Home
News

உங்க மனசு தங்கம் சார்.. கனமழை பெய்யும் பகுதிகளில் உள்ள கஸ்டமர்களுக்கு இலவச டேட்டா.. Airtel அதிரடி அறிவிப்பு!

Airtel Northeast Rainfall Offer: இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், வடகிழக்கில் உள்ள ஏர்டெல் கஸ்டமர்களுக்கான இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால் (Free Data and Voice Call) சலுகையை அறிவித்துள்ளது. டெலிகாம்டால்க்கின் (TelecomTalk) சமீபத்திய அறிக்கையின்படி இந்த இலவச சலுகையானது - திரிபுரா, மிசோரம், மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் அதிக மழையின் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு தனது ஆதரவை வழங்கும் வண்ணம் ஏர்டெல் நிறுவனம் இந்த இலவச சலுகையை அறிவித்துள்ளது

இந்த சலுகை ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்டு (Prepaid) வாடிக்கையாளர்களுக்கான சலுகையாகும். இதோடு ஏர்டெல் போஸ்ட்பெய்டு (Postpaid) பயனர்களுக்கான பிரத்யேக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன சலுகை? ப்ரீபெய்டு வாடிக்கையாளர்க்ளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இலவச டேட்டா, மொத்தம் எத்தனை நாட்களுக்கு அணுக கிடைக்கும்? இதோ விவரங்கள்:

Airtel: கனமழை பெய்யும் பகுதிகளில் உள்ள கஸ்டமர்களுக்கு இலவச டேட்டா!

ப்ரீபெய்டு கஸ்டமர்களுக்கான சலுகையை பொறுத்தவரை, பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் நான்கு நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி மொபைல் டேட்டா (1.5GB of free mobile data per day) மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (unlimited voice calling) இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வேலிடிட்டி காலம் (Validity Period) முடிந்தும், ரீசார்ஜ் செய்ய முடியாத வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

ஏர்டெல்லின் இந்த நடவடிக்கை, அதன் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக அரசாங்க அதிகாரிகள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதை உறுதி செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம். போஸ்ட்பெய்டு பயனர்களுக்கான சலுகையை பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் தங்களுக்கான மொபைல் சேவைகளை தடையின்றி அணுகுவதை உறுதி செய்வதற்காக அவர்களது பில் செலுத்தும் தேதிகள் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் (Bill payment dates extended by 30 days) என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.

மேலும், திரிபுராவில் ஐசிஆர் (ICR) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இன்ட்ரா சர்க்கிள் ரோமிங்கை (Intra Circle Roaming) அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த முன்முயற்சியானது மற்ற நெட்வொர்க்குகளை சேர்ந்த கஸ்டமர்கள், ஏர்டெல் நெட்வொர்க்கை தடையின்றி அணுக அனுமதிக்கும், இதுவும் அனைவரும் எப்போதும் தொடர்பில் இருப்பதை உறுதி செய்கிறது!

ஏர்டெல் நிறுவனத்தின் முக்கிய போட்டியாளர் ஆன ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, வடகிழக்கு பகுதிகளில் உள்ள தனது கஸ்டமர்களுக்காக இதுவரை எந்த சலுகையையும் அறிவிக்கவில்லை. மாறாக அனைவருக்குமான ஃப்ரீடம் சலுகையை (Freedom Offer) நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனமானது, தனது ஃப்ரீடம் ஆபரை இன்னும் சில நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்த கையோடு, தனது ஃப்ரீடம் ஆபரின் கீழ் முற்றிலும் புதிய இலவச சலுகை ஒன்றையும் அறிவித்து உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள ஃப்ரீடம் ஆபர் என்பது ஒரு விளம்பர சலுகை (Promotional offer) ஆகும். இந்த சலுகை, ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் கீழ் புதிய கனெக்ஷனை (New Jio AirFiber connection) பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்; மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

முன்னதாக இதே ஃப்ரீடம் ஆஃபரின் கீழ், ஏர்ஃபைபர் சேவையின் கீழ் சேரும் புதிய வாடிக்கையாளர்களுக்கு 30% தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதோடு சேர்த்து புதிய ஜியோ ஏர்ஃபைபர் கனெக்ஷனை பெறும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,599 மதிப்புள்ள வருடாந்திர மொபைல் திட்டம் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலவசமாக கிடைக்கும் ரூ.3,599 மொபைல் திட்டத்தின் கீழ் டெய்லி 2.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகள் 365 நாட்களுக்கு அல்லது 1 ஆண்டுக்கு கிடைக்கும். கூடுதலாக ரூ.3599-ன் கீழ் ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபரும் கிடைக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel announced Free Data and Unlimited Voice Calling for 4 days for Its Northeast Users Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X