செல்போன் ரிங் நேரத்தை குறைத்து மோசடியில் சிக்கிய ஜியோ நிறுவனம்? ஏர்டெல் புகார்.!
இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் மற்றும் ஜியோ நிறுவனம் சிறந்த சேவைகளை வழங்கிவருகிறது, குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்களும் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது. பின்பு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு இடைளே எப்போதும் கடுமையான போட்டி இருக்கும்.

ஜியோ நிறுவனம்
இந்நிலையில் தொலைபேசி அழைப்பின் போது வரும் ரிங் ஆகும் நேரத்தை ஜியோ நிறுவனம் 20 நொடிகளாக குறைத்துமோசடியில் ஈடுபடுவதாக ஏர்டெல் நிறுவனம் இப்போது குற்றம் சாட்டியுள்ளது.

சாரசரியாக 45நொடி
குறிப்பாக இந்தியாவில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் சாரசரியாக 45நொடிகளுக்கு போன் ரிங்கிங் நேரத்தைவைத்திருக்கும் போது ஜியோ நிறுவனம் மட்டும் வெறும் 20நொடிகளில் ரிங் நேரத்தை நடைமுறையில் வைத்துள்ளது.

அவுட்கோயிங் அழைப்புகள், இன்கம்மிங் அழைப்பாக மாற்றப்படுகிறது
எனவே அழைப்பை ஏற்கும் முன்னரே வாடிக்கையாளர்கள் மிஸ்டுகால் பெறுகின்றனர். இது செயற்கையாக அவுட்கோயிங்அழைப்புகள், இன்கம்மிங் அழைப்பாக மாற்றப்படுகிறது எனக் குற்றம் தெரிவித்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

மிஸ்டுகால் பெறுவார்கள்
பொதுவாக ஏர்டெல் நெட்வொர்கில் இருந்து ஒருவர் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்தால்,அது அவருக்கும்வெறும் 20நொடிகள் மட்டுமே ரிங் ஆகும். இந்த குறைவான நேரத்தில் 30சதவிகிதம் பேருக்கு மிஸ்டுகால் பெறுவார்கள்
எனவும், பின்பு இப்போது மிஸ்டுகால்களைப் பார்த்த ஜியோ வாடிக்கையாளர்கள் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்குகால் செய்வார். இந்த செயல் மூலம் ஏர்டெல் நிறுவனத்திற்கு ஒரு அவுட்கோயிங் அழைப்பு தற்போது இன்கம்மிங் அழைப்பாக மாறும்.

6பைசா கொடுக்க வேண்டும்
ஆனால் உண்மையான விதிகளின்படி இன்கம்மிங் அழைப்பு பெறும் நிறவனம் எதிர் நிறுவனத்திற்கு ஐயுசி(iuc) கட்டணமாக 6பைசா கொடுக்க வேண்டும். இப்படி ஜியோ தளத்தில் பதிவாகும் 25 முதல் 30 சதவீத மிஸ்டுகால்களில்மூலம் செய்யப்படும் அழைப்புகளால் 6பைசா கட்டணத்தை ஜியோ பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிகாம் டிராபிக்
இதன் மூலம் மட்டும் ஜியோ தற்சமயம் மொத்தம் 65சதவீத டெலிகாம் டிராபிக்-ஐ தன் வசம் வைத்துள்ளது என ஏர்டெல்நிறுவனம் குற்றம் சாட்டுகிறது. இருந்தபோதிலும் ஏர்டெல் நிறுவனத்தின் இந்த குற்றச்சாட்டுக்கு ஜியோ நிறுவனம்மறுப்பு தெரிவித்துள்ளது.

25-30 சதவீத அழைப்புகள்
மேலும் இதுகுறித்து ஜியோ நிறுவனம் கூறுகையல் 30நொடிகன் தான் இந்திய கடைப்பிடிக்கும் ஒன்று,உலகளவில்டெலிகாம் நிறுவனங்கள் 15-20 நொடிகளுக்குத் தான் ரிங் நேரத்தை வைக்கின்றன. ஜியோ தளத்தில் வரும் அழைப்புகளில் 25-30 சதவீத அழைப்புகள் மிஸ்டுகால்கள்தான் எனத் தெரிவித்துள்ளது.
Source:livemint.com


Click it and Unblock the Notifications