Just In
- 1 hr ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 1 hr ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 1 hr ago
உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க
- 4 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
Don't Miss
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- News
தீய சக்தி திமுகவை வீழ்த்த வலிமையான அதிமுக..ஓபிஎஸ் இபிஎஸ் ஒற்றுமை அவசியம்..சொல்கிறார் சி.டி.ரவி
- Finance
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க.. இனியும் குறையுமா?
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Movies
சிம்பு பிறந்தநாளில் வெளியான சிறப்பு போஸ்டர்கள்.. குவியும் வாழ்த்துக்கள்!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
டூயல் சிம் பயனர்களுக்கு விழுந்த பேரிடி.! பாதிக்கப்படப் போகும் வாடிக்கையாளர்கள்.! என்னாச்சு?
இந்தியா விரைவில் ப்ரீபெய்டு பிரிவில் பாரிய கட்டண உயர்வை சந்திக்க உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும்பாலும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் கட்டண உயர்வை அமல்படுத்துவதை ஒரு பழக்கமாக மாற்றிவிட்டன. நாம் இப்போது நவம்பர் இறுதியை நெருங்கிவிட்டோம். உங்களிடம், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), பிஎஸஎன்எல் (BSNL), விஐ (Vi) என்று எது இருந்தாலும் இந்த விஷயத்தை அறிந்துகொள்ளுங்கள்.

ஏர்டெல் செய்த தீடீர் மாற்றம்.! கடுப்பில் வாடிக்கையாளர்கள்.!
ஏர்டெல் ஏற்கனவே ஹரியானா மற்றும் ஒடிசா ஆகிய இரண்டு வட்டங்களில் சிறிய அளவிலான கட்டண உயர்வைச் செயல்படுத்தியுள்ளது. இந்த பகுதிகளில் செயல்பாட்டில் இருந்த குறைந்த விலை ரீசார்ஜ் திட்டமான ரூ.99 திட்டம் நீக்கப்பட்டுள்ளது. இப்போது, புதிய குறைந்த விலை ரீசார்ஜ் திட்டமாக ரூ. 155 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை பெரும் பகுதியான வாடிக்கையாளர்கள் விரும்பப்போவதில்லை.

டூயல் சிம் பயன்படுத்துவோரின் நிலைமை மோசமாகப் போகிறது.!
ஆனால், எல்லா தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒரே மாதிரியான கட்டணத்துடன் முன்னோக்கிச் சென்றால், வரும் காலத்தில் வாடிக்கையாளர்களால் உண்மையில் எதுவும் செய்ய முடியாது.
அதிலும், குறிப்பாக டூயல் சிம் பயன்படுத்துவோரின் நிலைமை நிச்சயமாக மோசமாகப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த சமீபத்திய விலை உயர்வு 57% கட்டண உயர்வு என்று ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் மதிப்பிட்டுள்ளது.

விலை உயர்வுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா? 57% -ஆ அதிகரிப்பீங்க.!
உயர்-அடுக்கு ப்ரீபெய்ட் திட்டங்களில் உள்ள பயனர்கள் கட்டணங்களில் இவ்வளவு அதிக சதவீத உயர்வைக் காண்பது மிகவும் குறைவு. கடந்த முறை போலவே, உயர் அடுக்கு திட்டங்களும் 20% முதல் 25% வரை உயர்வைக் காணலாம் (கடைசி கட்டண உயர்வின் அடிப்படையில் அனுமானம்) என்று கூறப்பட்டுள்ளது. ரூ.99 திட்டத்திலிருந்து இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ. 155 திட்டத்தின் அடிப்படையில் பார்த்தால், விலை உயர்வு 57% உயர்வைக் காட்டுகிறது.

திடீர் விலை உயர்வுகளால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?
நாட்டில் ப்ரீபெய்டு கட்டண உயர்வு என்பது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சராசரி வருவாயும் (ARPU) அவர்களின் ஒட்டுமொத்த வருவாயும் கணிசமாக உயரும் என்று அர்த்தம். இதைப் பற்றி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) நிறையப் பேசியுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களால் விதிக்கப்படும் திடீர் விலை உயர்வுகளால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று பார்க்கும் போது, மீண்டும் வாடிக்கையாளர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

மக்கள் இனி 2 ஆம் சிம் கார்டை பயன்படுத்தமாட்டார்களா?
குறிப்பாக இந்தியர்கள் டூயல் சிம் கார்டுகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் இனி அதிகமாகப் பாதிக்கப்படப் போகிறார்கள்.
காரணம், இனி உங்களுடைய இரண்டாம் நிலை சிம் கார்டை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள நீங்கள் ரூ.99 விலைக்கு மேல் செலவு செய்ய வேண்டியதுள்ளது.
இதனால், எதிர்காலத்தில், இந்தியர்கள் தங்கள் இரண்டாம் நிலை சிம் கார்டுகளை விட்டுவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் 'இந்த' முடிவிற்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்
ஏனெனில் அவற்றைச் செயலில் வைத்திருப்பதற்கான செலவு அதிகரிக்கும் போது, வாடிக்கையாளர்கள் ரூ.155 செலுத்தி அவற்றைச் செயல்பாட்டில் வைத்திருப்பதற்குப் பதிலாக அவற்றை நீக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஏர்டெல் விலை ஏற்றத்திற்குப் பிறகு, ஏர்டெல்லை 2 ஆம் சிம் ஆக பயன்படுத்துவோர் இந்த முடிவிற்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ரீசார்ஜ் செய்வதை கூட வாடிக்கையாளர்கள் நிறுத்திவிடுவார்களா?
கடந்த முறை ப்ரீபெய்ட் கட்டண உயர்வுகள் செயல்படுத்தப்பட்டபோது, அது தொழில்துறையை சிம் ஒருங்கிணைப்பு கட்டத்திற்கு அனுப்பியது, அங்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிக சந்தாதாரர் ஆதாயங்களை இழந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.
இம்முறையும் அதுவே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் நிலை சிம் கார்டுகளை இப்போது செயலில் வைத்திருக்க முடியாத பெரும்பாலான நுகர்வோர் அவற்றை ரீசார்ஜ் செய்வதை நிறுத்திவிடுவார்கள்.

டூயல் சிம் மீது மக்களுக்கு இருக்கும் ஆசை குறையுமா?
இனி பெரும்பாலான மக்கள், ஒற்றை சிம் கார்டுகளை வைத்து அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய காலம் போல, இனி வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு விருப்பமான ஒரு சிம் கார்டை மட்டும் செயல்பாட்டில் வைத்திருக்க முயல்வார்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும், நுகர்வோர் இப்போது இரண்டு சிம் கார்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட பசியைக் கொண்டுள்ளனர்.

இறுதியாக உண்மை இது தான்.!
இதனால், கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட கட்டண உயர்வை நுகர்வோர் ஏற்றது போல் இந்த முறையும் நடைபெறலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஆனால், இதற்குச் சாத்தியம் மிகக் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.
காரணம், ரூ.155 செலவில் ஒரு சிம் கார்டை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இங்குப் பெரும்பாலானோருக்குத் தேவையில்லை. குறிப்பாக இந்த ரூ.155 அடிப்படை திட்டம் அவ்வளவு சிறந்த நன்மைகளை வழங்கப்போவதில்லை என்பதே உண்மையாகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470