ஏர்டெல் சிம் இருக்கா.. வெறும் ரூ.160 முதல் ஹாட்ஸ்டார் சந்தா.. அன்லிமிடெட் சலுகைகள்.. மிஸ் பண்ணாதீங்க..
ஏர்டெல் (airtel) நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் இணைந்து ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவைகளை விரைவில் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்த உள்ளது. இதுதவிர பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்த உள்ளது ஏர்டெல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது ஹாட்ஸ்டார் சந்தா தரும் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல். அந்த திட்டங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.160 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 160 Prepaid plan) ஆனது 7 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகுிறது. ஆனால் இந்த திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (disney + Hotstar) சந்தா வழங்கப்படும். குறிப்பாக வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள இந்த திட்டத்தில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 398 Prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
28 நாட்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா வழங்குகிறது ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 549 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். நீங்கள் ஏர்டெல் ரூ.549 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் வழங்குகிறது ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1029 Prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த ஏர்டெல் ரூ.1029 திட்டமும் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்குகிறது.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், RewardsMini சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.


Click it and Unblock the Notifications








