அள்ளி தரும் ஏர்டெல்.. ரூ.579 முதல்.. 56 நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.. OTT.. இதோ பட்டியல்..
ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டியாக அவ்வப்போது சலுகைகள் மற்றும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலை திட்டங்கள் உடன் கூடுதல் சலுகைகள் வழங்குவதால் பலர் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 579 plan) தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே, ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 649 prepaid plan) 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data). ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். குறிப்பாக நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (Amazon Prime Lite Subscription) கிடைக்கும். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 18-க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications