Home
News

ஏர்டெல்,வோடபோன் நிறுவனங்களுக்கு இப்படியொரு சோதனையா? 94லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.!

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் தொடர்ந்து சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் இந்நிறுவனம் தொடர்ந்து இலவச கால் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது, ஆனால் ஜியோ நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்கிறது.

ஏர்டெல், வோடபோன் ஐடியா

இந்த நிலையில் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் மே மாதத்தில் 56.11 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துஇருக்கின்றன. இதே காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக 36.5 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துஇருக்கிறது.

ஜியோ மட்டுமின்றி பிஎஸ்என்எல்

இதில் ஜியோ மட்டுமின்றி பிஎஸ்என்எல் நிறுவனமும் சுமார் 2லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் இறுதி வரை டெலிகாம் சந்தையில் வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 114,952கோடிகளில் இருந்து 114,391 கோடிகளாக சரிந்துள்ளது என மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.

வெளிவந்த டிராய் அறிக்கையின்படி

அன்மையில் வெளிவந்த டிராய் அறிக்கையின்படி பாரதி ஏர்டெல் நிறுவனம் 47.428லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா 47.263 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன. அதன்படி இரண்டு நிறுவனங்களும் கூட்டாக சுமார் 94லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

ஒப்பிடும் போது சற்று அதிகம் ஆகும். மேலும் ஏப்ர

இது ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது சற்று அதிகம் ஆகும். மேலும் ஏப்ரலில் இரண்டு நிறுவனங்களும் கூட்டாக75லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கியதுமுதல் முன்னணி நிறுவனங்கள் தொடர் சரிவை எதிர்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ரதி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில்

அன்மையில் பாரதி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் அடுத்த ஆறு மாதங்களில் மொபைல் கட்டண சேவை அதிகரிக்கும் எனவும் தற்போது இருக்கும் டேட்டாவின் விலை முறையானது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

1 மாதத்திற்கு 16 ஜிபி டேட்டாக்கு 2 டாலர் என்பது நி

பாரதி ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டல் கூறிய கருத்துகளை முழுவதுமாக பார்க்கலாம். தற்போதைய விலையில் டேட்டா உபயோகிக்கும் வாடிக்கையாளர்களே கூடுதல் தொகை செலுத்த தயாராகுங்கள். அமெரிக்கா அல்லது ஐரோப்பா போன்று 50-60 டாலர்கள் செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும் 1 மாதத்திற்கு 16 ஜிபி டேட்டாக்கு 2 டாலர் என்பது நிலையானது அல்ல என கூறினார்.

கட்டணத்தில் தரவுகள் வழங்குவது

குறைந்த கட்டணத்தில் தரவுகள் வழங்குவது என்பது தொலைத் தொடர்புத் துறைக்கு நிலையானவை அல்ல. ரூ.160-க்கு மாதத்திற்கு 16 ஜிபி டேட்டா என்பது வருந்தக் கூடியது என குறிப்பிட்டார். இந்த விலையில் மாதத்திற்கு 1.6 ஜிபி டேட்டா என்பதே சரி என குறிப்பிட்டார். டிஜிட்டல் உள்ளடக்க நுகர்வு மூலம் பயனரின் சராசரி வருவாய் ஏஆர்பியூ ரூ.200 வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்வுகள் உள்ளிட்டவைகள் பார்க்க விரும்பினால் அதற்கேற்ற இணைய சேவையை பெற வேண்டும் என கூறினார்.

Best Mobiles in India

English summary
Airtel and Vodafone Lost Many Subscribers in May : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X