Home
News

கடைசியா இங்கதான் வரணும்.. ரூ.199-க்கு டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. Airtel கொடுக்கும் 4 மலிவு விலை திட்டங்கள்..

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் கட்டணங்களின் உயர்த்தியது. ஆனாலும் வாடிக்கையாளர்களை குளிர்விக்கும்படி இப்போது கூட 4 மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. எனவே இனிமேல் மலிவான விலையில் திட்டங்களைத் தேடும் ஏர்டெல் பயனர்கள் (airtel users) இந்த திட்டங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். இப்போது மலிவு விலை திட்டங்களை (Cheapest Plans) இந்த பதிவில் சற்று விரவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 199 prepaid recharge plan) ஆனது டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

கடைசியா இங்கதான் வரணும்..Airtel கொடுக்கும் 4 மலிவு விலை திட்டங்கள்..

ஏர்டெல் ரூ 219 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 219 prepaid recharge plan) ஆனது 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ், ரூ 5 டாக்டைம் வேல்யூ, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் சலுகைகள் உள்ளிட்ட சில அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

ஏர்டெல் ரூ 249 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 249 prepaid recharge plan) ஆனது தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 24ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர பல அசத்தலான சலுகைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஏர்டெல் ரூ 249 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ 299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 299 prepaid recharge plan) ஆனது தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ 299 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர சில அசத்தலான சலுகைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

கடைசியா இங்கதான் வரணும்..Airtel கொடுக்கும் 4 மலிவு விலை திட்டங்கள்..

அதன்படி வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஏர்டெல் ரூ 299 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மலிவு விலையில் திட்டங்களை எதிர்பார்க்கும் ஏர்டெல் பயனர்கள் மேற்கூறிய ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது. ஆனாலும் பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தை விட மலிவு விலையில் அதிக டேட்டா மற்றும் வாய்ஸ் கால் நன்மையைத் தரும் திட்டங்களை வைத்துள்ளது. ஆனால் ஏர்டெல் போன்ற பெரும்பாலான இடங்களில் 4ஜி வேகத்தில் சிக்னலை எதிர்பார்க்க முடியாது. எனவே பிஎஸ்என்எல் 4ஜி வரும் வரை ஏர்டெல் நிறுவனத்தின் இந்த மலிவு விலை திட்டங்கள் தான் பெஸ்ட்.

Best Mobiles in India

English summary
Airtel affordable prepaid recharge plans under Rs.300:check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X