நெருக்கடி.. 3 மாத Jio பிளான்களுக்கு வேட்டு? ஒரே விலையில் Airtel, Vodafone-ன் 2 விசித்திர வேலிடிட்டி ரீசார்ஜ்!
ஏர்டெல் (Airtel) மற்றும் வோடாபோன் (Vodafone) நிறுவனங்கள் மறைமுகமான கூட்டணியின் கீழும் வேலை செய்யவில்லை.. அதேபோல "எதிரிக்கு எதிரி நண்பன்" என்கிற கோட்பாட்டின் கீழ், தங்களது பொதுவான போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோவிற்கு (Reliance Jio) எதிராகவும் கூட்டு சேரவில்லை. ஆனாலும் கூட..
இவ்விரு நிறுவனங்களின் செயல்பாடுகள் எல்லாமே முகேஷ் அம்பானிக்கும், ஜியோவிற்கும் ஏதோவொரு வகையில் நெருக்கடிகளை தந்துகொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனமானது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியை (30 Days Validity) கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்து, ஜியோ உருவாக்கிய "28 நாட்கள் வேலிடிட்டி" என்கிற வழக்கத்தை உடைத்தெறிந்தது.

இதற்கிடையில் ஜியோவின் 3 மாத திட்டங்களுக்கும் (அதாவது 84 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் திட்டங்களுக்கும்) வேட்டு வைக்க வேண்டும் என்கிற நோக்கமும் ஏர்டெல் நிறுவனத்திடம் உள்ளது போல் தெரிகிறது. ஆகையால் தான் ஏர்டெல் நிறுவனம் 77 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் (77 Days Validity) வரும் சற்றே வித்தியாசமான ஒரு திட்டத்தை வழங்குகிறது.
போதாக்குறைக்கு ஏர்டெல்-ன் நடவடிக்கைகளை, வியாபார தந்திரங்களை அப்படியே காப்பி அடிப்பதில் கில்லாடியான வோடாபோன் ஐடியாவும் கூட 77 நாட்கள் என்கிற வேலிட்டியை கொண்டுள்ளது. இன்னொரு கொடுமையான விஷயம் என்னவென்றால் ஏர்டெல் மற்றும் வோடாபோனின் இவ்விரு திட்டங்களும் விலையும் ஒன்றுதான் - ரூ.666.
77 நாட்கள் என்கிற வித்தியாசமான வேலிடிட்டியும், ரூ.666 என்கிற ஒரே மாதிரியான விலை நிர்ணயமும் ஜியோவின் 3 மாத திட்டங்களை காலி செய்யுமா என்று கேட்டால்.. நிச்சயமாக இல்லை. ஏனென்றால் ஜியோவிடமும் கூட ரூ.666 க்கு ஒரு திட்டத்தை கொண்டுள்ளது. அது 84 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது.
சற்றே அதிக நாள் வேலிடிட்டியை வழங்குவதோடு சேர்த்து, ஜியோவின் ரூ,666 ஆனது ஏர்டெல்-ன் ரூ.666 மற்றும் வோடாபோன் ஐடியாவின் ரூ.666-ஐ போலவே டெய்லி 1.5ஜிபி டேட்டாவை (1.5GB Daily Data) வழங்குகிறது. ஆக எப்படி பார்த்தாலும் ஆப்பு ஜியோவின் 3 மாத திட்டங்களுக்கு அல்ல, ஏர்டெல் மற்றும் வோடாபோனின் ரூ,666 திட்டங்களுக்கு தான்!
ஒருவேளை நீங்களொரு ஏர்டெல் பயனர் என்றால், உங்களுக்கு ரூ,666-ஐ பற்றியும், அதன் நன்மைகளை பற்றியும் ஒன்றுமே தெரியாதென்றால்.. இதோ அதன் நன்மைகள்: 77 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்தின் கீழ் வரும் ரூ.666 ஆனது டெய்லி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.
ஏர்டெல் ரூ,666-ன் கீழ் அன்லிமிடெட் 5ஜி தரவு, அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Appollo 24/7 Circle), இலவச ஹெலோட்யூன்ஸ் (Helotunes) மற்றும் வின்க் ம்யூசிக் (Wynk Music) போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கும். மறுகையில் உள்ள வோடபோனின் ரூ.666-ஐ பொறுத்தவரை, இது டெய்லி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை வழங்குகிறது.
கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இது பிங்கே ஆல் நைட் (Binge All Night), வீகென்ட் டேட்டா ரோல்ஓவர் (Weekend Data Rollover), விஐ மூவீஸ் & டிவி (Vi Movies & TV) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) போன்றவைகளும் கிடைக்கும்.மேலும் வோடபோன் ஐடியா ஆப் வழியாக இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 5ஜிபி போனஸ் டேட்டாவை பெறுவதற்கான தகுதியும் உங்களுக்கு கிடைக்கும்.
வோடாபோன் ஐடியா நிறுவனமானது இன்னும் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தவில்லை என்பதால், ஏர்டெல் மற்றும் ஜியோவை போல வோடாபோனின் ரூ.666-ன் கீழ் உங்களால் 5ஜி வரம்பற்ற டேட்டா சலுகை எதையும் பெற முடியாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு காரணத்தினாலேயே ஏர்டெல்-ன் ரூ.666 திட்டமானது ஒருபடி மேல நிற்கிறது. இருப்பினும் அது ஜியோவின் ரூ.666 க்கு கீழே தான் நிற்கிறது!


Click it and Unblock the Notifications








