Airtel டாப்பா இல்லைனா Vi டாப்பா..? ரூ.300 விலையின் கீழ் கிடைக்கும் பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டங்கள்..
டெலிகாம் துறையில் இப்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் மூலம் அதன் பயனர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாகப் பயனர்களும் குறைந்த விலையில் அதிக நன்மை எந்த நிறுவனத்திடமிருந்து கிடைக்கிறது என்பதை கவனித்துக் கொண்டே இருக்கின்றனர். இதனால் டெல்கோ நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நடைபெறுகிறது.

ஏர்டெல் vs வோடபோன் ஐடியா
அப்படியான வரிசையில் இப்போது ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் தனது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளப் பல நன்மைகளுடன் குறைந்த விலையில் புது புது திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதனால், இதன் பயனர்களுக்கு ஏகபோக லாபம் என்று தான் கூற வேண்டும்.

ரூ.300 க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம்
அப்படி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா Vi இடையே ரூ.300 க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். வோடபோன் ஐடியாவிடம் இருந்து கிடைக்கும் ரூ.299 திட்டத்தின் மூலம் உங்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டம் டபுள் டேட்டா திட்டம் என்பதனால் மொத்தமாக உங்களுக்கு 4ஜிபி டேட்டா கிடைக்கிறது. இத்துடன் அன்லிமிடெட் அழைப்பு, தினமும் 100 SMS கிடைக்கிறது.

Vi ரூ.299 திட்டத்தின் நன்மை
இந்த திட்டத்துடன் பயனர்களுக்குக் கூடுதல் நன்மைகளாக டேட்டா ரோல்ஓவரின் நன்மையும் உங்களுக்கு கிடைக்கிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்திற்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்தது தான் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம். இந்த திட்டத்தில் என்ன-என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.298 திட்ட நன்மைகள்
ஏர்டெல்லின் ரூ.298 திட்டம் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை தினமும் 100 SMS நன்மை ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இத்துடன் கூடுதல் நன்மையாக 20 நாட்களுக்கு அமேசான் பிரைம் மொபைல் சந்தா, FASTag வாங்கும்போது ரூ .150 கேஷ்பேக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் Wynk Music போன்ற நன்மைகளை நிறுவனம் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications