும் ஏர்டெல்லின் டி20 கிரிக்கெட் போட்டி திட்டங்கள் வெளிவந்துள்ளன. இந்த தொகுப்பின் கீழ் என்னென்ன திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்? அவைகள் என்னென்ன நன்மைகளை வழங்கும்? இதோ விவரங்கள்:

ப்ரீபெய்ட் சேவையின்கீழ் கிடைக்கும் திட்டங்கள்: ஏர்டெல்லின் டி20 கிரிக்கெட் போட்டி திட்டங்களின் தொகுப்பின்கீழ் 3 ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. முதலாவதாக 28 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் டெய்லி 3ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.499 திட்டம் உள்ளது. அடுத்ததாக 84 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.869 திட்டம் உள்ளது. கடைசியாக 365 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் டெய்லி 2.5ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.3359 திட்டம் உள்ளது

மேற்கண்ட 3 திட்டங்களும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் வழியாக 20க்கும் மேற்பட்ட ஓவர்-தி-டாப் கன்டென்ட் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான அணுகல், அத்துடன் அப்பலோ 24x7 மற்றும் ஃபாஸ்ட்டாக் பலன்கள் உள்ளிட்ட கூடுதல் நன்மைகளுடன் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு திட்டங்கள் மூன்று மாத இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கும்; கடைசியாக உள்ள 1 ஆண்டு திட்டம் ஒரு வருட இலவச சந்தாவை வழங்கும்.

போஸ்ட்பெய்ட் சேவையின் கீழ் கிடைக்கும் திட்டங்கள்: ஏர்டெல்லின் போஸ்ட்பெய்ட் திட்டங்களும் ஒரு வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் வழியாக 20க்கும் மேற்பட்ட ஓடிடி இயங்குதளங்களுக்கான இலவச அணுகல், அன்லிமிட்ட் 5ஜி டேட்டா ஆபர் மற்றும் பேமிலி ஆட்-ஆன் பலன்களுடன் வருகின்றன.

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ரூ.399 இல் தொடங்கி ரூ.1,499 வரை செல்கின்றன. டேட்டா நன்மையை பொறுத்தவரை திட்டத்தின் விலைக்கு ஏற்ப 40ஜிபி முதல் 200ஜிபி வரையிலான டேட்டாவை வழங்குகின்றன. டி20 கிரிக்கெட் உலக கோப்பையோ போட்டிகளை காண உதவும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை பொறுத்தவரை, ரூ.499 முதல் தொடங்கும் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அணுக கிடைக்கும்.

ஹோம் பிராட்பேண்ட் சேவையின் கீழ் கிடைக்கும் திட்டங்கள்: ரூ.999, ரூ.1,498 மற்றும் ரூ.3,999 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஹோம் பிராட்பேண்ட் திட்டங்களுடன் ஹை ஸ்பீட் இண்டர்நெட் உடன் கூடுதலாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாக்கள் மற்றும் பிற நன்மைகளும் கிடைக்கும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.

இண்டர்னேஷனல் ரோமிங் சேவையின் கீழ் கிடைக்கும் திட்டங்கள்: டி20 கிரிக்கெட் போட்டிகளை காண அமெரிக்கா மற்றும் கனடா செல்லும் பயனர்களுக்கு, இன்-பிளைட் கனெக்டிவிட்டி உடன் இண்டர்னேஷனல் ரோமிங் பேக்குகளை ஏர்டெல் நிறுவனம் எளிமைப்படுத்தி உள்ளது. இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீம் செய்யவும்; சர்வதேச ரோமிங்கை ஒரு நாளைக்கு ரூ.133 க்கு அனுபவிக்கவும் அனுமதிக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel Announced T20 Cricket Tournament Plans With Free Disney Plus Hotstar Starts From Rs 499
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X