Motorola பயனர்களுக்கு இடியாக வந்த செய்தி: 5ஜி போன் வாங்கியும் இப்படியொரு நிலைமையா?
ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் சமீபத்தில் தான் 5ஜி சேவையை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்தியாவின் 8 நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 5ஜி பிளஸ் சேவைகள் கிடைக்கும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

5ஜி சேவை
குறிப்பாக 5ஜி சேவையை பெற வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக 5ஜி போனை வைத்திருக்க வேண்டும். அதேபோல் இந்திய சந்தையில் பல 5ஜி மோட்டோரோலா போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இப்போது இரண்டு மோட்டோரோலா போன்களில் மட்டுமே ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவைக்கு அப்டேட் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் 5ஜி பிளஸ்
அதாவது மோட்டோரோலாவின் இரண்டு போன்களுக்கு மட்டுமே ஏர்டெல் 5ஜி பிளஸ் அப்டேட் கிடைத்துள்ளதாகவும், மற்ற போன்களுக்கு விரைவில் அப்டேட் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை அனுமதிக்கும் அந்த இரண்டு போன்களைப்பார்ப்போம்.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் ஆகிய இரண்டு போன்கள் மட்டுமே எர்டெல் 5ஜி பிளஸ் சேவையை ஆதரிக்கிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஏர்டெல் 5ஜி பிளஸை இப்போது வரை ஆதரிக்காத மற்றும் விரைவில் அப்டேட் பெறப்போகும் மோட்டோரோலா போன்களின் பட்டியலை இப்போது விரிவாகப் பார்ப்போம். அதாவது மோட்டோ ஜி62 5ஜி, மோட்டோ ஜி82 5ஜி, மோட்டோரோலா எட்ஜ் 30, மோட்டோ ஜி71 5ஜி, மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ, மோட்டோ ஜி51 5ஜி, மோட்டோரோலா எட்ஜ் 20, மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ, மோட்டோரோலா எட்ஜ் 20 Fusion, Motorola Razr 5G மற்றும் Moto G 5G.

விரைவில்
மேலே குறிப்பிடப்பட்ட மோட்டோரோலா 5ஜி போன்கள் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி-ஐ ஆதரிக்கும் அப்டேட்-ஐ எப்போது பெறும் என்பதற்கான சரியான தேதி இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் அந்த போன்களுக்கு 5ஜி அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி தொடர்பான மோசடி
அதேபோல் 5ஜி அறிமுகான சில தினங்களில் திருட்டு கும்பலும், மோசடி செய்பவர்களும் அப்பாவி மக்களை ஏமாற்ற தொடங்கியுள்ளனர். குறிப்பாக பல மாநிலங்களை சேர்ந்த போலீசார்கள் "5ஜி ஊழல்" (5G Scam) தொடர்பான எச்சரிக்கைகளை வெளியிட்ட வண்ணம் உள்ளனர் மற்றும் 5ஜி தொடர்பான மோசடி குறித்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களை எச்சரித்தும் உள்ளனர்.

லிங்க்?
அதாவது உங்கள் போனிற்கு ஒரு எஸ்எம்எஸ் வழியாக அல்லது வாட்ஸ்அப் வழியாக அல்லது இமெயில் வழியாக ஒரு லிங்க் அனுப்புவோம்.. அதை கிளிக் செய்தால் போதும்.. உடனே உங்கள் ஸ்மார்ட்போன் 5ஜி போனாகி விடும்!" என்று கூறும் மோசடி ஆசாமிகளை நீங்கள் நம்ப வேண்டாம்.
குறிப்பாக லிங்க் வழியாக 5ஜி ஆதரவு" என்கிற 5ஜி ஊழலை நம்ப வேண்டாம் என்று ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரண்டுமே தத்தம் பயனர்களை கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல் உங்கள் மொபைலில் 5ஜி-ஐ எனேபிள் செய்வதாக கூறும் எவருடனும் உங்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் ஒடிபி போன்றவைகளை பகிர வேண்டாம்.

மேலும் 5ஜி சேவைகள் தொடங்கப்படாத எந்தவொரு நகரத்திலும் உங்களால் 5ஜி-ஐ பெற முடியாது. உங்கள் டெலிகாம் ஆப்ரேட்டர் உங்கள் நகரத்தில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் வரை காத்திருங்கள்.


Click it and Unblock the Notifications