ஏர்டெல் 5ஜி பிளஸ் திட்டங்கள் அறிவிப்பு: என்ன விலை? எங்கெல்லாம் கிடைக்கும்?

|

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், அதன் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்த கையோடு, நேற்று, அதாவது (அக்.6) அதன் ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) திட்டங்களையும் அறிவித்தது!

ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி பிளஸ் திட்டங்கள் ஆனது எந்தெந்த நகரங்களில் அணுக கிடைக்கிறது? அதன் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

ஜியோவை விட அதிகம்!

ஜியோவை விட அதிகம்!

ஏர்டெல் நிறுவனம், இந்தியாவில் உள்ள எட்டு நகரங்களுக்கு ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை அறிவித்துள்ளது. அறியாதோர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் அதன் 5ஜி சேவைகளை - Airtel 5G Plus என அழைக்கிறது!

ரிலையன்ஸ் ஜியோ கூறியதை விட, ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவைகளை அதிக நகரங்களில் அறிவித்துள்ளது.

இந்திய மக்களுக்கு இன்னொரு தீபாவளி பரிசு! எல்லாம் 5G வந்த நேரம்!இந்திய மக்களுக்கு இன்னொரு தீபாவளி பரிசு! எல்லாம் 5G வந்த நேரம்!

ஆரம்பத்திலேயே ஜியோவிற்கு ஆப்பு வைக்கும் ஏர்டெல்!

ஆரம்பத்திலேயே ஜியோவிற்கு ஆப்பு வைக்கும் ஏர்டெல்!

இதன் மூலம் ஏர்டெல் நிறுவனம், 5ஜி சேவைகளின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த விரும்புவதை வெளிப்படையாக அறிய முடிகிறது!

எதிரியை (ஜியோ) விட அதிக எண்ணிக்கையிலான நகரங்களில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்வதால், ஏர்டெல் நிறுவனத்தால் ஆரம்பம் முதலே - 5ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் மேலோங்கி இருக்க முடியும்!

பார்தி ஏர்டெல் 5ஜி பிளஸ்: எந்தெந்த நகரங்களில் கிடைக்கும்?

பார்தி ஏர்டெல் 5ஜி பிளஸ்: எந்தெந்த நகரங்களில் கிடைக்கும்?

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி உள்ளிட்ட எட்டு நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு கட்டமாக, ஏர்டெல் நிறுவனத்தின் அதிநவீன 5ஜி பிளஸ் சேவைகளை அனுபவிக்க தொடங்குவார்கள் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது!

அன்லிமிடெட் 5G டேட்டாவுடன் நம்பமுடியாத வெல்கம் ஆபரை அறிவித்துள்ள Jio!அன்லிமிடெட் 5G டேட்டாவுடன் நம்பமுடியாத வெல்கம் ஆபரை அறிவித்துள்ள Jio!

யாரெல்லாம் ஏர்டெல் 5ஜி பிளஸை பயன்படுத்தலாம்?

யாரெல்லாம் ஏர்டெல் 5ஜி பிளஸை பயன்படுத்தலாம்?

ஏற்கனவே 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எந்தவொரு ஏர்டெல் வாடிக்கையாளருமே, ஏர்டெல் 5ஜி பிளஸை பயன்படுத்த முடியும்.

இதற்காக பயனர்கள் உறுதி செய்ய வேண்டிய விஷயங்கள் என்னவென்றால், அவர்களிடம் 5ஜி-எனேபிள்டு ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் மற்றும் அது ஏர்டெல்-இன் 5ஜி-யை ஆதரிக்க வேண்டும்!

எல்லா ஸ்மார்ட்போன்களுமே ஏர்டெல் 5ஜி-யை ஆதரிக்காது!

எல்லா ஸ்மார்ட்போன்களுமே ஏர்டெல் 5ஜி-யை ஆதரிக்காது!

இந்தியாவில் உள்ள அனைத்து 5ஜி ஸ்மார்ட்போன்களுமே ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜியை ஆதரிக்குமா என்று கேட்டால்.. தற்போது வரையிலாக இல்லை என்பதே எங்களின் பதில் ஆகும்!

எல்லா 5ஜி போன்களுமே ஏர்டெல் 5ஜி-ஐ ஆதரிக்க வேண்டுமானால், அதற்கு OEM-களின், அதாவது Original Equipment Manufacturer-களின், இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மொபைல் போன் உற்பத்தியாளர்களின் உதவி தேவைப்படும்.

மொபைல் போன்களுக்கான புதிய சட்டம்.. இது எல்லாருக்குமே சிக்கல் தான்!மொபைல் போன்களுக்கான புதிய சட்டம்.. இது எல்லாருக்குமே சிக்கல் தான்!

என்ன உதவி?

என்ன உதவி?

மொபைல் போன் உற்பத்தியாளர்கள் (OEM) தத்தம் 5ஜி போன்கள் ஆனது டெலிகாம் நிறுவனங்களின் 5ஜி சேவைகளை ஆதரிக்க, அது தொடர்பான OTA (Over the air) அப்டேட்களை வெளியிட வேண்டும்.

அதன் பின்னரே, ஏற்கனவே ஒரு 4ஜி சிம் காரட்டை வைத்திருக்கும் பயனர்கள், ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி பிளஸ் சேவைகளை பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் 5ஜி பிளஸ் திட்டங்களின் விலை என்ன?

ஏர்டெல் 5ஜி பிளஸ் திட்டங்களின் விலை என்ன?

தற்போதைக்கு, பார்தி ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவைக்கு எந்தவிதமான சிறப்பு கட்டணங்களும் இல்லை.

(நிறுவனத்தின் கூற்றுப்படி) பரந்த அளவிலான 5ஜி சேவைகள் அறிவிக்கப்படும் வரையிலாக, ஏர்டெல் வாடிக்கையாளர்களால் தத்தம் டேட்டா பிளான்களின் வழியாக ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவைகளை அனுபவிக்க முடியும்

எது உண்மை.. எது பொய்? இன்னும் கொஞ்சம் நாட்கள் தான்!

எது உண்மை.. எது பொய்? இன்னும் கொஞ்சம் நாட்கள் தான்!

ஏர்டெல் நிறுவனம், அதன் 5G திட்டங்களின் விலைகளை இன்னும் உறுதி செய்யவில்லையாம். அது தொடர்பான விவரங்கள் "அடுத்த சில நாட்களில்" வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதுவொருபக்கம் இருக்க, 4G உடன் ஒப்பிடும்போது ஏர்டெல் நிறுவனத்தின் 5G திட்டங்கள் ஆனது அதிக விலை கொண்டதாக இருக்காது என்றும் நம்பப்படுகிறது!

எது உண்மை? எது பொய்? - என்பது இன்னும் கொஞ்சம் நாட்களில் தெரிந்து விடும்!

Best Mobiles in India

English summary
Airtel 5G Plus Announced in 8 Cities Including Chennai Check Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X