தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் இப்போது ஏர்டெல் 5G பிளஸ் இலவசம்..யாரெல்லாம் யூஸ் செய்யலாம்?
பார்தி ஏர்டெல் (Bharti Airtel) தனது 5ஜி சேவையான 'ஏர்டெல் 5ஜி பிளஸ்' சேவையை இப்போது தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, கர்நாடகா, குஜராத் மற்றும் தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்க செய்துள்ளது.
ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) அறிமுகப்படுத்தப்பட்ட 12 மாதங்களுக்குள், ஏர்டெல்லின் 5G சேவை இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அணுகக்கூடியதாக உள்ளது என்பதை நிறுவனம் பெருமையாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் இப்போது ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை அணுக கிடைப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus In Tamilnadu):
பாரதி ஏர்டெல், அதன் 5G கவரேஜ் மாநிலத்தின் பரந்த, வேகமான மற்றும் நம்பகமான நெட்வொர்க்கைக் இப்போது தமிழாடு முழுக்க விரிவுபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இது அனைத்து 38 மாவட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது என்று ஏர்டெல் அறிவித்துள்ளது. கூடுதலாக, ஏர்டெல் 5ஜி பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள், மாநிலத்தில் 4.2 மில்லியனுக்கும் அதிகமான தனித்துவமான 5ஜி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.
டிராய் (TRAI) வெளியிட்டுள்ள கருத்துப்படி, ஆகஸ்ட் நிலவரப்படி, மாநிலத்தில் 28.48 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களை ஏர்டெல் கொண்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் தனது நெட்வொர்க்கை தமிழகத்தில் விரிவுபடுத்தியுள்ளது. புனித நகரமான மதுரை, துறைமுக நகரமான தூத்துக்குடி முதல் கன்னியாகுமரியின் தென்கோடி வரையிலான இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலமான ஊட்டி போன்ற இடங்களில் ஏர்டெல் நிறுவனம், அதன் 5ஜி சேவையை விரைவாக விரைவுபடுத்தியுள்ளது.
எந்த ஊர்களில் எல்லாம் ஏர்டெல் 5ஜி (Airtel 5G) கிடைக்கிறது?
மேலும், ஏர்டெல் நிறுவனம் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியம் மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான மகாபலிபுரத்தை 5ஜி டிஜிட்டல் சூப்பர்ஹைவேயில் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள தகவலின் படி, தமிழ்நாட்டில் உள்ள எந்தெந்த நகரங்களுக்கு எல்லாம் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை கிடைக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
1. அரியலூர் (Ariyalur)
2. செங்கல்பட்டு (Chengalpattu)
3. சென்னை (Chennai)
4. கோவை (Coimbatore)
5. கடலூர் (Cuddalore)
6. தருமபுரி (Dharmapuri)
7. திண்டுக்கல் (Dindigul)
8. ஈரோடு (Erode)
9. கள்ளக்குறிச்சி (Kallakurichi)
10. காஞ்சிபுரம் (Kanchipuram)
11. கன்னியாகுமரி (Kanniyakumari)
12. கரூர் (Karur)
13. கிருஷ்ணகிரி (Krishnagiri)
14. மதுரை (Madurai)
15. மயிலாடுதுறை (Mayiladuthurai)
16. நாகபட்டினம் (Nagapattinam)
17. தஞ்சாவூர் (Thanjavur)
18. நாமக்கல் (Namakkal)
19. சேலம் (Salem)
20. ஊட்டி (Ooty)
21. பெரம்பலூர் (Perambalur)
22. புதுக்கோட்டை (Pudukkottai)
23. ராமநாதபுரம் (Ramanathapuram)
24. ராணிப்பேட்டை (Ranipet)
25. சிவகங்கை (Sivaganga)
26. தென்காசி (Tenkasi)
27. தேனி (Theni)
28. தூத்துக்குடி (Thoothukudi)
29. திருச்சிராப்பள்ளி (Tiruchirappalli)
30. திருநெல்வேலி (Tirunelveli)
31. திருப்பத்தூர் (Tirupathur)
32. திருப்பூர் (Tiruppur)
33. திருவள்ளூர் (Tiruvallur)
34. திருவண்ணாமலை (Tiruvannamalai)
35. திருவாரூர் (Tiruvarur)
36. வேலூர் (Vellore)
37. விழுப்புரம் (Viluppuram)
38. விருதுநகர் (Virudhunagar)
போன்ற 38 மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் சில கிராமங்களில் இப்போது ஏர்டெல்லின் 5ஜி பிளஸ் சேவை கிடைக்கிறது. ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரூ.250 விலைக்கு மேல் உள்ள திட்டங்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டேல் 5ஜி இப்போது அன்லிமிடெட் ஆகவும் இலவசமாகவும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications