1 ரீசார்ஜ் பிளான் 15 OTT இலவசம்.! இனி தனியா OTT சந்தா வாங்காதீங்க.! இந்த Airtel & Jio பிளானை பாருங்க.!

|

Airtel & Jio OTT benefit broadband prepaid plans: டெலிகாம் ஆபரேட்டர்கள் தினசரி டேட்டா, அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் பலன்களை வழங்க பல்வேறு ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்ட் மொபைல் திட்டங்களை வழங்குகிறார்கள்.

ஆனால் இந்த மொபைல் திட்டங்கள் எப்போதும் போதுமானதாக இல்லை. குறிப்பாக வீட்டிலிருந்து பணிபுரியும் பயனர்களுக்கு, அல்லது HD தரத்தில் டிவி ஷோக்களை ஸ்ட்ரீமிங் செய்யும் நபர்களுக்கு டேட்டா என்பது எப்போதுமே போதுமானதாக இல்லை.

இனி தனியா OTT சந்தா வாங்காதீங்க.! இந்த பிளான்களை பாருங்க.!

இனி தனியா OTT சந்தா வாங்காதீங்க.! இந்த பிளான்களை பாருங்க.!

இப்படி, டேட்டா பற்றாக்குறையைச் சந்திக்கும் பயனர்களுக்காக Airtel மற்றும் Jio ஆகிய பயனர்கள் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது.

அன்லிமிடெட் டேட்டாவுடன் OTT நன்மைகள் கிடைக்கும் ப்ரீபெய்ட் பிராட்பேண்ட் திட்டங்களில் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

இந்த திட்டங்கள் என்ன விலையில், எப்படி 15 வகையான OTT நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க. முதலில் OTT தொகுப்புடன் கூடிய JioFiber ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.

JioFiber ரூ 999 திட்டம்

JioFiber ரூ 999 திட்டம்

இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் 30 நாட்களுக்கு வரம்பற்ற டேட்டா பயன்பாட்டுடன் 150Mbps இணைய டேட்டா வேகத்தைப் பெறுவார்கள்.

அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வூட் செலக்ட், சோனி லிவ், ஜீ 5 உடன் சேர்த்து கூடுதலாக 10 OTT சேனல்கள் உள்ளிட்ட OTT சேவைக்கான இலவச அணுகலை வழங்குகிறது.

இது இலவச குரல் அழைப்பு நன்மையையும் வழங்குகிறது.

உங்க WhatsApp-ல் இனி தெரியாமல் கூட இந்த தப்ப செஞ்சுடாதீங்க.! மீறினால் அக்கவுண்ட் Block.!உங்க WhatsApp-ல் இனி தெரியாமல் கூட இந்த தப்ப செஞ்சுடாதீங்க.! மீறினால் அக்கவுண்ட் Block.!

JioFiber ரூ.1499 திட்டம்

JioFiber ரூ.1499 திட்டம்

இந்த ரீசார்ஜ் திட்டம் பயனர்கள் 30 நாட்களுக்கு 300 Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவையை வழங்குகிறது.

இத்துடன் சேர்த்து OTT தொகுப்பில் Netflix, Amazon Prime Video, Disney+ Hotstar போன்ற 14 OTT சேனல்களுக்கான இலவச சந்தாவை வழங்குகிறது.

இந்த திட்டமும் இலவச அன்லிமிடெட் அழைப்பு நன்மையை வழங்குகிறது.

JioFiber ரூ.2499 திட்டம்

JioFiber ரூ.2499 திட்டம்

இந்த ப்ரீபெய்ட் பிராட்பேண்ட் திட்டம் 30 நாட்களுக்கு வரம்பற்ற டேட்டாவுடன் 500Mbps வேக டேட்டாவை வழங்குகிறது.

இத்துடன் சேர்த்து கூடுதல் நன்மையாக OTT தொகுப்பில் Netflix, Amazon Prime, Disney+ Hotstar போன்ற 14 OTT சேனல்களுக்கான இலவச சந்தா ஆகியவற்றை நிறுவனம் வழங்குகிறது.

இத்துடன் சேர்த்து, உங்களுக்கு இலவச அன்லிமிடெட் அழைப்பு நன்மையையும் ஜியோ வழங்குகிறது.

புது போன் வாங்க கையில் 5000 இருந்தால் போதும்.! Amazon-ன் அப்கிரேட் டே விற்பனைய மிஸ் செய்யாதீங்க.!புது போன் வாங்க கையில் 5000 இருந்தால் போதும்.! Amazon-ன் அப்கிரேட் டே விற்பனைய மிஸ் செய்யாதீங்க.!

JioFiber ரூ.3999 திட்டம்

JioFiber ரூ.3999 திட்டம்

இந்த திட்டம் உங்களுக்கு Netflix, Amazon Prime போன்ற 15 வகையான OTT சேனல்களுக்கான இலவச சந்தாவை வழங்குகிறது.

இந்த ரீசார்ஜ் திட்டம் 30 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா நன்மையை கிட்டத்தட்ட 1Gbps வேகத்தில் தடையில்லாமல் வழங்குகிறது.

இத்துடன் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையும் கிடைக்கும்.

JioFiber ரூ.8499 திட்டம்

JioFiber ரூ.8499 திட்டம்

இந்த திட்டம் பயனர்களுக்கு 30 நாட்களுக்கு 1Gbps வேகத்தில் 6600GB டேட்டாவை வழங்குகிறது.

இத்துடன் இந்த திட்டத்தின் OTT தொகுப்பில் Netflix, Amazon Prime வீடியோ போன்ற 15 OTT சேனல்களுக்கான இலவச அணுகல் கிடைக்கிறது.

இத்துடன் கூடுதலாக, நிறுவனமா உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது.

ஜூம் செய்து பார்க்கும் இளசுகள்.! Apple வாட்சிற்கும் இதற்கும் வித்தியாசமே இல்லை.! கம்மி விலை Smartwatch.!ஜூம் செய்து பார்க்கும் இளசுகள்.! Apple வாட்சிற்கும் இதற்கும் வித்தியாசமே இல்லை.! கம்மி விலை Smartwatch.!

ஏர்டெல் ரூ 999 திட்டம்

ஏர்டெல் ரூ 999 திட்டம்

இந்த ரீசார்ஜ் திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவற்றின் OTT சந்தாக்களுடன் 200Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்குகிறது.

இத்துடன் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், விஐபி சேவை, அப்பல்லோ 24|7க்கான சந்தா, ஃபாஸ்டேக் மற்றும் விங்க் பிரீமியத்தில் கேஷ்பேக் போன்ற கூடுதல் நன்மைகளில் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளுடன் கிடைக்கிறது.

இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையையும் கொண்டுள்ளது.

ஏர்டெல் ரூ. 1,498 திட்டம்

ஏர்டெல் ரூ. 1,498 திட்டம்

இந்த பிராட்பேண்ட் ப்ரீபெய்ட் திட்டமானது 300Mbps வேகத்தில் டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை கிடைக்கிறது.

OTT நன்மைகளாக இதில் Netflix Basic, Disney+ Hotstar, Amazon Prime போன்றவை கிடைக்கிறது.

இத்துடன் Xstream Premium, VIP சேவை, Apollo 24|7க்கான சந்தா, FASTag மற்றும் Wink Premium ஆகியவற்றுக்கான இலவச சந்தாவையும் நிறுவனம் வழங்குகிறது.

தங்க நாக்குடன் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகள்.! இறந்த பின்னும் பேசுராங்களா? திடுக்கிடும் உண்மை.!தங்க நாக்குடன் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகள்.! இறந்த பின்னும் பேசுராங்களா? திடுக்கிடும் உண்மை.!

ஏர்டெல் ரூ.3,999 திட்டம்

ஏர்டெல் ரூ.3,999 திட்டம்

இந்த திட்டம் 1ஜிபிபிஎஸ் வேகத்துடன் டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் பலன்களை வழங்குகிறது.

Netflix Premium, Disney+ Hotstar, Amazon Prime, Xtream Premium, VIP சேவை, Apollo 24|7க்கான சந்தா, FASTag மற்றும் Wink Premium ஆகியவற்றுக்கான இலவச சந்தா ஆகியவை இதில் அடங்கும்.

இந்த திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு சிறந்த OTT சேனல் அணுகலை எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Airtel and Jio Broadband Prepaid Recharge Plans With 15 OTT Benefits and Unlimited Data

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X