ஏர்டெல், ஆக்ட், ஜியோ, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களே: அட்டகாச பிராட்பேண்ட் திட்டங்கள்!

|

ஜியோ, ஆக்ட் ஃபைபர்நெட், பிஎஸ்என்எல், ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

பிராட்பேண்ட் சேவைகள்

பிராட்பேண்ட் சேவைகள்

மொபைல் இணைய இணைப்புகள் எவ்வளவு வேகமாகவும் சலுகையோடும் இருந்தாலும், அவை பிராட்பேண்ட் சேவைகளின் நிலை மற்றும் வேகத்தை எட்டாது என்பது இயல்பான ஒன்று. வீட்டில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பே ஆகச்சிறந்த ஒன்று.

பயன்பாட்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பயன்பாட்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதிலும் குறிப்பாக கொரோனா தொற்று பரவலை தடுக்க அரடு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் தங்களின் நேரத்தை ஸ்மார்ட்போன்களில் தான் செலவிட்டு வருகின்றனர். இதையடுத்து ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் நேரமும் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

இணைய சேவை அதிகரிப்பு

இணைய சேவை அதிகரிப்பு

இணைய சேவை அதிகரித்து வருவதன் காரணமாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அறிவிக்கும் வழங்கும் ரூ.1000-த்துக்கு குறைவான சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ஜியோ ஃபைபர் திட்டங்கள்

ஜியோ ஃபைபர் திட்டங்கள்

ஜியோ ஃபைபரின் ரூ.699 திட்டமானது பல்வேறு சலுகைகளோடு வருகிறது. அதோடு இந்த திட்டமானது 150 ஜிபி டேட்டா சலுகையோடு வருகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு, வீடியோ அழைப்புகள், ஐந்து சாதன இணைப்பு அணுகல் ஆகிய பல்வேறு வசதிகளோடு வழங்குகிறது. ரூ 849 திட்டமானது 600 ஜிபி டேட்டா ஆதரவோடு வழங்குகிறது. இந்த திட்டம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் சி 5 சந்தாக்களுடன் வருகிறது. ரூ.699 திட்டத்தின் நன்மைகளும் இந்த திட்டத்துடன் கிடைக்கின்றன.

பைக் டயருக்கு காற்று நிரப்ப 3 நிமிடங்கள்.! கார் டயருக்கு 6 நிமிடங்கள்.! சியோமி சாதனம் அறிமுகம்.!பைக் டயருக்கு காற்று நிரப்ப 3 நிமிடங்கள்.! கார் டயருக்கு 6 நிமிடங்கள்.! சியோமி சாதனம் அறிமுகம்.!

ரூ.1000-த்துக்கு குறைவான இரண்டு திட்டங்கள்

ரூ.1000-த்துக்கு குறைவான இரண்டு திட்டங்கள்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் திட்டங்களில் ரூ.1000-த்துக்கு குறைவாக இரண்டு திட்டங்கள் உள்ளது. இந்த திட்டத்தில் 150 ஜிபி டேட்டா சலுகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களோடு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் விலை ரூ.799 மற்றும் ரூ.999 ஆகிய இரண்டு சலுகைகளில் கிடைக்கிறது. இதில் 100 எம்பிபிஎஸ் இணைய வேக வரம்பற்ற அழைப்போடும், 300 ஜிபி டேட்டா மற்றும் அமேசான் பிரைம், ஏர்டெல் எக்ஸ்- ஸ்ட்ரீம் ஆகிய இலவச சந்தாக்களை வழங்குகின்றன.

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்கள்

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்கள்

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்கள் காம்போ யுஎல்டி 900 திட்டமானது 10 எம்.பி.பி.எஸ் வரை வேகத்தோடு வழங்குகிறது. இந்த திட்டமானது நாள் ஒன்றுக்கு 15 ஜிபி தரவு மற்றும் லேண்ட்லைன் மூலம் வரம்பற்ற குரல் அழைப்புகளோடு வருகிறது. கூடுதலாக பிஎஸ்என்எல் திட்டமானது ரூ.949 விலையில் 500 ஜிபி டேட்டா திட்டத்தை வழங்குகிறது. இது 50 எம்பிபிஎஸ் வேகத்தோடு வழங்குகிறது.

ACT ஃபைபர்நெட் திட்டம்

ACT ஃபைபர்நெட் திட்டம்

ACT ஃபைபர்நெட் திட்டம் இரண்டு திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டமானது ரூ.710 மற்றும் ரூ.958 விலையில் கிடைக்கிறது. இது ரூ.710 திட்டமானது 40 எம்பிபிஎஸ் வேகத்தில் 200 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் ரூ.958 திட்டமானது 75 எம்பிபிஎஸ் வேகத்தோடு 350 ஜிபி டேட்டா சலுகையோடு வழங்ககிறது.

Best Mobiles in India

English summary
Airtel, Act fibernet, jio, Bsnl offers best data plans in budget price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X