உங்கள நம்பி 5G போன் வாங்குனதுக்கு.. நல்லா வச்சி செஞ்சிட்டீங்க! கதறும் Jio, Airtel வாசிகள்! ஏன்?

|

"சிங்கம் களம் இறங்கிடுச்சு!" என்கிற அளவுக்கு கொடுக்கப்பட்ட ஓவர்-பில்ட் அப்பில் சிலிர்த்துப்போய் சில்லறைகளை விட்டெறிந்து.. அவசர அவசரமாக ஒரு 5G ஸ்மார்ட்போனை வாங்கி விட்டீர்களா?

ஆம் என்றால் இந்த கட்டுரை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்!

சொல்லி வைத்தது போல...

சொல்லி வைத்தது போல...

கடந்த சில வாரங்களாக, ரிலையன்ஸ் ஜியோ (Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், சொல்லி வைத்தது போல ஒரே தவறை செய்துள்ளனர்.

அதென்ன தவறு? அதை நீங்களும் செய்து உள்ளீர்களா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஒரே உற்சாகம் தான்!

ஒரே உற்சாகம் தான்!

நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்கிற தேவையே இல்லை!

கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் பயனர்களும் 5ஜி அறிமுகம் மற்றும் 5ஜி வருகை குறித்து மிகவும் உற்சாகமாக உள்ளனர்.

கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த "அடேங்கப்பா" வேலை!

வந்தது போக.. மரண வெயிட்டிங் வேற!

வந்தது போக.. மரண வெயிட்டிங் வேற!

இவ்விரு நிறுவனங்களின் 5ஜி சேவைகள் ஆனது ஏற்கனவே பல நகரங்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது.

மேலும் நாடு முழுவதும் உள்ள மற்ற பயனர்களும் கூட, தங்கள் ஊர்களில், தங்கள் நகரங்களில் எப்போது 5ஜி அறிமுகமாகும் என்று மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

ஒருபக்கம் டிசம்பர்.. இன்னொரு பக்கம் மார்ச்!

ஒருபக்கம் டிசம்பர்.. இன்னொரு பக்கம் மார்ச்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அடுத்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதுமான 5G சேவையை வழங்கும் என்று கூறுகிறது.

அதே நேரத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனமானது, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவின் மூலைமுடுக்கெங்கும் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்து இருப்போம் என்று உறுதி அளித்துள்ளது.

கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!

உற்சாகத்தால் உருவான பரபரப்பு!

உற்சாகத்தால் உருவான பரபரப்பு!

5ஜி அறிமுகம் மற்றும் 5ஜி வருகை தொடர்பான உற்சாகமானது இந்தியாவில் ஒருவகையான பரபரப்பை உருவாக்கி உள்ளது.

அதாவது - இனிமேல் எல்லாமே 5ஜி தான்.. 4ஜி நெட்வொர்க்கின் கதையும், 4ஜி ஸ்மார்ட்போன்களின் கதையும் முடிந்து விட்டது.. காசு இல்லை என்றாலும் கூட EMI போட்டாவது ஒரு 5ஜி போனை வாங்கியே ஆக வேண்டும்.. என்கிற பரபரப்பு உருவாகி உள்ளது!

நொந்து நூடூல்ஸ் ஆன 4ஜி போன் பயனர்கள்!

நொந்து நூடூல்ஸ் ஆன 4ஜி போன் பயனர்கள்!

5ஜி நெட்வொர்க்கின் புகழ் பாடும் (ஜியோ மற்றும் ஏர்டெல்) வாடிக்கையாளர்கள் ஒருபக்கம் இருக்க, மறுகையில் உள்ள சில 4ஜி பயனர்கள்.. "5ஜி வேணும்னு இப்போ யாரு கேட்டா? ட்ரூ 5ஜி, 5ஜி பிளஸ்னு சொல்லி.. ஏன்டா எங்க உயிரை வாங்குறீங்க!" என்று செம்ம கடுப்பில் உள்ளனர்!

ஏனென்றால், தற்போதைக்கும் அடுத்த சில மாதங்களுக்கும், 4G ஸ்மார்ட்போன்களையும், 4ஜி சேவைகளையும் மட்டுமே பயன்படுத்த போகும் சில வாடிக்கையாளர்கள் "ஒதுக்கப்பட்டவர்களை" போல உணரலாம்.

தங்களின் 4ஜி போன் நன்றாக வேலை செய்யும் போது கூட, 5ஜி போன் ஒன்றை வாங்கியே ஆகவேண்டும் என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்படலாம்!

இது தெரிஞ்சதும் Settings-க்கு போவீங்க! இந்த 5 சீக்ரெட் அம்சங்களும் சில போன்களில் மட்டுமே கிடைக்கும்!இது தெரிஞ்சதும் Settings-க்கு போவீங்க! இந்த 5 சீக்ரெட் அம்சங்களும் சில போன்களில் மட்டுமே கிடைக்கும்!

ஆர்வ கோளாறுல

ஆர்வ கோளாறுல "அதை" மட்டும் செஞ்சிடாதீங்க!

5ஜி ஸ்மார்ட்போன் இல்லையே என்று கவலைப்படும் பயனர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால்.. அந்த கவலையையும், 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் அடியோடு மறந்து விடுங்கள்!

ஏனென்றால், இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கூட 5G சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட, அது அடுத்த பல ஆண்டுகளாக 4ஜி சேவைகளை துளியும் தொந்தரவு செய்யாது!

அவசரப்பட்டால்.. அவஸ்தை படணும்!

அவசரப்பட்டால்.. அவஸ்தை படணும்!

இந்தியாவிற்கான 5ஜி வெளியீடு படிப்படியாகவே நடக்கும். ஒரு முழு நகரத்தையும் 5ஜி சேவைகளை கொண்டு "மூடுவதற்கு" ஒவ்வொரு டெலிகாம் நிறுவனங்களுக்கும் பல ஆண்டுகள் தேவைப்படும்.

எனவே, உங்களிடம் 5ஜி போன் இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிடத்தக்க காலத்திற்கு அது ஒரு விஷயமாக இருக்காது. அதற்குள் உங்களுடைய லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பழைய 5ஜி போன் ஆகிவிடும்.

அந்த நேரத்தில், "அடச்சே.. எதற்காக அவசர அவசரமாக ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கினோமோ?" என்று நீங்களே வருத்தப்பட்டாலும் கூட அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை!

25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!

பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே 5ஜி.. வாடிக்கையாளர்களுக்கு அல்ல!

பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே 5ஜி.. வாடிக்கையாளர்களுக்கு அல்ல!

இந்தியாவில் அறிமுகமாகும் 5ஜி சேவைகள் ஆனது யாருக்கெல்லாம் உடனடியாக தேவைப்படும், யாருக்கெல்லாம் உடனடியாக பலனளிக்கும் என்று கேட்டால் - தற்போதைக்கு அது பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும்.

வாடிக்கையாளர்களை பொறுத்தவரை, இன்னும் பல மாதங்களுக்கு 4ஜி நெட்வொர்க்குகள் மட்டுமே போதுமானதாக இருக்கும்!

மார்க்கெட்டிங் மாயாஜாலத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம்!

மார்க்கெட்டிங் மாயாஜாலத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம்!

தெருவோரத்தில் உள்ள மொபைல் ரிப்பேர் கடைகளில் இருந்து யூட்யூப் விளம்பரங்கள் வரை எங்கு பார்த்தாலும் 5ஜி என்கிற வார்த்தையை பார்க்கவும், கேட்கவும் முடிகிறது என்பதால், அதில் உங்கள் பங்கும் இருக்க வேண்டும் என்கிற எந்த அவசியமும் இங்கு இல்லை!

நன்றாக புரிந்துகொள்ளவும். அது முழுக்க முழுக்க - 5G நெட்வொர்க் தொடர்பான மார்க்கெட்டிங் ஆகும். அதில் சிக்கிக்கொள்ள வேண்டாம். அதுமட்டுமின்றி அடுத்த சில மாதங்களுக்கு நீங்கள் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டிய தேவையே இல்லை என்பதற்கான 3 நியாயமான காரணங்களும் கூட எங்களிடம் உள்ளன.

நரகம் இப்படி தான் இருக்குமோ? தங்கத்தை நரகம் இப்படி தான் இருக்குமோ? தங்கத்தை "உருக்கும்" புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

முதல் காரணம் - 5ஜி நெட்வொர்க்கின் கவரேஜ்!

முதல் காரணம் - 5ஜி நெட்வொர்க்கின் கவரேஜ்!

முன்னரே குறிப்பிட்டபடி, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் 5ஜி சேவைகள் கிடைக்க, இன்னும் ஓரிரு வருடங்கள் ஆகும். எனவே "யாருமே இல்லாத கடைக்கு.. யாருக்கு டா டீ ஆத்துற" என்பது போல.. உங்கள் ஊரில் எப்போது 5ஜி சேவைகள் அறிமுகமாகும் என்கிற தெளிவே இல்லாமல் 5ஜி போன் ஒன்றை வாங்கி விடாதீர்கள்!

இரண்டாவது காரணம் 5ஜி போன்களின்

இரண்டாவது காரணம் 5ஜி போன்களின் "தற்போதைய" விலை!

பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், இனிமேல் தான் தங்களின் பட்ஜெட் விலையிலான 5ஜி ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கவே உள்ளன.

இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் அடுத்த 4 மாதங்களில் ரூ.15,000 க்குள் வாங்க பல எண்ணிக்கையிலான 5ஜி போன்கள் இங்கே அறிமுகமாகி இருக்கும்!

வெயிட் பண்ணா.. 2 நல்லது  நடக்கும்!

வெயிட் பண்ணா.. 2 நல்லது நடக்கும்!

எனவே - அவசர அவசரமாக - ரூ.20,000 க்கு மேலான விலை நிர்ணயங்களை கொண்ட 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இருந்தால்.. பணத்தையும் மிச்சம் செய்யலாம்; லேட்டஸ்ட் 5ஜி போன்களையும் வாங்கலாம்!

"இதை" உடனே டெலிட் செஞ்சிட்டா உங்க Phone-க்கு நல்லது.. இல்லனா? வார்னிங் கொடுக்கும் Google!

மூன்றாவது காரணம் - உங்க 4ஜி போனுக்கு என்ன குறைச்சல்?

மூன்றாவது காரணம் - உங்க 4ஜி போனுக்கு என்ன குறைச்சல்?

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் இருந்தே சொல்வது போல.. 5ஜி அறிமுகத்தின் விளைவாகவே 4ஜி சேவைகளை குறைத்து மதிப்பிடவே கூடாது.

அடுத்த 4 - 5 ஆண்டுகளுக்கு இல்லை என்றாலும் கூட, அடுத்த 1 - 2 ஆண்டுகள் வரை 4ஜி ஸ்மார்ட்போன்கள் ஆனது சக்திவாய்ந்த டிவைஸ்களாகவே இருக்கும்; ஒப்பீட்டளவில் அதற்கு எந்த குறைச்சலும் இருக்காது!

Best Mobiles in India

English summary
Airtel and Jio users need to stop doing this mistake related to 5G network due to over excitement

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X