Home
News

ஏர்டெல், ஜியோ வழங்கும் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்.. இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க.. ஏன்?

ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளன.

அதேபோல் இந்த இரண்டு நிறுவனங்களும் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. இந்த திட்டங்களில் எந்த நிறுவனம் அதிக சலுகைகளை வழங்குகிறது மற்றும் எதைத் தேர்வு செய்வது நல்லது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல், ஜியோ வழங்கும் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்.. சிறந்தது எது?

ஜியோ நிறுவனத்தின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 349 Prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த ஜியோ திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்.

அதேபோல் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா (JIOHOTSTAR) வழங்குகிறது ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன. அதன்படி தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். பின்பு ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) வழங்குகிறது இந்த திட்டம்.

ஏர்டெல் ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 349 Prepaid plan) தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஏர்டெல் ரூ 349 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 42ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

அதாவது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

எதை தேர்வு செய்வது நல்லது? ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தை விட ஜியோவின் ரூ.349 திட்டம் அதிக சலுகைகளை வழங்குகிறது. அதாவது ஜியோ திட்டம் 90 நாட்களுக்கு ஓடிடி சந்தா, அதிக டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. எனவே ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

அதேபோல் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கடந்த ஆண்டு தான் ப்ரீபேய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. ஆனால் சமீபத்தில் வெளியான தகவலின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்த இந்த இரண்டு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel and Jio offer Rs 349 recharge plans: Which one is better?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X