Home
News

ரூ.300 விலை பிரிவில் தாராளம் காண்பித்த Airtel.. தினசரி 2GB டேட்டா.. இலவச Disney + Hotstar சந்தா.. எந்த பிளான்?

ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டம் குறைந்த விலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney + Hotstar) நன்மையோடு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த திட்டம் வெறும் ரூ. 400 விலைக்குள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதனால், இந்த திட்டத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த ஒரு திட்டத்தை வைத்து, ஏர்டெல் நிறுவனம் ஜியோ (Jio), பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) வாடிக்கையாளர்களையும் கவரப் பார்பது போல தெரிகிறது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் இப்போது இந்தியாவில் உள்ள அதன் மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படும் வகையில், புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (Airtel prepaid recharge plan) டேட்டா (data), வாய்ஸ் (voice), எஸ்எம்எஸ் (SMS), மற்றும் ஓடிடி (OTT) சந்தா போன்ற பல நன்மைகளுடன் தொகுத்து வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் விபரம் பற்றி பார்க்கலாம்.

ரூ.300 விலை பிரிவில் தாராளம் காண்பித்த Airtel.. தினசரி 2GB டேட்டா..

ரூ.300 விலை பிரிவில் தாராளம் காண்பித்த Airtel:

ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ப்ரீபெய்ட் திட்டம் ரூ. 398 என்ற விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஏர்டெல் ரூ. 398 திட்டம் (Airtel Rs 398 Plan), இப்போது இந்தியாவில் உள்ள பல வட்டங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ் மூலம் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 50 ரூபாய் வரையிலான கேஷ் பேக் நன்மையையும் கிடைக்கிறது. இது பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ. 398 திட்டம் (Airtel Rs 398 Plan) திட்டத்திடன் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்ன-என்ன என்பதை தெளிவாக பார்க்கலாம். ஏர்டெல் 398 திட்டம் (Airtel 398 Plan) தினசரி 2GB ஹை-ஸ்பீட் டேட்டா (2GB high speed data) நன்மையை வழங்குகிறது. இத்துடன் 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5G data) நன்மையையும் இத்திட்டம் வழங்குகிறது.

ஏர்டெல் ரூ. 398 திட்டம் (Airtel Rs 398 Plan):

இந்த திட்டம் அணைத்து நெட்வொர்க்கிற்கும் செல்லுபடியாகும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இத்துடன் உங்களுக்கு தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (100 free SMS daily) நன்மையையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இந்த் திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி (validity) பற்றி பேசுகையில், இது வழக்கமான 28 நாட்கள் செல்லுபடியாகும் (28 days validity plan) 1 மாத திட்டமாக வெளிவந்துள்ளது.

இந்த திட்டத்தின் ஆகச்சிறந்த தனிச்சிறப்பே, இந்த ஏர்டெல் ரூ. 398 திட்டம் (Airtel Rs 398 Plan) உங்களுக்கு இலவச OTT சந்தா அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் எடிஷன் சந்தாவை (Disney + Hotstar Mobile Edition) வழங்குகிறது. இந்த சந்தாவை வைத்து ஒரே ஒரு மூலம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளடக்கங்களை உங்களால் பார்வையிட முடியும்.

Airtel ரூ. 300 விலை பிரிவில் வேறு என்னென்ன திட்டங்களை வழங்குகிறது?

இந்த திட்டம் குறைந்த பட்ஜெட் விலையில் தினசரி 2GB டேட்டா நன்மையோடு, பொழுதுபோக்கிற்காக OTT சந்தாவை தேடும் நபர்களுக்கு சிறந்த திட்டமாக அமைகிறது. இது தவிர ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பட்டியலில் ரூ. 300 விலை பிரிவின் கீழ், ஏர்டெல் ரூ. 349 திட்டம், ஏர்டெல் ரூ. 355 திட்டம், ஏர்டெல் ரூ. 379 திட்டம் போன்ற திட்டங்களையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel 398 Plan with Free Disney+ Hotstar Subscription Daily 2GB High Speed Data Unlimited Voice and 100 SMS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X