Home
News

ஏர்டெல் பயனர்களுக்கு நற்செய்தி- இனி நெட்ஃபிளிக்ஸ் சேவையும் இலவசம்., இந்த திட்டங்களை தேர்வு செய்யலாமே!

ஏர்டெல் தற்போது ரூ.1498 மற்றும் ரூ.3999 என்ற பிராட்பேண்ட் திட்டங்களில் நெட்ஃபிளிக்ஸ் சந்தா சேவையை இணைக்கிறது. இன்ஃபினிட்டி திட்டங்கள் இலவச நெட்ஃபிளிக்ஸ் சலுகையுடன் வருகின்றன. நெட்ஃபிளிக்ஸ் தற்போது இரண்டு ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்களுடன் இலவசமாக கிடைக்கிறது. முன்னதாகவே பல ஏர்டெல் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் சலுகை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்கள்

நெட்ஃபிளிக்ஸ் முன்னதாகவே பல ஏர்டெல் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் இலவசமாக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்கள் உடன் இலவச நெட்ஃபிளிக்ஸ் சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது ஏர்டெல் ப்ரொபஷனல் திட்டங்கள் மற்றும் இன்ஃபினிட்டி திட்டங்களில் நெட்ஃபிளிக்ஸ் இலவச சேவை இணைக்கப்பட்டிருக்கின்றன. ஏர்டெல் ப்ரொபஷனல் திட்டமானது மாதத்திற்கு ரூ.1498 என்ற விலையில் கிடைக்கிறது. அதேபோல் இன்ஃபினிட்டி திட்டமானது மாதத்திற்கு ரூ.3999 என்ற விலையில் கிடைக்கிறது.

ஏர்டெல் ப்ரொபஷனல் திட்டம்

ஏர்டெல் ப்ரொபஷனல் திட்டம்

ஏர்டெல் ப்ரொபஷனல் திட்டத்தை பெறும் பயனர்கள் மாதத்திற்கு ரூ.199 மதிப்புள்ள நெட்ஃபிளிக்ஸ்-ன் அடிப்படை திட்டத்திற்கான மாதாந்திர அணுகலை பெறுவார்கள். ஏர்டெல் இன்ஃபினிட்டி திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, நெட்ஃபிளிக்ஸ் ப்ரீமியம் திட்டத்திற்கான மாதாந்திர அணுகலை பெறுகிறார்கள். இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் மொபைல் திட்டம், அடிப்படை திட்டம், நிலையான திட்டம் மற்றும் ப்ரீமியம் திட்டம் என நான்கு திட்டங்களை வழங்குகிறது.

நெட்ஃபிளிக்ஸ்-ன் மொபைல் திட்டம்

நெட்ஃபிளிக்ஸ்-ன் மொபைல் திட்டம்

நெட்ஃபிளிக்ஸ்-ன் மொபைல் திட்டம் ஒரு டிஸ்ப்ளே ஆதரவு விலை மாதத்திற்கு ரூ.149 ஆக இருக்கிறது. அடிப்படை மாறுபாடு திட்டத்தின் விலை ரூ.199 ஆக இருக்கிறது. அதேபோல் ரூ.499 மதிப்புள்ள நிலையான திட்டமானது இரண்டு டிஸ்ப்ளே ஆதரவுகள் மற்றும் ரூ.649 மதிப்புள்ள ப்ரீமியம் திட்டமானது முறையே 4 டிஸ்ப்ளே ஆதரவுகளுடன் வருகிறது. இதன் மொபைல் திட்டங்களை தவிர பிற அனைத்து திட்டங்களும் பெரிய திரையில் நெட்ஃபிளிக்ஸை ஸ்ட்ரீம் செய்ய அனுதமிக்கின்றன.

ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாடு

ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாடு

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்களில் நெட்ஃபிளிக்ஸ்-ஐ செயல்படுத்துவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம், அதன்படி ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டில் உள்ள "டிஸ்கவர் நன்றி பெனிஃபிட்" தேர்வுக்குள் செல்ல வேண்டும். அடுத்ததாக கீழே ஸ்க்ரோல் செய்து, "உங்கள் ரிவார்ட்ஸ் (வெகுமதிகள்) அனுபவிக்கவும் என்ற பிரிவை தேர்ந்தெடுக்கவும். அதில் நெட்ஃபிளிக்ஸ் காண்பிக்கப்படும். பின் க்ளைம் என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். பின் நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பு பக்கத்தில் ப்ரொஸிட் என்ற தேர்வை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும். இந்த செயல்பாடு அனைத்தும் முடிந்ததும் பயனர்கள் நெட்ஃபிளிக்ஸ் இணையதளத்திற்குள் திருப்பி விடப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு நோக்கங்கள் அல்லது தொழில்முறை நோக்கங்கள்

பொழுதுபோக்கு நோக்கங்கள் அல்லது தொழில்முறை நோக்கங்கள்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக இருப்பது ஜியோ, ஏர்டெல், விஐ மற்றும் பிஎஸ்என்எல் ஆகும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. நாட்டின் மிக முக்கியமான இணைய சேவை வழங்குனர்களில் ஒன்றாக ஏர்டெல் இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் பல்வேறு பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. ஏர்டெல் வழங்கும் பிராட்பேண்ட் திட்டங்களானது பொழுதுபோக்கு நோக்கங்கள் அல்லது தொழில்முறை நோக்கங்களை மையங்கள் வைத்து பயனர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. நாட்டில் இருக்கும் பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு ஓடிடி சந்தாக்களை தங்கள் ரீசாரஜ் திட்டங்களில் வழங்குவதை நோக்கமாக வைத்திருக்கின்றனர்.

3500ஜிபி டேட்டா நன்மைகள்

3500ஜிபி டேட்டா நன்மைகள்

ஏர்டெல்லின் இந்த திட்டம் ப்ரொபஷனல் பேக் என அழைக்கப்படுகிறது. இந்த திட்டமானது மாதத்திற்கு ரூ.1498 செலவில் 300 எம்பிபிஎஸ் அதிவேக இணையத் தரவை வழங்குகிறது. ப்ரொபஷனல் திட்டத்தை அணுகும் பயனர்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் இணைப்பையும் பெறலாம். அதேபோல் இந்த திட்டத்தில் 3.5டிபி அதாவது 3500ஜிபி டேட்டா நன்மைகளை இந்த திட்டத்தில் வழங்குகிறது. இந்த திட்டம் தற்போது நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமி அணுகல் ஆகியவற்றுக்கான சந்தாக்களை ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது.

1ஜிபிபிஎஸ் இணைய வேகம்

1ஜிபிபிஎஸ் இணைய வேகம்

ஏர்டெல்லின் இந்த திட்டம் இன்ஃபினிட்டி பிளான் என அழைக்கப்படுகிறது. ஏர்டெல்லின் இந்த திட்டம் 1ஜிபிபிஎஸ் வரம்பற்ற டேட்டா திட்டத்தை வழங்குகிறது. இன்ஃபினிட்டி திட்டத்தை பெறும் பயனற்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் இணைப்பைப் பெறலாம். இந்த திட்டமானது ரூ.3,999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த திட்டமானது மாதத்திற்கு 1 ஜிபிபிஎஸ் அதிவேக இணைய இணைப்பு டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 3.5டிபி அதாவது 3500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி ஓடிடி இயங்குதளங்களுக்கான சந்தாவுடன் வருகிறது. விங்க் மியூசிக் அணுகலையும் இந்த திட்டம் கொண்டிருக்கிறது. தற்போது இந்த இன்ஃபினிட்டி திட்டத்தில் நெட்ஃபிளிக்ஸ் சந்தா சலுகையும் இணைக்கப்பட்டிருக்கிறது. இன்ஃபினிட்டி திட்டமானது நெட்ஃபிளிக்ஸ் அணுகலை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel Announced Free Netflix Subscription with Two Broadband plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X