Home
News

கேபிள் TV-ஐ க்ளோஸ் செய்த Airtel நியூ இயர் ஆபர்.. ரூ.1000 டிஸ்கவுண்ட்.. 350 சேனல், 22 OTT, அன்லிமிடெட் டேட்டா!

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், புதிய பிராட்பேண்ட் இணைப்புகளை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் பிராட்பேண்ட் இணைப்புகளை பாரதி ஏர்டெல்லின் வலைத்தளம் மற்றும் நிறுவனத்தின் ஆப் மூலம் வாங்கலாம்.

ஏர்டெல் இப்போது இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் இணைப்புகளை வழங்குகிறது. மேலும் மிகவும் மலிவான விலைக்கு ஏர்டெல் வைஃபை திட்டங்களும் நிறுவனத்தின் வலைத்தளத்தில் கிடைக்கின்றன. அதாவது உங்களுக்கு என்ன தேவை என்பதை பொறுத்து, உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற திட்டத்தை கண்டறிந்து அதை ரீசார்ஜ் செய்யலாம்.

கேபிள் TV-ஐ க்ளோஸ் செய்த Airtel நியூ இயர் ஆபர்.. ரூ.1000 டிஸ்கவுண்ட்!

உதாரணத்திற்கு ஏர்டெல் வைஃபை ரூ.599 திட்டத்தை எடுத்துக்கொள்வோம். இது 30 எம்பிபிஎஸ் (30 Mbps) என்கிற இண்டர்னெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. மேலும் இதன் கீழ் எச்டி சேனல்கள் உட்பட மொத்தம் 350 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களும் கிடைக்கும்.

ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை, ஜீ5 (ZEE5) ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட 22க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும். கூடவே கூகுள் ஒன், பெர்பிளெக்ஸிட்டி ப்ரோ ஆகிய நன்மைகளும் கிடைக்கும். இதே நன்மைகளை 40 எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் வழங்கும் திட்டமும் உள்ளது. அதன் விலை ரூ.699ஆகும்.

இப்படியாக உங்கள் வட்டத்தில் கிடைக்கும் உங்களுக்கு ஏற்ற திட்டங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். ஏர்டெல் அறிவித்துள்ள இந்த சலுகையின் கீழ், புதிய பிராட்பேண்ட் இணைப்பின் விலை ஜிஎஸ்டி உட்பட ரூ.1500 ஆகும். இந்த தொகை - எதிர்கால பில்களுக்கு எதிராக தீர்க்கப்படும். அதாவது அடிப்படையில் இது நீங்கள் ஏர்டெல் நிறுவனத்திற்கு செலுத்தும் முன்பணம் போன்றது.

அதாவது நீங்கள் செலுத்திய ரூ.1500 முன்பணம் உங்கள் தற்போதைய பில்களில் செலுத்தப்பட்டு தீர்ந்து விட்டால், ஏர்டெல் உங்கள் கணக்கில் ரூ.1000 கேஷ்பேக்கை வழங்கும். இது உங்கள் பிராட்பேண்ட் இணைப்பின் 10 எதிர்கால பில்களுக்கு பயன்படுத்தப்படும் 10 வெவ்வேறு வவுச்சர்களாக உங்களுக்கு கிடைக்கும்.

அதாவது நேரடியாக ரூ.1000 தள்ளுபடியாக இருக்காது, ஆனால் இது மொத்தம் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் செலுத்தும் ரூ.1500 தொகையில் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் ஹார்ட்வேர் மற்றும் நிறுவல் கட்டணங்கள் ஆகிய இரண்டும் அடங்கும். பாரதி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இணைப்பை வாங்கும்போது தேவையான அனைத்து பொருட்களையும் வழங்குகிறது.

இதில் இணையத்திற்கான ரூட்டரும் அடங்கும். இருப்பினும், இந்த ரூட்டர் உங்களுடையது அல்ல. நீங்கள் இணைப்பை நிறுத்தும்போது, ஏர்டெல் ​​நிறுவனம் உங்களிடமிருந்து ரூட்டரை திரும்பப் பெறும். நீங்கள் மாதாந்திர திட்டத்தை விட அதிகமாக வாங்கும்போது மட்டுமே நிறுவல் மற்றும் வன்பொருள் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்பதையும் நினைவில் கொள்ளவும்.

ஏர்டெல் சேவையில் அமலுக்கு வரும் சிஎன்ஏபி செயல்முறை: சிஎன்ஏபி என்றால் காலர் நேம் பிரசன்டேஷன் (Caller Name Presentation) என்பதின் சுருக்கம் ஆகும். இது - நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஸ்பேம் கால்கள், ஃபிஷிங் கால்கள் மற்றும் ஆள்மாறாட்ட அழைப்புகள் போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்யப்போகும் ஒரு செயல்முறை ஆகும்.

பெயர் குறிப்பிடுவது போலவே சிஎன்ஏபி என்பது - உங்களுக்கு தெரியாத மொபைல் நம்பரில் இருந்து ஒரு அழைப்பு வரும் போது, அந்த அழைப்பாளரின் சரிபார்க்கப்பட்ட பெயரையும் (Verified name), அவருடைய மொபைல் நம்பரையும் உங்களுக்கு காண்பிக்கும் ஒரு நெட்வொர்க்-நிலை அம்சம் (Network-level feature) ஆகும்.

2026 இல் முழுமையாக அமல்: கடந்த அக்டோபர் 2025 இல், டிராய் (TRAI) என்கிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (Telecom Regulatory Authority of India) அங்கீகரிக்கப்பட்ட சிஎன்ஏபி இப்போது படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் (ஜியோ முதல் பிஎஸ்என்எல்) சிஎன்ஏபி அம்சத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இது 2026 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பெரும்பாலான பயனர்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Announced New Offer Rs.1000 Discount on New Broadband Connection How It Works
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X