Home
News

ஐபோனிற்கு, ஏர்டெல் வழங்கும் 50 சதவிகிதம் தள்ளுபடி!

By Super
ஐபோனிற்கு, ஏர்டெல் வழங்கும் 50 சதவிகிதம் தள்ளுபடி!

ஏர்டெல், ஏர்செல் நிறுவனம் சமீபத்தில் தான் ஐபோன் 3-ஜிஎஸ் ஸ்மார்ட்போனிற்கு விலை குறைப்பு செய்தது. இது வாடிக்கையாளர்களை சந்தோஷக் கடலில் மூழ்கடித்து அனைவரையும், சிறப்பாக செயல்பட வைத்தது. மீண்டும் புதிய ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு சில சிறப்பு சலுகைகளை அளிக்கிறது ஏர்டெல் மற்றும் ஏர்செல் தொலை தொடர்பு நிறுவனங்கள். ஏர்டெல் நிறுவனம் ஐபோன்-5விற்கு ப்ரீ-ஆர்டர் வசதியும் வழங்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நிறுவனம் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் சிறப்பு சலுகைகள் ரூ. 300 விலையில் இருந்து ஆரம்பமாகின்றன. அதோடு 500 நிமிடங்களுக்கு லோக்கல் கால்ஸ், 300 லோக்கல் மற்றும் நேஷனல் எஸ்எம்எஸ், 200 எம்பி 3ஜி டேட்டா

வசிதயினையும் பெற முடியும். இங்கே சொல்லப்பட்ட அனைத்து வசதிகளும் ரூ. 300க்கான கட்டணத்தில் பெற முடியும்.

ஏர்டெல் நிறுவனத்தில் ரூ. 500க்கான கட்டணத்தில் 900 நிமிடங்கள் லோக்கல் வசதிக்காகவும், 400 லோக்கல் மற்றும் நேஷனல் எஸ்எம்எஸ்களையும், 500 எம்பி 3ஜி டேட்டா சேவையினையும் இதில் பெறலாம்.

இது மட்டும் அல்லாமல் ரூ. 800 கட்டணத்திற்கான சலுகைகளையும் இதில் பெற முடியும். இந்த சலுகைகளில் போன்கால் செய்யும் வசதிகளில் 1,400 நிமிடங்களும், லோக்கல் மற்றும் நேஷனல் எஸ்எம்எஸ் சேவையினையும், 1.2 ஜிபி வரை 3ஜி டேட்டா சேவையினையும் இதில் பயன்படுத்தலாம்.

இந்த ஸ்மார்ட்போனில் ரூ. 1000த்திற்கான சலுகையில் போன்காலிற்காக 1,500 நிமிடங்களும், 600 லோக்கல் மற்றும் நேஷனல் எஸ்எம்எஸ் சேவைகளையும் மற்றும் 3ஜிபி வரை 3ஜி டேட்டா சேவையினையும் பெற்று பயனடையலாம்.

ஏர்செல் நிறுவனமும் ஐபோன்-5விற்கான நிறைய சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது. இதில் 1 ஜிபி டேட்டா மற்றும் 500 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால், ஒரு மாதத்திற்கான 500 எஸ்எம்எஸ் வசிதகள் ஆகியவற்றை இதில் எளிதாக பயன்படுத்த முடியும்.

இது போன்ற சிறப்பான சலுகைகளை ஏர்செல் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வழங்க இருக்கின்றன. ஏர்டெல் மற்றும் ஏர்செல் தொலை தொடர்பு சேவை நிறுவநத்தினை அனுகி இதன் விவரங்களை முழுமையாக பெறுவது இன்னும் சிறந்தது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X