சபாஷ் Airtel.. ரூ.239-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.25,000.. மொத்த இந்தியாவிலும் இப்படி ஒரு இன்சூரன்ஸ் கிடைக்காது!
சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல், ஏற்கனவே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களுடன், தனது வாடிக்கையாளர்களுக்கான விபத்து காப்பீட்டு (Airtel Accidental Insurance) நன்மையை வழங்கி வருகிறது. அதென்ன திட்டங்கள்? இந்த விபத்து காப்பீடு நன்மையின் கீழ் என்ன கிடைக்கும்? இதோ விவரங்கள்:
அதென்ன திட்டங்கள்? விபத்து காப்பீட்டு நன்மை உடன் வரும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகள் - ரூ.239, ரூ.399 மற்றும் ரூ.969 ஆகும். இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களுமே பார்தி ஏர்டெல்லின் அனைத்து டெலிகாம் வட்டத்திலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் அணுக கிடைக்கின்றன.

இந்த 3 ஏர்டெல் திட்டங்களின் கீழ் கிடைக்கும் இன்சூரன்ஸ் ஆனது ஐசிஐசிஐ லோம்பார்டு (CICI Lombard) உடன் இணைந்து வழங்கப்படுகிறது. இந்த விபத்து காப்பீட்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்னென்ன? இந்த 3 திட்டங்களின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
பாரதி ஏர்டெல்லின் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 2 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளருக்கு விபத்தின் வழியாக மரணம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் மற்றும் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ.25,000 விபத்து காப்பீட்டு தொகை கிடைக்கும்.
பாரதி ஏர்டெல்லின் ரூ.339 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 3 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளருக்கு விபத்தின் வழியாக மரணம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் மற்றும் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ.25,000 விபத்து காப்பீட்டு தொகை கிடைக்கும்.
பாரதி ஏர்டெல்லின் ரூ.969 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 1.5 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளருக்கு விபத்தின் வழியாக மரணம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் 28 நாட்களுக்கு மற்றும் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ.25,000 விபத்து காப்பீட்டு தொகை கிடைக்கும்.
பார்தி ஏர்டெல்லின் ரூ.969 திட்டத்தின் காப்பீட்டுத் தொகை 90 நாட்களுக்கும், ரூ.239 மற்றும் ரூ.399 ஆகிய திட்டங்களின் காப்பீட்டுத் தொகை 30 நாட்களுக்கும் வழங்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வண்ணம், பயனர்கள் இந்த 3 திட்டங்களை ரீசார்ஜ் செய்தவுடன், இதன்கீழ் கிடைக்கும் இன்சூரன்ஸ் பாலிசி நடைமுறைக்கு வராது.
மாறாக ரீசார்ஜ் செய்த அடுத்த நாள், அதாவது அடுத்தநாள் நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று ஏர்டெல் குறிப்பிட்டுள்ளது. பாரதி ஏர்டெல் மட்டுமே அதன் திட்டங்களுடன் விபத்து காப்பீட்டை வழங்கும் நாட்டின் ஒரே டெலிகாம் நிறுவனமாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க பார்தி ஏர்டெல் நிறுவனம் அடிக்கடி ரீசார்ஜ் விலை உயர்வை பற்றி பேசி வருகிறது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆன கோபால் விட்டல் (Gopal Vittal), கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் மட்டுமே இரண்டு முறை ஏர்டெல் நிறுவனம் அதன் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தும் எண்ணத்தில் உள்ளதை பற்றி அழுத்தமாக பற்றி பேசி உள்ளார். ஒருவேளை விலை உயர்வு சாத்தியமாகாத பட்சத்தில் ஏஆர்பியு (ARPU) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு பயனருக்கான சராசரி வருவாயை நிலையாக அதிகரிக்க உதவும் 4 உத்திகளை ஏர்டெல் பின்பற்றும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








