Home
News

Airtel SIM காட்டில் மழை.. 84 நாட்களுக்கு கண்ணை மூடிகிட்டு ரீசார்ஜ் பண்ணலாம்.. மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டம்!

ஏர்டெல்லில் 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் என்று வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் இருக்கின்றன. இதில் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டத்தை பெற குறைந்தது ரூ.800 மேல் செலவு செய்ய வேண்டும் என்று பல கஸ்டமர்கள் நினைக்கின்றனர். இவர்களுக்கு மலிவான விலைக்கு கிடைக்கும் இந்த 84 நாட்கள் திட்டம் ஆச்சரியமாக இருக்கலாம்.

தினசரி டேட்டாவுடன் கிடைக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களே அதிக விலைக்கு கிடைக்கின்றன. ஆனால், லம்ப்-சம் டேட்டாவுடன் கிடைக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் அதைவிட மலிவான விலைக்கே கிடைக்கிறது. இதில் ஏர்டெல் ரூ.548 திட்டம் தவிர்க்க முடியாத திட்டமாக மாறிவிட்டது. அப்படியென்ன சலுகைகள் இருக்கிறது?

Airtel SIM காட்டில் மழை.. 84 நாட்களுக்கு கண்ணை மூடிகிட்டு ரீசார்ஜ்!

ஏர்டெல் 84 நாட்கள் மலிவு விலை வேலிடிட்டி திட்டம் (Airtel 84 Days Low Cost Validity Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.548ஆக இருக்கிறது. மலிவான விலைக்கு கிடைப்பதால், வாய்ஸ் ஒன்லி திட்டம் என்று நினைக்க வேண்டாம். இதில் லம்ப்-சம் டேட்டா கொடுக்கப்படுகிறது. அதாவது, மொத்த வேலிடிட்டிக்கும் குறைவான டேட்டா கிடைக்கும்.

இதை தினசரி லிமிட் போல பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. தேவைப்படும்போது முழுவதும் பயன்படுத்தலாம். ஆனால், முடிந்துவிட்டால், டேட்டா வவுச்சர்கள் தேவைப்படும். ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்களுக்கு மொத்தமாக 7 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு போஸ்ட் டேட்டா கிடைக்காது. ஆகவே, 7 ஜிபி டேட்டாவை 84 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்பாக முடித்துவிட்டால், டேட்டா வவுச்சர்கள் இருந்தால் மட்டுமே டேட்டாவை பயன்படுத்த முடியும். இல்லையென்றால், 1 எம்பி டேட்டாவுக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்காது.

ஆகவே, 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் கஸ்டமர்கள் அதை எதிர்பார்க்க வேண்டும். வேலிடிட்டி முழுவதும் . அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களின் (Roaming Calls) சலுகை கொடுக்கப்படும். தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம் என்ற கணக்கு இந்த திட்டத்துக்கு பொருந்தாது. ஆகவே, 900 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

இதை 84 நாட்கள் வேலிடிட்டியில் எப்போது வேண்டுமானாலும், அதிகமாகவும் குறைவாகவும் அனுப்பி கொள்ளலாம். இது மொத்த லிமிட்டில் இருந்து குறைக்கப்பட்டு கொண்டே வரும். 84 நாட்களுக்கு முன்பாகவே 900 எஸ்எம்எஸ்களை முடித்துவிட்டால், பிறகு கட்டணம் செலுத்தி எஸ்எம்எஸ்களை அனுப்ப வேண்டி இருக்கும். கூடுதல் சலுகைகளும் உள்ளன.

12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும்படி அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா கிடைக்கிறது. ஏர்டெல் அல்லாத கஸ்டமர்களுக்கு இந்த சந்தா ரூ.4,000 விலைக்கு கிடைக்கிறது. இலவச சலுகைகளை கொடுக்கும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தாவும் கிடைக்கிறது. இதில் சோனிலிவ், அமேசான் எம்எக்ஸ் பிளேயர் உள்ளிட்ட ஆப்கள் கிடைக்கும்.

ஆனால், பிரீமியம் கன்டென்ட்கள் கிடைக்காது. மேலும், வழக்கமாக கிடைக்கும் ப்ரீ ஹெலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை வருகிறது. ஆனால், 30 நாட்களுக்கு ஒரு டியூன் கணக்கில் மட்டுமே மாற்றி கொள்ள முடியும். ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வரும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் இருக்கும் ஸ்பேம்களை டிடெக்ட் செய்ய சேப் நெட்வொர்க் சலுகை கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel 84 Days Low Cost Validity Plan With Voice Calls Data OTT Apps At Just Rs 548
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X