ஏர்டெல் புதிய பிளாக் பிளான் திட்டம்: ஒரே விலையில் ஏர்டெல்லின் மொத்த நன்மையும்!
ஏர்டெல் பிளாக் திட்டம் என்பது வாடிக்கையாளர்களுக்கு ஒரு திட்டத்தின் கீழ் தங்கள் சேவைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிளான் ஆகும். ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் பிளாக் திட்டங்களை கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இந்த திட்டமானது ரூ.998, ரூ.1349, ரூ.1598 மற்றும் ரூ.2099 என்ற நான்கு விலைகளில் இருந்தது. இந்த ஏர்டெல் பிளாக் திட்டமானது போஸ்ட்பெய்ட் இணைப்புடன் வருகிறது. தற்போது ஏர்டெல் ரூ.1099 என்ற விலையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.1099 விலையில் கிடைக்கும் புதிய ஏர்டெல் பிளாக் திட்டம்
ரூ.1099 விலையில் கிடைக்கும் புதிய ஏர்டெல் பிளாக் திட்டமானது 200 எம்பிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற ஃபைபர் இணையம் மற்றும் ஏர்டெல் லேண்ட்லைன் இணைப்புகளை வழங்குகிறது. கூடுதலாக இந்த திட்டம் டிவி சேனல்களுக்கு என டிடிஎச் இணைப்பையும் வழங்குகிறது. தனிப்பட்ட முறையில் இந்த டிடிஎச் இணைப்பு பெற்றால் இதற்கு மட்டும் ரூ.350 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.1099 ஏர்டெல் பிளாக் திட்டமானது அமேசான் பிரைமுக்கான ஒரு வருட சந்தாவையும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப்ஸ்-க்கான ஒரு வருட சந்தாவையும் வழங்குகிறது.

போஸ்ட்பெய்ட் சிம் கார்ட்கள் உடனான திட்டங்கள்
ஏர்டெல் பிளாக் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் போஸ்ட்பெய்ட் சிம் கார்ட்கள் உடன் வருகிறது. ஆனால் தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ரூ.1099 திட்டத்தில் சிம்கார்ட் கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியிவில்லை. இதுகுறித்து டெலிகாம் டாக் தளத்தில் வெளியான தகவலின்படி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.1099 திட்டமானது ப்ரீபெய்ட் இணைப்புடன் வருகிறது. இந்த புதிய ஏர்டெல் பிளாக் திட்டத்தின் மூலம், கடந்த காலங்களில் மற்ற திட்டங்களை பயன்படுத்தியவர்கள் இந்த ஏர்டெல் பிளாக் திட்டத்தின் மூலம் தங்கள் ஏர்டெல் இணைப்புகளை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என தெரிவிக்கிறது.

ரூ.998 முதல் ரூ.2099 வரை திட்டங்கள்
தற்போதைய ஏர்டெல் பிளாக் திட்டங்கள் குறித்து பார்க்கையில், இது ரூ.998 என்ற விலையில் தொடங்கி ரூ.2099 வரை வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் பல்வேறு இணைப்புகளை பெறலாம். அது டிடிஎச்+, மொபைல் ஃபைபர்+ உள்ளிட்ட ஆல் இன் ஒன் பிளான்களாக இருக்கிறது. இந்த திட்டங்களில் ஏதேனும் தேர்ந்தெடுக்க விரும்பினால், ஏர்டெல் இணையதளத்தில் உள்ள ஏர்டெல் பிளாக் பிரிவில் இருந்து அதை தேர்ந்தெடுக்கலாம். ஃபைபர், டிடிஎச் மற்றும் மொபைல் திட்டங்களில் இருந்து ஏதேனும் இரண்டு சேவைகளை பயனர்கள் தேர்வு செய்யலாம்.

திட்டங்களில் கிடைக்கும் பலன்கள்
டிடிஎச்+ மொபைல் ரூ.998 திட்டமானது இரண்டு மொபைல் இணைப்புகளையும் 1 டிடிஎச் இணைப்பையும் வழங்குகிறது. அதேபோல் ரூ.1349 திட்டமானது மூன்று மொபைல் இணைப்புகளையும் 1 டிடிஎச் இணைப்புகளையும் வழங்குகிறது. ரூ.1598 திட்டமானது அதேபோல் இரண்டு மொபைல் இணைப்புகளையும் 1 ஃபைபர் இணைப்பையும் வழங்குகிறது. ஆல் இன் ஒன் திட்டமானது ரூ.2099 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டமானது 3 மொபைல் இணைப்புகள், 1 ஃபைபர் இணைப்பு மற்றும் 1 டிடிஎச் இணைப்புகளுக்கான அணுகலை வழங்குகிறது.

புதிய ப்ரீபெய்ட் திட்டம்
சமீபத்தில் பாரதி ஏர்டெல் சமீபத்தில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டமானது ரூ. 319 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இது பயனர்களுக்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மை உடன் வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவும் சமீபத்தில் புதிதாக ஒரு 30 நாள் செல்லுபடியாகும் திட்டத்தை அறிமுகம் செய்தது என்பது கவனிக்கத்தக்கது. ஏர்டெல்லின் ரூ. 319 திட்டத்தைப் போலவே அதே நன்மைகளை வழங்குகிறது.

30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் திட்டம்
பாரதி ஏர்டெல்லின் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டமானது 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையுடன் வருகிறது. இந்த திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இதன் பொருள், இந்த திட்டத்தால் வழங்கப்படும் மொத்த டேட்டா ஒரு மாதத்தில் 60 ஜிபி ஆகும். இது ஒரு சராசரி பயனருக்கு ஏற்ற போதுமான டேட்டா பலனை வழங்குகிறது. மேலும், இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் Wynk Music, Shaw Academy, Apollo 24|7 Circle மற்றும் பல போன்ற கூடுதல் Airtel தேங்க்ஸ் நன்மைகளையும் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications