17 நகரங்களில் கிடைக்கும் ஒன் ஏர்டெல் திட்டம்: நன்மை என்ன தெரியுமா?

|

ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆல் இன் ஒன் திட்டம் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரேவற்பு கிடைத்ததையடுத்து இந்தியா முழுவதும் 17 நகரங்களில் ஆல் இன் ஒன் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

ஏர்டெல் ஒன் திட்டங்கள்

ஏர்டெல் ஒன் திட்டங்கள்

ஏர்டெல் ஒன் திட்டங்கள் ஆரம்பத்தில் ஐந்து நகரங்களில் மட்டுமே கிடைத்தது. பின் படிப்படியாக அதிகரித்து டெல்லி, மும்பை, புனே, ஜெய்ப்பூர் கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், நொய்டா, குர்கான், சென்னை, காஜியாபாத், சண்டிகர், பஞ்ச்குலா, போபால், இந்தூர் உள்ளிட்ட 17 நகரங்களில் தற்போது அணுக கிடைக்கிறது.

நான்கு சலுகைகள் ஒரே திட்டம் ஒரே பில்

நான்கு சலுகைகள் ஒரே திட்டம் ஒரே பில்

ஆல் இன் ஒன் திட்டமானது நான்கு பிரிவு சலுகைகளை உள்ளடக்கியது. நான்கு சலுகைகள் ஒரே திட்டம் ஒரே பில் என்ற இழக்கின் அடிப்படையில் இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. பாரதி ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை, இணைய சேவை, டிடிஎச் ஆபரேட்டர் என பல சேவைகளை வழங்குகிறது. இது அனைத்தையும் ஒருங்கிணைக்கும் திட்டமே ஒன் ஏர்டெல் திட்டங்கள்.

ரூ.899 முதல் ரூ.1,999 வரை

ரூ.899 முதல் ரூ.1,999 வரை

இந்த திட்டத்தின் குறைந்த விலை ரூ.899 ஆகவம் அதிக விலை ரூ.1,999 ஆகவும் உள்ளது. இந்த திட்டத்தின் குறைந்தபட்ச விலை ரூ.899 குறித்து பார்க்கையில், ஒரே ஏர்டெல் திட்டத்தில் இரண்டு போஸ்ட்பெய்ட் இணைப்பு கிடைக்கும் அது ஒரு வழக்கமான சிம் மற்றும் ஒரு இலவச ஆட் இன் சிம் ஆகும். 75 ஜிபி வரை டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.

டிடிஎச் சேனல்கள், அமேசான் பிரைம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்

டிடிஎச் சேனல்கள், அமேசான் பிரைம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்

அதோடு வாடிக்கையாளர்களுக்கு ரூ.350 மதிப்புள்ள ஏர்டெல்லின் டிடிஎச் சேனல்கள், அமேசான் பிரைம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பயன்பாட்டிற்கான சந்தாவை உள்ளடக்கிய ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள் ஒரு வருடத்திற்கு கிடைக்கும்.

அறிய வாய்ப்பு- ரூ.10,000 இலவசமாக வழங்கும் அமேசான்: இதை மட்டும் செய்தால்போதும்!

நான்கு போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகள்

நான்கு போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகள்

அதேபோல் ரூ.1,399 திட்டம் பயனர்களுக்கு நான்கு போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகளை 150 ஜிபி வரை டேட்டா மற்றும் ரூ.899 திட்டத்தின் அதே நன்மைகளை இந்த திட்டத்திலும் வழங்குகிறது.

ரூ.1,499 ஆல் இன் ஒன் ஏர்டெல் திட்டம்

ரூ.1,499 ஆல் இன் ஒன் ஏர்டெல் திட்டம்

ரூ.1,499 திட்டத்தில் இரண்டு போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகள், ஏர்டெல் ஃபைபர் மற்றும் லேண்ட்லைன் இணைப்புகளை ஒரே திட்டத்தில் வழங்குகிறது.

75 ஜிபி வரை அதிவேக டேட்டா

75 ஜிபி வரை அதிவேக டேட்டா

அதோடு போஸ்ட்பெய்ட் பயனர்கள் 75 ஜிபி வரை அதிவேக இணையத்தை இலவசமாக அனுபவிக்க முடியும். அதே சமயம் ஃபைபரின் தரவு பயன்பாடு 200 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 300 ஜிபி டேட்டா வரை இணைக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச விலையான ரூ.1999 திட்டம்

அதிகபட்ச விலையான ரூ.1999 திட்டம்

ஆல் இன் ஒன் ஏர்டெல் திட்டத்தின் அதிகபட்ச விலையானது ரூ.1999 ஆகும். இந்த திட்டத்தில் ரூ.1,499 திட்டத்தைப் போலவே கூடுதல் சலுகைகளையும், கூடுதல் போஸ்ட்பெய்ட் எண் மற்றும் டி.டி.எச் இணைப்புடன் உங்களுக்கு கிடைக்கும். நான்கு திட்டங்களிலும் ஏர்டெல் நன்றி தேங்க்ஸ் திட்ட சலுகைகள் பொதுவானவையாகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel announced One Airtel Plan is now Available in 17 Cities: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X