ரூ.10-க்கு ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட்டால் 2 ஜிபி டேட்டா இலவசம்: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு!

|

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் பெப்ஸிகோவுடன் இணைந்து ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி வரை இலவச டேட்டாவை வழங்குகிறது.

முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல்

முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல்

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. கூடுதலாக புதிய ஒப்பந்தங்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஏர்டெல் பல பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்திருக்கிறது.

4 ஜி வேக இலவச டேட்டா

4 ஜி வேக இலவச டேட்டா

இதன் ஒரு பகுதியாக 4 ஜி தரவை இலவசமாக வழங்க ஏர்டெல் பெப்சிகோ இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த சலுகையின் மூலம் பயனர்கள் 2 ஜிபி டேட்டாவை 4 ஜி வேகத்தில் வழங்க இருக்கிறது.

பெப்சிகோவின் தயாரிப்புகள்

பெப்சிகோவின் தயாரிப்புகள்

ஏர்டெல் இலவச டேட்டாவை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கையில், பெப்சிகோவின் தயாரிப்புகளான லேஸ், குர்கரே, அன்கிள் சிப்ஸ் மற்றும் டோரிடோஸ் ஆகியவற்றை வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் புதிய இலவச டேட்டா சலுகையைப் பெறுவார்கள்.

சிற்றுண்டி பொருட்கள் விற்பனை குறைவு

சிற்றுண்டி பொருட்கள் விற்பனை குறைவு

கோவிட் 19 பரவல் காரணமாக சிற்றுண்டி பொருட்கள் விற்பனை குறைந்து வருகிறது. அதே சமயத்தில் இணைய சேவை பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதையடுத்து இணைய சேவையின் மூலம் சலுகைகள் வழங்க பெப்சிகோ முடிவெடுத்துள்ளது.

WhatsApp அழகிகளால் ஏற்படும் புதிய சிக்கல்! உஷராக இருங்கள் இல்லைன்னா இதுதான் கதி!WhatsApp அழகிகளால் ஏற்படும் புதிய சிக்கல்! உஷராக இருங்கள் இல்லைன்னா இதுதான் கதி!

1 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டா

1 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டா

பயனர்கள் பெப்சிகோ தயாரிப்புகளை ரூ.10 அல்லது ரூ.20 க்கு வாங்கும்போது 1 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டாவை பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சலுகையானது அடுத்த ஆண்டு ஜனவரி 30 வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு

கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர்டெல் தலைவர் கட்டண உயர்வு குறித்து அறிவித்தார். அதேபோல் இந்தியாவில் மலிவு விலையில் ஜிபிக்கள் கணக்கான டேட்டாக்கள் வழங்கப்படுகிறது எனவும் இது அர்த்தமற்ற விலை எனவும் அவர் குறிப்பிட்டார். அதன்பின் ஏர்டெல் இந்த புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று திட்டங்களிலும் கூடுதல் தரவு நன்மை

மூன்று திட்டங்களிலும் கூடுதல் தரவு நன்மை

ஏர்டெல் தனது மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் கூடுதல் தரவு சலுகைகளை வழங்கப்போவதாக நேற்று அறிவித்தது. ரூ .289, ரூ .448 மற்றும் ரூ .599 விலையுள்ள திட்டங்களில் கூடுதல் தரவு வழங்கப்படும் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூப்பன்கள் மூலம் இலவச இணைய சேவை

கூப்பன்கள் மூலம் இலவச இணைய சேவை

ஏர்டெல் வழங்கப்படும் இந்த தரவு சலுகையானது கூப்பன்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த கூப்பன்கள் பயன்படுத்தி பெறப்படும் ஏர்டெல் இலவச இணைய சேவை அன்று இரவுடன் நிறைவடையும். ஏர்டெல் இந்த அறிவிப்பு அதன் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய செய்தது என்றே கூறலாம்.

Best Mobiles in India

English summary
Airtel Announced Free 2 GB Data With Pepsico For Customers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X