Airtel பலே பிளான்.. 84 நாளுக்கு ஒருமுறை மட்டும் ரீசார்ஜ்.. ஆரம்ப விலையே இவ்வளவு தான்.. எந்த திட்டம்?
இந்திய டெலிகாம் துறையில் (Indian telecom industries) நடைபெறும் கடுமையான போட்டிக்கு நடுவே ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் அதிக வேலிடிட்டி திட்டங்களை குறைந்த விலையில் வழங்கி மக்களை கவர முயன்று வருகிறது. என்ன தான் இருந்தாலும், அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்கக்கூடிய மலிவு விலையில் தனியார் டெலிகாம் (private telcos) நிறுவனங்களால் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்க முடியவில்லை என்றாலும், ஏர்டெல் இப்போது 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் இப்போது மூன்று திட்டங்களை 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்கி வருகிறது. இவை ரூ. 859 விலை முதல் துவங்கி ரூ. 1199 விலை வரை செல்கிறது. இந்த விலை வரம்பின் கீழ் ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிதாக ஏர்டெல் 859 பிளான் (Airtel 859 Plan), ஏர்டெல் 979 பிளான் (Airtel 979 Plan) மற்றும் ஏர்டெல் 1199 பிளான் (Airtel 1199 Plan) திட்டங்களை வழங்குகிறது.

1. ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 859 prepaid plan):
இந்த திட்டம் தினசரி 1.5GB டேட்டா நன்மையை (1.5GB data benefits) வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு (84 days validity) செல்லுபடியாகிறது. இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு மொத்தமாக 126GB டேட்டா நன்மை கிடைக்கிறது. இந்த திட்டத்தின் தினசரி டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, இணைய வேகம் (internet speed) 64Kbps ஆக குறைக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த திட்டம் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) போன்ற வாய்ஸ் கால் நன்மையையும் இந்த திட்டம் வழங்குகிறது. இதுதவிர இந்த திட்டம் உங்களுக்கு தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது. இத்துடன் ரிவார்டு மினி சந்தா சேவையும் கிடைக்கிறது (rewards mini subscription).
இதில் அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் (Apollo 24/7 circle subscription), ப்ரீ ஹாலோ டியூன்ஸ் (free hello tunes) மற்றும் விங்க் மியூசிக் (wink music) போன்ற பல நன்மைகளை இந்த திட்டம் வழங்குகிறது.
2. ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan):
இந்த திட்டம் தினசரி 2GB டேட்டாவை வழங்குகிறது. மேல் கண்ட திட்டத்தின் நன்மைகள் அனைத்தும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இருப்பினும், இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் ஒட்டுமொத்த டேட்டாவின் அளவு 168GB ஆக இருக்கிறது. இந்த திட்டமும் தினசரி டேட்டா வரம்பு முடிந்த பிறகு, இணைய வேகம் 64Kbps ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் கூடுதல் இலவச நன்மைகள் மாறுபடுகிறது.
இந்த திட்டம் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவுடன் 22 ஓடிடி ஆப்களின் அனுகலை இந்த திட்டம் வழங்குகிறது. இத்துடன் மேற்கூறிய திட்டங்களின் அணைத்து இலவச நன்மைகளும் இந்த திட்டத்துடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) நன்மை கிடைக்கிறது. 5ஜி நெட்வொர்க் கவரேஜ் பகுதியில், 5ஜி மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த நன்மை கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








