சைலண்டாக ரூ.200 திட்டத்தில் கூடுதல் சலுகைகள் வழங்கிய ஏர்டெல்.. என்னென்ன நன்மைகள்? வேலிடிட்டி?
ஜியோ நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம். சமீபத்தில் இந்நிறுவனம் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை மட்டும் அறிமுகம் செய்தது. இந்நிலையில் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றில் கூடுதல் சலுகை வழங்கி உள்ளது.
அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.200 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் தற்போது கூடுதல் சலுகை வழங்கி உள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்து இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.200 திட்டம் (Airtel Rs 200 Plan) ஆனது தற்போது புதிதாக யூடியூப் பிரீமியம் சந்தாவை வழங்குகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். ஏற்கனவே இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன், ZEE5, ஜியோஹாட்ஸ்டார் சந்தா போன்ற முக்கிய ஓடிடி இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. எனவே இதன் மூலம் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மேலும் ஒரு விரிவான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.
அதுவும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 18க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.
அதேபோல் ஏர்டெல் ரூ.200 திட்டம் மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கப்படவில்லை. எனவே ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி சந்தா திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம். மேலும் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களையும் இப்போது பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 185 Plan) ஆனது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) மொத்தமாக 300 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை கிடையாது.
ஏர்டெல் ரூ.203 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 203 Plan) ஆனது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), மொத்தமாக 300 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை கிடையாது.

ஏர்டெல் ரூ.206 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 206 Plan) ஆனது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), மொத்தமாக 300 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை கிடையாது.
TRAI-யின் புதிய விதிமுறைகளின்படி, குறைந்த வேலிடிட்டி கொண்ட வாய்ஸ் மற்றும் SMS மட்டும் வழங்கும் இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது ஏர்டெல். குறிப்பாக இந்த மூன்று மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications
