Airtel காட்டில் டேட்டா மழை.. மலிவு விலையில் கிடைக்கும் அன்லிமிடெட் டேட்டா பேக்.. இதோ லிஸ்ட்..
ஜியோ நிறுவனத்தை விட சில ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நன்மைகளை வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம். எனவே தான் மக்கள் ஜியோ திட்டங்களை விட ஏர்டெல் நிறுவனத்தின் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல் டேட்டா பேக் திட்டங்களில் கூட ஜியோவை விட ஏர்டெல் அதிக டேட்டா நன்மைகளை வழங்குகிறது.
சமீபத்தில் கூட ஏர்டெல் நிறுவனம் ரூ.9 டேட்டா பேக் திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. இதில் அதிக டேட்டா நன்மை வழங்கப்பட்டுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் ஏர்டெல் நிறுவத்தின் டேட்டா பேக் திட்டங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 9 அன்லிமிடெட் டேட்டா பேக் (Airtel Rs 9 Unlimited Data Pack) ஆனது சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் 10ஜிபி டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஏர்டெல் ரூ.9 திட்டத்தின் வேலிடிட்டி வெறும் 1 மணி நேரம் தான். பின்பு இந்த திட்டத்தில் 10ஜிபி டேட்டாவும் தீர்ந்தபிறகு இணைய வேகம் 64 Kbps-ஆக குறையும்.
அதேபோல் ஏர்டெல் ரூ 9 அன்லிமிடெட் டேட்டா பேக் திட்டத்தில் எஸ்எம்எஸ், அழைப்பு நன்மைகள், ஒடிடி போன்ற எந்த சலுகையும் கிடைக்காது. ஆனால் இந்த திட்டத்தில் 1 மணி நேரத்திற்குப் பதிலாக 3 மணி நேரம் வேலிடிட்டி கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திக்கும்.

ஏர்டெல் ரூ.39 அன்லிமிடெட் டேட்டா பேக் (Airtel Rs 39 Unlimited Data Pack) ஆனது அதிக டேட்டா நன்மைகளை வழங்குகிறது. அதாவது நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 20ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் டேட்டா தீர்ந்தபிறகு இணைய வேகம் 64 Kbps-ஆக குறையும்.
ஏர்டெல் ரூ 49 அன்லிமிடெட் டேட்டா பேக் (Airtel Rs 49 Unlimited Data Pack) ஆனது 20ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி கூட 1 நாள் தான். ஆனால் இந்த திட்டம் விளம்பரமில்லா ஹை குவாலிட்டி மியூசிக் (ad-free high-quality music ) சே சேவையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது 30 நாட்களுக்கு விங்க் மியூசிக் பிரீமியம் (Wynk Music Premium) சந்தாவை வழங்குகிறது ஏர்டெல் ரூ 49 அன்லிமிடெட் டேட்டா பேக். பின்பு இந்த திட்டத்தில் டேட்டா தீர்ந்தபிறகு இணைய வேகம் 64 Kbps-ஆக குறையும். மியூசிக் மற்றும் டேட்டா நன்மையை எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

ஏர்டெல் ரூ.79 அன்லிமிடெட் டேட்டா பேக் (Airtel Rs 79 Unlimited Data Pack) கூட அதிக டேட்டா நன்மைகளை வழங்குகிறது. அதாவது நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 20ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 2 நாள் ஆகும். எனவே இந்த திட்டம் மொத்தமாக 40ஜிபி டேட்டா வழங்கும்.
இந்த ஏர்டெல் ரூ.79 அன்லிமிடெட் டேட்டா பேக் திட்டத்தில் டேட்டா தீர்ந்தபிறகு இணைய வேகம் 64 Kbps-ஆக குறையும். குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் டேட்டா பேக் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் ஏர்டெல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications