அடடா., ஏர்டெல் ரூ.199 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, 35 நாள் வேலிடிட்டியாம்- ஒரு சின்ன டுவிஸ்ட்!

|

இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஜியோ அறிமுகம் செய்த சிறிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஏர்டெல் நிறுவனமும் தங்களது பயனர்களை தக்கவைக்கவும், அதிகரிக்கவும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.

ஏர்டெல் நிறுவனம் புதிய சலுகை

ஏர்டெல் நிறுவனம் புதிய சலுகை

அதன்படி தற்போது ஏர்டெல் நிறுவனம் புதிய சலுகை அறிமுகப்படுத்துகிறது. ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் செல்லுபடியாகும் நாட்கள் மற்றும் டேட்டாவை வழங்குவதற்கான வாய்ப்பை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த திட்டம் 35 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதன்மூலம் இந்த சலுகையை அனைத்து பயனர்களும் பெறமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

35 நாட்கள் செல்லுபடியாகும்

35 நாட்கள் செல்லுபடியாகும்

இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் ஆனால் குறிப்பிடத்தகுந்த பயனர்களுக்கு மட்டுமே 35 நாட்கள் செல்லுபடியாகும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. டிராய் சமீபத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களை, அதன் 28 நாட்கள் திட்டங்களை 30 நாட்களாக அதிகரிக்கும்படி அறிவுறுத்தியது. ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடி தினங்கள் நிர்ணயிப்பதில் தலையிட வேண்டாம் எனவும் மொபைல் கட்டணங்களின் தற்போதைய கட்டமைப்பை சீர்குலைக்கும் எனவும் டிராய்க்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஏர்டெல் 1ஜிபி டேட்டா, வரம்பற்ற குரலழைப்புகள்

ஏர்டெல் 1ஜிபி டேட்டா, வரம்பற்ற குரலழைப்புகள்

இருப்பினும் சமீபத்தில் விஐ மற்றும் ஜியோ அறிமுகப்படுத்திய திட்டங்கள் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதன்படி ஏர்டெல் ரூ.199 திட்டம் வழக்கமாக 24 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் செல்லுபடியாகும் காலத்திற்கு ஏர்டெல் 1ஜிபி டேட்டா, வரம்பற்ற குரலழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் பிரைம் வீடியோ, இலவச விங்க் மியூசிக், இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகியவைகளை வழங்குகின்றன.

டெக் ஆன்லைன் அறிக்கை

டெக் ஆன்லைன் அறிக்கை

டெக் ஆன்லைன் அறிக்கைபடி, ஏர்டெல் தனது ரூ.199 திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5 ஜிபி அதிவேக டேட்டா ஆகியவைகளை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரலழைப்பு சலுகைகள் மற்றும் 35 நாட்கள் செல்லுபடி காலத்தோடு வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்குகள்

ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்குகள்

இருப்பினும் இந்த சலுகை அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கவில்லை. ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்குகளுக்கு சமீபத்தில் ரீசார்ஜ் செய்யப்படாத அல்லது சந்தா பெறாத பயனர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் கிடைக்கிறது. அதேபோல் ஜியோ நிறுவனம் புதிய திட்டங்களை வெளியிட்டது. இந்த திட்டமானது தினசரி கட்டுப்பாடுகளுடன் வருகிறது. அதேபோல் ஜியோ திட்டம் செல்லுபடியாகும் முழு காலத்திற்கும் நிலையான ஜிபி அளவிலான டேட்டாக்களை வழங்குகிறது.

ரூ.199 திட்டம் மேம்படுத்தல்

ரூ.199 திட்டம் மேம்படுத்தல்

இதுபோன்ற திட்டத்தை ஏர்டெல் வெளியிட்டுள்ளது. அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு ஏர்டெல் கூடுதல் செல்லுபடியாகும் தரவையும் வழங்குகிறது. இதன் நன்மைகளை கருத்தில் கொண்டு ரூ.200-க்கு கீழ் திட்டத்தை மேம்படுத்தியுள்ளது.

1 ஜிபிபிஎஸ் வரை வேகம்

1 ஜிபிபிஎஸ் வரை வேகம்

அதேபோல் ஏர்டெல் சில நாட்களுக்கு முன்பு குர்கானில் 5ஜி சோதனையை தொடங்கியது. அதில் ஏர்டெல் சோதனை 3500 மெகா ஹெர்ட்ஸ் மிடில் பேண்ட் ஸ்பெக்டமில் 1 ஜிபிபிஎஸ் வரை வேகத்தை எட்ட முடிந்தது. அதேபோல் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நான்கு தொலைத் தொடர்பு வட்டங்களில் ஏர்டெல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel Announced Daily 1.5 GB Data, 35 Days Validity with Rs.199 Recharge Plan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X