Home
News

30 நாட்கள் இல்ல.. இனி 90 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.350 பட்ஜெட்டில் வரும் இந்த Airtel ரீசார்ஜில் திடீர் மாற்றம்!

விஷயம் தெரிந்த ஏர்டெல் கஸ்டமர்கள் எல்லோரும்.. "எப்போது ரீசார்ஜ் கட்டண விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு வருமோ தெரியவில்லையே!" என்கிற பீதிலேயே இருக்கின்றனர். ஏனென்றால் இந்திய டெலிகாம் துறையில் ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ-வான கோபால் விட்டலை தவிர யாருமே "அடிக்கடி" ரீசார்ஜ் கட்டண விலை உயர்வு குறித்து பேசவில்லை!

இதற்கிடையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆனது ஏர்டெல் கஸ்டமர்கள் வயிற்றில் பாலை வார்க்கும்படியான ஒரு வேலையை பார்த்துள்ளது. ரூ.350 பட்ஜெட்டில் வரும் பிரபலமான ரீசார்ஜ் ஒன்றின் வேலிடிட்டியை 30 நாட்களில் இருந்து 90 நாட்களுக்கு அதிகரித்துள்ளது. அதாவது 2 மாதங்கள் கூடுதல் வேலிடிட்டியை அறிவித்துள்ளது.

Airtel: 30 நாட்கள் இல்ல.. இனி 90 நாட்கள் வேலிடிட்டி!

அது ரூ.361 டேட்டா பேக் ஆகும். ஏர்டெல் நிறுவனம் இந்த பேக்கின் நன்மைகளை பலமுறை மாற்றியுள்ளது. அந்த வரிசையில் தற்போது செய்யப்பட்டுள்ள சமீபத்திய திருத்தம் அதன் செல்லுபடியை 30 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரித்துள்ளது. முன்பு இந்த பேக் 30 நாட்களுக்கு 50 ஜிபி டேட்டாவை வழங்கியது.

இப்போது ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதே 50 ஜிபி டேட்டா என்கிற நன்மையை 90 நாட்களுக்கு பெறுவார்கள். இது டேட்டா பயன்பாட்டில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. மேலும் குறிப்பிட்ட டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பிறகு, அதாவது 50 ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு, ஒரு எம்பி டேட்டாவிற்கு ரூ.0.50 வசூலிக்கப்படும்.

ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ஏர்டெல் விலை உயர்வு எப்படி அதனால் வரும் என்பதை புரிந்துகொள்ள முதலில் ஏஆர்பியு (ARPU) என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும் . இது ஒரு பயனருக்கு சராசரி வருவாய் ஆகும். இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் ஆபரேட்டர் ஆன பாரதி ஏர்டெல், 2026 நிதியாண்டின் முதல் காலாண்டின் இறுதியில் அதன் சராசரி ஒரு பயனருக்கு வருவாய் ரூ.250 என அறிவித்துள்ளது.

கூடவே இந்நிறுவனம் விரைவில் அதன் ஏஆர்பியு இலக்கான ரூ.300-ஐ அடைய விரும்புகிறது. இது குறித்து பேசிய பாரதி ஏர்டெல்லின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன கோபால் விட்டல், இந்தியாவின் கட்டண கட்டமைப்பு இதற்கு உகந்ததாக இல்லை, அதை சரிசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது அடுத்த ரீசார்ஜ் கட்டண விலை உயர்விற்கு அடித்தளம் போடுகிறார்; அதை பலமாக பரிந்துரைக்கவும் செய்கிறார்.

மேலும் இப்போதைக்கு நாம் எவ்வளவு டேட்டாவை கொடுக்கிறோம், எவ்வளவு எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்களை கொடுக்கிறோம் என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இதெல்லாம் வளர்ச்சிக்கு வழிவகுக்காது. இந்தோனேசியாவில் இருப்பதை போல, மிகவும் புத்திசாலித்தனமான கட்டமைப்பு இருந்திருந்தால், இன்று இந்தியாவிற்கு இருக்கும் ஏஆர்பியு-வை விட கணிசமான உயர்ந்த இடத்தில் நாம் அமர்ந்திருப்போம் என்றும் கோபால் விட்டல் கூறியுள்ளார்.

மேலும் அதிகமான நன்மைகளை பெறும் நுகர்வோர்கள் அதிகமாக பணம் செலுத்தும் கட்டண அமைப்பை (Consumers who consume more, pay more) பற்றியும் மிட்டல் பேசியுள்ளார். அதிக நன்மைகளை நுகர்வோர்கள் செலுத்தும் கட்டணம் ஏழைகளை விட குறைவாக இருப்பது ஒரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை. நாம் இனி ஏழைகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டியதில்லை என்றும் விட்டல் கூறியுள்ளார்.

கட்டண உயர்வுகள் (Tariff Hike) இல்லாத நிலையில், ஃபீச்சர் போன் (Feature Phone) பயனர்களை ஸ்மார்ட்போன்களாக மேம்படுத்துதல், டேட்டாவை பணமாக்குதல் (Data monetisation) மற்றும் ப்ரீபெய்டு பயனர்களை போஸ்ட்பெய்டு சேவைகளுக்கு மாற்றுதல் (Converting prepaid users to postpaid services) ஆகியவற்றில் மட்டுமே ஏர்டெல் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த முயற்சிகளின் கீழ் - 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் 0.7 மில்லியன் போஸ்ட்பெய்டு பயனர்களை சேர்த்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel 50GB Recharge Rs 361 Data Plan Validity Changed From 30 Days to 90 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X