"ரகசியத்தை" அம்பலப்படுத்திய Airtel அதிகாரி! அப்புறம் என்ன Jio ரீசார்ஜ் செஞ்சிடுங்க!

|

Airtel Vs Jio என்கிற போட்டி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகிறதே தவிர, இந்த இரண்டு தனியார் டெலிகாம் நிறுவனங்களுமே கொஞ்சம் கூட பின்வாங்குவதாக இல்லை.

இந்தியாவில் 4ஜி சேவைகள் அறிமுகமான நாள் தொடங்கி, சமீபத்தில் நடந்து முடிந்த 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் வரையிலாக ஏர்டெல் Vs ஜியோ என்கிற போட்டி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகி கொண்டே தான் போகிறது!

அவங்க அடிச்சுகிட்டா.. நமக்கு கொண்டாட்டம்!

அவங்க அடிச்சுகிட்டா.. நமக்கு கொண்டாட்டம்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், பார்தி ஏர்டெல் நிறுவனமும் போட்டி போட்டு, மாறி-மாறி அதிரடி திட்டங்களை, அட்டகாசமான ஆபர்களை வழங்கினால் யாருக்கு லாபம்?

டூயல் சிம் ஸ்மார்ட்போன்களை வைத்துக்கொண்டு மாறி-மாறி ஏர்டெல் மற்றும் ஜியோ சிம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஆகிய நமக்கு தானே!

இந்த "லாபம்" 4ஜி சேவைகளின் கீழ் மட்டுமல்ல, 5ஜி நெட்வொர்க்கின் கீழும் நமக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் 4ஜி க்கு நடந்த "யுத்தங்களை" விட 5ஜி க்கு நடக்கப்போகும் "சண்டைகள்" நிச்சயம் வேற லெவலில் இருக்கும்!

PF திருட்டு: கோடிக்கணக்கான இந்தியர்கள் சிக்கினர்; அக்கவுண்ட்கள் ஆன்லைனில் அம்பலம்!PF திருட்டு: கோடிக்கணக்கான இந்தியர்கள் சிக்கினர்; அக்கவுண்ட்கள் ஆன்லைனில் அம்பலம்!

ரகசியத்தை உடைத்த Airtel அதிகாரி!

ரகசியத்தை உடைத்த Airtel அதிகாரி!

"5ஜி யுத்தம்" என்று வரும் போது யார் முதலில் 5ஜி சேவையை தொடங்குகிறார்கள்? எந்த மாதிரியான விலை நிர்ணயத்தை 'செட்' செய்கிறார்கள்? என்பதை பொறுத்தே வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர்!

எடுத்துக்காட்டிற்கு, முதலில் ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை தொடங்கி, அதன் 5ஜி ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அறிவித்த பின்னர், ஜியோ அதன் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்து, ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி திட்டங்களை விட மலிவான விலைக்கு 5ஜி திட்டங்களை வழங்கினால்.. அவ்ளோதான் - ஏர்டெல் நிறுவனத்தின் கதை முடிந்தது!

எனவே தான் யார் முதலில் தொடங்குகிறார்கள்? என்ன மாதிரியான விலைகளின் கீழ் 5ஜி திட்டங்களை அறிமுகம் செய்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமான வியாபார தந்திரமாக பார்க்கப்படுகிறது. இந்நிலைப்பாட்டில் தான் ஏர்டெல் நிறுவனத்தின் "5ஜி ரகசியம்" ஒன்றை ஏர்டெல் அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தி உள்ளார்!

அதென்ன ரகசியம்?

அதென்ன ரகசியம்?

கடந்த வாரம், பார்தி ஏர்டெல் நிறுவனமானது எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் 5ஜி நெட்வொர்க் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அதனை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவையானது இந்த ஆகஸ்ட் மாதத்திலேயே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போதைக்கு ஏர்டெல் நிறுவனமானது, இந்தியாவில் உள்ள 5,000 நகரங்களில் தான் 5ஜி நெட்வொர்க்கை வெளியிடுமாம்.

பான்-இந்தியா அடிப்படையிலான 5ஜி சேவையானது, அதாவது இந்தியா முழுவதுமான 5ஜி சேவையானது அடுத்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தான் வெளியிடப்படுமாம். இந்த தகவலை ஏர்டெல் நிறுவனத்தின் எம்.டி ஆன கோபால் விட்டல் தெரிவித்து உள்ளார்.

BSNL சிம் கார்டு வச்சி இருக்கீங்களா? அப்போ உங்க மனசை கல்லாக்கிகோங்க!BSNL சிம் கார்டு வச்சி இருக்கீங்களா? அப்போ உங்க மனசை கல்லாக்கிகோங்க!

ஜியோ சிம் கார்ட்டை தூசி தட்டி ரெடியா வச்சிக்கோங்க!

ஜியோ சிம் கார்ட்டை தூசி தட்டி ரெடியா வச்சிக்கோங்க!

"ஆகஸ்ட் மாதம் தொடங்கி 5G சேவைகளை அறிமுகப்படுத்த நாங்கள் உத்தேசித்துள்ளோம். மார்ச் 2024 க்குள், ஒவ்வொரு நகரத்தையும், முக்கிய கிராமப்புறங்களையும் 5G மூலம் இணைப்போம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியால் உள்ள 5,000 நகரங்களுக்கான விரிவான நெட்வொர்க் வெளியீட்டை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்" என்றும் கோபால் விட்டல் கூறி உள்ளார்!

ஆக, ஒருவேளை நீங்கள் ஏர்டெல் 5ஜி சேவையானது 'ஒரே இரவில்' நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தால், உங்களின் ஜியோ சிம் கார்ட்டை எடுத்து ரெடியாக வைத்து கொள்ளவும், ஏனெனில் ஏர்டெல் 5ஜி-க்கு முன்பாகவே ஜியோ 5ஜி அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது!

Jio 5G சேவை எப்போது அறிமுகமாகும்?

Jio 5G சேவை எப்போது அறிமுகமாகும்?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தனது 5ஜி நெட்வொர்க்கை, 2022 சுதந்திர தினத்தன்று, அதாவது வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடலாம் என்று ஊகங்கள் உள்ளன.

இதற்கிடையில், வருகிற செப்டம்பர் 29 ஆம் தேதி நடக்கும் இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2022 நிகழ்ச்சியின் தொடக்க விழாவின் போது பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி, 5G நெட்வொர்க்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் எது நடந்தாலும், 5ஜி ரீசார்ஜ் திட்டங்கள் ஆனது 4ஜி ரீசார்ஜ் திட்டங்களை விட 10 - 15% வரை விலை அதிகமாக இருக்கும் என்பதையும், 5ஜி சேவைகளை அனுபவிக்க உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளவும்!

Best Mobiles in India

English summary
Airtel 5G Pan India Rollout Happen by March 2024 Jio Take Lead

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X