குறுக்க இந்த கௌசிக் வந்தா?- முதலில் அறிமுகம் செய்யும் Jio, Airtel., சைலண்டா இருக்கும் ஒரு நிறுவனம்!

|

இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகமாக இருக்கிறது. சுதந்திர தின உரையில், 5ஜி-க்காக காத்திருந்தது போதும் இந்தியாவில் விரைவில் 5ஜி அறிமுகமாகும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அதேபோல் செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் அடுக்கு-1 நகரங்களில் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் என மத்திய டெலிகாம் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தினார்.

எந்த நிறுவனம் ஆதிக்கம் செலுத்தும்?

எந்த நிறுவனம் ஆதிக்கம் செலுத்தும்?

5ஜி சேவை விரைவில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5ஜி அறிமுகமாகும் பட்சத்தில் உடனே இந்த சேவை நாடு முழுவதும் கிடைத்துவிடுமா என்றால் அதுதான் இல்லை.

படிப்படியாக தான் நாடு முழுவதும் அறிமுகமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாகும் பட்சத்தில் அது எந்த நிறுவனம் அறிமுகம் செய்யும், 5ஜி சேவையில் எந்த நிறுவனம் ஆதிக்கம் செலுத்தும் என்ற கேள்விக்கான பதிலை பார்க்கலாம்.

முதல் மூன்று இடங்களின் பட்டியல் இதோ

முதல் மூன்று இடங்களின் பட்டியல் இதோ

இந்தியாவில் தற்போது வரை அதிக வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் இருப்பது ஜியோ. இரண்டாவது இடத்தில் ஏர்டெல் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் தான் விஐ இருக்கிறது.

இதே நிலை தான் 5ஜி சேவையிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் ஜியோ 5ஜி சேவையில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. ஜியோ நிறுவனம் தான் இந்த துறையில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகளவு முதலீடு செய்தது யார்?

அதிகளவு முதலீடு செய்தது யார்?

ஜியோ ரூ.88,078 கோடி செலவழித்து 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் என மொத்தம் 24.7 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை பெற்றிருக்கிறது.

ரிலையனஸ் ஜியோவை தொடர்ந்து பாரதி ஏர்டெல் ரூ.43,085 கோடி முதலீடு செய்து 19,867MHz ஸ்பெக்ட்ரமை பெற்றிருக்கிறது.

அதேபோல் வோடபோன் ஐடியா (விஐ) ரூ.18,784 கோடி முதலீடு செய்து 2,668MHz ஸ்பெக்ட்ரமை பெற்றிருக்கிறது.

PAN India 5G நெட்வொர்க்

PAN India 5G நெட்வொர்க்

இந்த முதலீடு தொகையை வைத்தே கணித்துவிடலாம். யார் ஆதிக்கம் செலுத்துவார் என்று.

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் PAN India 5G நெட்வொர்க்கை தொடங்குவதற்கான ஆதாரங்களைக் கொண்டிருக்கின்றன.

வோடபோன் ஐடியா (Vi), 5G டொமைனில் ஏர்டெல் மற்றும் ஜியோவை விட பின்தங்கியிருக்கும் என கணிக்கப்படுகிறது.

5ஜி வேகம் எப்படி இருக்கும்?

5ஜி வேகம் எப்படி இருக்கும்?

ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி அறிமுகம் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் 5ஜி-க்கு இவ்வளவு எதிர்பார்ப்பு ஏன் என்ற கேள்வி வரும். காரணம் 5ஜி சேவையின் வேகமானது 4ஜி வேகத்தை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

எந்தெந்த பகுதிகளில் வெளியாகும்?

எந்தெந்த பகுதிகளில் வெளியாகும்?

படிப்படியாக அறிமுகமாகும் என குறிப்பிட்டால் ஆரம்பரத்தில் எந்தெந்த பகுதிகளில் வெளியாகும் என்ற கேள்வி வரலாம்.

ஆரம்பக்கட்டமாக பெங்களூரு, சண்டிகர், காந்திநகர், அகமதாபாத், குருகிராம், மும்பை, புனே ஹைதராபாத், சென்னை, ஜாம்நகர், கொல்கத்தா மற்றும் லக்னோ போன்ற 12 நகரங்களில் 5ஜி சேவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடுவுல இந்த கௌசிக் வந்தா?

நடுவுல இந்த கௌசிக் வந்தா?

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் இந்த பட்டியலில் கடைசியாக வந்து இணைந்தது அதானி குழுமம்.

5ஜி சேவையில் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் நிறுவனம் ரூ.212 கோடி முதலீடு செய்து ஸ்பெக்ட்ரமை விலைக்கு வாங்கியது.

டெலிகாம் துறையில் நுழைந்துள்ள அதானி நிறுவனம் 26 Ghz அளவிலான 5ஜி ஸ்பெக்டர்த்தை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த போட்டியில் அதானி குழுமம் உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

அதானி குழுமத்தின் திட்டம் என்ன?

அதானி குழுமத்தின் திட்டம் என்ன?

ஜியோ, ஏர்டெல் திட்டமாவது கணித்துவிட முடிகிறது. அதானி குழுமத்தின் முழுமையான திட்டம் என்ன என்பதே முழுமையாக தெரியவில்லை. இதுவே ஜியோ, ஏர்டெல்லுக்கு பெரிய தலைவலியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

5ஜி நெட்வொர்க் சோதனை

5ஜி நெட்வொர்க் சோதனை

ஏர்டெல் மற்றும் ஜியோ இந்தியாவில் விரைவில் 5ஜி சேவையை தொடங்கும் என்பது ஏரத்தாள முடிவு செய்யப்பட்டு விட்டது. ஜியோ அதற்கான சோதனைகளையும் தொடங்கி நடத்தி வருகிறது.

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) இல் 5ஜி நெட்வொர்க்கை ஜியோ சோதனை செய்தது.

இந்த சோதனையில், ஜியோ 5ஜி இன் உச்ச பதிவிறக்க வேகம் 1.45Gbps ஆக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 65Mbps பதிவேற்ற வேகத்தையும் பதிவு செய்திருக்கிறது. 1.45Gbps பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel and Jio will lead India's 5G era: What about Adani's Plan?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X