Home
News

தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்.. இனிமே ஒரு ரீசார்ஜ் போதும்.. 90 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 1.5 ஜிபி டேட்டா!

இனிமேல் ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு ஒரேவொரு ரீசார்ஜ் போதும் 90 நாட்கள் வேலிடிட்டியில் (90 Days Validity) அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS), ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் (OTT Subscription) மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இதேபோல 77 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மற்றொரு ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Prepaid Plan) கிடைக்கிறது. இந்த திட்டங்களின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் நிறுவனத்தில் 28 நாட்கள் அல்லது 56 நாட்கள் அல்லது 84 நாட்கள் போன்ற வேலிடிட்டி திட்டங்கள் வேண்டாம், சரியாக மூன்று மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டம் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ரீபெய்ட் திட்டம் பக்கா ஆப்ஷனாக இருக்கும்.

தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்.. இனிமே ஒரு ரீசார்ஜ் போதும்.. 90 நாட்களுக்கு!

ஏர்டெல் ரூ 929 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 929 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது. 90 நாட்களுக்கு இந்த டேட்டா சலுகைகள் கிடைக்கிறது. இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடையாது.

ஆனால், வாய்ஸ் கால்கள் அன்லிமிடெட் சலுகையில் கிடைக்கின்றன. அதாவது, 90 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. டேட்டாவுக்கு அடுத்து எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு கிடைக்கிறது.

ஆகவே, வழக்கமாக ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைப்பதை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகளுக்கு பிறகும் பிரத்யேகமாக கிடைக்கும் ஸ்பேம் ஃபில்டர் சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. ஆகவே, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் ஸ்பேம் ஃபில்டர் கிடைக்கிறது.

இதற்காக கஸ்டமர்களிடம் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படாது. மேலும், ப்ரீ கன்டென்ட் சலுகைகளை மட்டுமே கொடுக்கும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xstream App) ஓடிடி சந்தா கொடுக்கப்படுகிறது. இறுதியாக ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை மற்றும் அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) மெம்பர்ஷிப் வருகிறது.

இந்த சலுகைகளையும் 90 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். இப்போது, ஏர்டெல் நிறுவனத்தில் 77 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இதிலும் முந்தைய திட்டத்தில் பார்த்த பெரும்பாலான சலுகைகள் கிடைக்கின்றன. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை எதிர்பார்க்க முடியாது.

ஏர்டெல் ரூ 799 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 799 Prepaid Plan): மூன்று மாதங்களுக்கு குறைவாகவும், 2 மாதங்களுக்கு மேலாகவும் இந்த திட்டம் கிடைக்கிறது. அதாவது, 2.5 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. இந்த சலுகைகளும் முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா முதல் தொடங்குகிறது.

ஆகவே, 1.5 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. இதை 77 நாட்கள் வேலிடிட்டியில் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ப்ரீ ஹலோ டியூன்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மற்றும் ஸ்பேம் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் அலெர்ட் சலுகைகள் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel 90 Days Plan Offers Unlimited Voice Calls Airtel Xstream App Daily Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X