ஜியோ, ஏர்டெல்.. ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்.. OTT.. இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க.. ஏன்?
ஏர்டெல் (airtel) மற்றும் ஜியோ (jio) நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு புதிய புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிக் கொண்டே இருக்கின்ற. அதுவும் கடந்த சில மாதங்களில் இந்த இரண்டு நிறுவனங்களும் பட்ஜெட் விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. அதேபோல் இன்று கூட ஏர்டெல் நிறுவனம் புதிய ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் இன்று தான் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் ஏற்கனவே ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது இந்த இரண்டு நிறுவனங்களும் ரூ.399 திட்டத்தில் என்னென்ன சலுகைகள் வழங்குகின்றன மற்றும் எதை தேர்வு செய்வது நல்லது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ( Airtel Rs 399 Plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 70ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் 28 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் (Jio Hotstar Mobile subscription) இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பெறமுடியும் என்பதை கவனத்தில் கொள்க.
ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 399 Plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொதம் 70ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் (Jio Hotstar subscription) இந்த ஜியோ திட்டத்தில் கிடைக்கிறது.

தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud)உள்ளிட்ட நன்மைகள் இந்த ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.
எது சிறந்தது? ஏர்டெல் மற்றும் ஜியோ வழங்கும் ரூ.399 திட்டங்கள் ஒரே மாதிரியான வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மையை வழங்குகின்றன. ஆனால் ஏர்டெல் நிறுவனம் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), ஹாட்ஸ்டார் சந்தா நன்மையை வழங்குகிறது. அதேபோல் ஜியோ நிறுவனமும் ஹாட்ஸ்டார் சந்தா, ஜியோ ஏஐ கிளவுட் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. கிட்டத்தட்ட இந்த இரண்டு நிறுவனங்களின் திட்டங்களும் அதிக நன்மைகளை வழங்குகிறது. எனவே ஏர்டெல் மற்றும் ஜியோ வழங்கும் ரூ.399 திட்டங்கள் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








