Airtel SIM வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு அடுத்த 60 நாட்களுக்கு இதுதான்.. வாய்ஸ் கால்கள்.. 1.5 ஜிபி டேட்டா!
டெலிகாம் நிறுவனங்கள் 1 மாத வேலிடிட்டி என்றால் 28 நாட்களை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்கின்றன. ஆகவே, ஏர்டெல் (Airtel) சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கும் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களே 2 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இப்போது பார்க்க இருக்கும் திட்டத்தில் 60 நாட்கள் வேலிடிட்டி (60 Days Validity) கொடுக்கப்படுகிறது. ஆகவே, சரியாக 2 மாதங்களுக்கு வேலிடிட்டி மட்டுமல்லாமல், டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சந்தாவும் வேண்டுமானால், இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தை (Airtel Prepaid Plan) ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ.619 திட்ட விவரங்கள் (Airtel Rs 619 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், கூடுதலாக ஓடிடி சந்தா, அடோப் எக்ஸ்பிரஸ் சந்தா உள்ளிட்ட 5 சலுகைகள் கிடைக்கும். 60 நாட்கள் வேலிடிட்டியை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது.
இந்த வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் கால்கள் (Unlimited Local Calls), எஸ்டிடி & ரோமிங் கால்கள் (STD & Roaming Calls) கொடுக்கப்பட்டு உள்ளன. நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இது அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) கொடுக்காது.
ஆகவே, 60 நாட்கள் வீதம் 90 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த ஏர்டெல் ரூ.619 திட்டம் கொடுத்து இருக்கிறது. இப்போது கூடுதல் சலுகைகளுக்கு போகலாம்.
இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது. 12 மாதங்கள் வரை கிடைக்கும் இந்த சந்தாவை தனியாக பெற்றால் ரூ.4,000 செலவாகும். ஆனால், ஏர்டெல் கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. அடுத்து ஓடிடி சந்தா இருக்கிறது.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தாவின் ப்ரீ வெர்ஷன் இதில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, இதில் சோனிலிவ் ப்ரீ வெர்ஷன் (SontLIV Free Version) கிடைக்கும். மேலும், அமேசான் எம்எக்ஸ் பிளேயர் (Amazon MX Player), சன்னா ஜோர் (Channa Jor), ரன்ன் டிவி (Run TV) உள்ளிட்ட ஆப்களின் ப்ரீ வெர்ஷனும் இதில் கிடைக்கிறது.
இந்த ஓடிடி சந்தாவுக்கு அடுத்து ஷேப் நெட்வொர்க் கிடைக்கிறது. அதாவது, ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வரும் எஸ்எம்எஸ்கள் மற்றும் வாய்ஸ் கால்களில் இருக்கும் ஸ்பேம்களை டிடெக்ட் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக வழக்கமாக கிடைக்கும் ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதைவிட கூடுதல் டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வேண்டுமானால், ஏர்டெல் ரூ.649 திட்டத்தை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால், இந்த திட்டத்தில் 56 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் கால்கள், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கின்றன. ப்ரீ ஹேலோ டியூன்ஸ், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் மற்றும் ஷேப் நெட்வொர்க் சலுகைகள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications