ஆறு மாதத்துக்குள் இது நடக்கும்: ஏர்டெல், விஐ பயனர்களே தயாராக இருக்கவும்!

|

ஏர்டெல் மற்றும் விஐ போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலை சமீபத்தில் அதிகரித்தபோதிலும், தற்போது நிறுவனங்கள் மற்றொரு விலை ஏற்றத்துக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இரண்டு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் தங்களின் போஸ்ட்பெஸ்ட் திட்ட விலையை சமீபத்தில் அதிகரித்தனர்.

ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தையும் அதிகரிக்கலாம்

ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தையும் அதிகரிக்கலாம்

அடுத்த ஆறு மாதங்களில் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா தங்களது திட்டங்களின் விலையை அதிகரித்தால் இது எந்தளவு சாதுர்ய முடிவு என தெரியவில்லை. காரணம் ரிலையன்ஸ் ஜியோ குறைந்த அளவில் பல சலுகைகளை வழங்கி இந்தியாவில் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்டெல், விஐ விலை அதிகரிப்பு என்பது எந்தளவிற்கு அதன் பயனர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

அடுத்தடுத்து நிறுவனங்கள் விலை உயர்வை அதிகரிக்கும்

அடுத்தடுத்து நிறுவனங்கள் விலை உயர்வை அதிகரிக்கும்

இருப்பினும் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்த பிறகோ அல்லது அதற்கு முன்பாகவோ ரிலையன்ஸ் ஜியோவும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் நிறுவனம் விலை உயர்வை அறிவித்தாலும் விஐ, ஏர்டெல் திட்டங்களின் விலையை விட குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் விஐ போன்ற நிறுவனங்கள் பயனர்களை இழக்கும் நிலை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

போட்டிப் போட்டுக் கொண்டு வழங்கப்படும் சலுகைகள்

போட்டிப் போட்டுக் கொண்டு வழங்கப்படும் சலுகைகள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். ஜியோ அறிமுகத்துக்கு பிறகு பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் சவாலை சந்தித்து வருகிறது என்றே கூறலாம். இதற்கிடையில் டெலிகாம் கட்டணங்களை உயர்த்துவது குறித்து ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் பேசியுள்ளார்.

ஏர்டெல் நிறுவன தலைவர்

ஏர்டெல் நிறுவன தலைவர்

இதுகுறித்து ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் தெரிவிக்கையில், ஏர்டெல் நிறுவனத்திற்கு ஒரு வாடிக்கையாளர்களிடம் கிடைக்கும் சராசரி வருமானம் 220-230 ரூபாய் (ஏஆர்பியூ) ஆக இருந்தது. ஜியோ வருகைக்கு பிறகு டெலிகாம் துறையின் ஏஆர்பியூ அளவீடு ரூ.130 ஆக இருக்கிறது. இந்த வருமானம் என்பது ஏறக்குறைய ஆறு வருடத்திற்கு முந்தைய அளவீடு என தெரிவித்தார்.

இது ஒருதலைபட்சமாக இருக்காது

இது ஒருதலைபட்சமாக இருக்காது

இதையடுத்து ரீசார்ஜ் திட்டத்தின் கட்டணத்தை உயர்த்த ஏர்டெல் தயங்காது என தெரிவித்த சுனில் மிட்டல் இது ஒருதலைபட்சமாக இருக்காது என குறிப்பிட்டார். டெலிகாம் தொழில் மிக மன அழுத்தத்தில் இருக்கிறது. தொலைத் தொடர்பு கட்டணங்கள் உயர வேண்டும் எனவும் இதற்கு ஏர்டெல் தயங்காது எனவும் மிட்டல் கூறினார். தொலைத் தொடர்பு துறை சிக்கலில் இருக்கிறது எனவும் இதனால் நாங்கள் சரியவில்லை மிகவும் வலுவாக இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் போட்டி

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் போட்டி

அதுமட்டுமின்றி பத்து ஆபரேட்டர்கள் தொழில் இருந்து வெளியேறிவிட்டனர், இரு நிறுவனம் ஒன்றிணைந்துவிட்டது எனவும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிலையை எடுத்துக் கூறினார். பல மாதங்களாகவே தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்ட விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விரைவில் கட்டணங்கள் உயர்த்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel and Vodafone Idea May Increase Recharge Plans Price With in Six Months

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X