Home
News

ஒரே பிளானில் 2 ஓடிடி ஆஃபர்.. Jio vs Airtel.. ரூ.500 பிளானில் யாரு பெஸ்ட்!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் (Telecom) நிறுவனங்களான ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோவில் (Jio) பல்வேறு ரீசார்ஜ் பிளான்கள் (Recharge Plans) இருந்தாலும், ரூ.500-க்கும் கீழான போஸ்ட்பெய்ட் பிளான்களில் வழங்கப்படும் சலுகைகள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் இருக்கிறது.

இந்த ரூ. 500 ரீசார்ஜ் பிளானில், எந்த டெலிகாம் நிறுவனம் சிறந்த சலுகைகளை வழங்குகிறது என்று பார்க்க போகிறோம். நாடு முழுவதும் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக்கொண்டு 5ஜி (5G) சேவைகளை வழங்கி வருகின்றன. இப்போது பெரும்பாலான நகரங்களில் 5ஜி சேவைகள் கிடைக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரையில் 5ஜி சேவை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரே பிளானில் 2 ஓடிடி ஆஃபர்.. Jio vs Airtel.. ரூ.500 பிளானில் யாரு மாஸ்

ஆகவே, இப்போதிலிருந்தே வாடிக்களையாளர்களை கவர ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் மலிவான விலையில் பல்வேறு சலுகைகள் கொண்ட ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் (Prepaid and Postpaid Recharge Plans) மற்றும் பிராட்பேண்ட் ஃபைபர் பிளான்களை (Broadband Fiber Plans) அறிமுகப்படுத்தி வருகின்றன.

அந்த வரிசையில், ஏர்டெல் மற்றும் ஜியோவில் வழங்கப்படும், 500 ரூபாய்க்கு கீழ் உள்ள போஸ்ட்பெய்ட் பிளான்களில் எவ்வளவு சலுகைகள் கொடுக்கப்படுகின்றன என்பதை ஒப்பிட்டு பார்க்கப்போகிறோம். ரூ. 500 -க்கும் குறைவான ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பிளான்களில் ரூ.399 மற்றும் ரூ.499 ஆகிய 2 பிளான்களும், ஜியோ போஸ்ட்பெய்ட் பிளான்களில் ரூ.299 மற்றும் ரூ.399 பிளான்களும் உள்ளன.

ஏர்டெல் ரூ.399 போஸ்ட்பெய்ட் பிளான் விவரங்கள் (Airtel Rs 399 postpaid plan details): இதுவொரு மாதாந்திர பிளானாகும். ஒரு மாதத்துக்கு 40ஜிபி டேட்டா (40 GB data), அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்ஸ் (Local, STD and Roaming), நாளொன்றுக்கு 100 எம்எம்எஸ் ஆகிய சலுகைகள் உள்ளன. இதில் ஓடிடி சப்கிரிப்ஷன் (OTT Subscriptions) கிடையாது.

ஏர்டெல் ரூ.499 போஸ்ட்பெய்ட் பிளான் விவரங்கள் (Airtel Rs 499 postpaid plan details): இதுவுமொரு மாதாந்திர திட்டமாகும். ஒரு மாதத்துக்கு 75 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்ஸ் (Local, STD and Roaming), நாளொன்றுக்கு 100 எம்எம்எஸ் சலுகை உள்ளது.

6 மாதங்களுக்கு அமேசான் பிரைம் (Amazon Prime) சப்கிரிப்ஷன், 1 வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் ( Disney+ Hotstar Mobile) சப்கிரிப்ஷன், ஏர்டெர் வின்க் பிரீமியம் (Airtel Wynk Premium), ஹெட்செட் புரெட்க்ஷன் சர்வீஸ் (Handset Protection Service) வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ.299 போஸ்ட்பெய்ட் பிளான் விவரங்கள் (Jio Rs 299 postpaid plan details): இந்த மாதாந்திர திட்டத்தில் 30 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்ஸ் (Local, STD and Roaming), ஜியோ (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ செக்யூரிட்டி (JioSecurity), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவை வழங்கப்படுகின்றன. நீங்கள் 5ஜி போன் வைத்திருந்தால், இந்த பிளான் வேலிடிட்டி வரையில் அன்லிமிடெட் 5ஜி சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

ஜியோ ரூ.399 போஸ்ட்பெய்ட் பிளான் விவரங்கள் (Jio Rs 399 postpaid plan details): இந்த மாதாந்திர திட்டத்தில் 75 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்ஸ் (Local, STD and Roaming), ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் (SMS), இந்த திட்டத்தை 3 ஃபேமிலி ஜியோ பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜியோ (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ செக்யூரிட்டி (JioSecurity), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவை உள்ளன. 5ஜி போனுடன் அன்லிமிடெட் 5ஜி சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இந்த பிளான்களில் எது சிறந்தது என்று நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel and Jio postpaid plans under Rs 500 which is the best for Data, calling, SMS and other compared
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X