Airtel மீது குறிவைத்து தாக்குதல்.. ஆபத்தில் 373 மில்லியன் பயனர்கள்.. ஆனா Airtel சொன்ன ஒரே பதில்.. என்ன?
ஏர்டெல் (Airtel) நெட்வொர்க் பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சி தறக்கூடிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ஒரு மறைமுக தகவலின் பெயரில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு (Telecom) நிறுவனமான ஏர்டெல் மீது ஹேக்கர்கள் தாக்குதல் (Hackers attack) நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் மூலம் சுமார் 373 மில்லியன் ஏர்டெல் பயனர்களின் (Airtel Users Data Breached) முக்கியமான தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் இப்போது டார்க் வெப்பில் (Dark Web) இப்போது விற்பனை செய்யப்படுவதுமாக கூறப்பட்டுள்ளது.
பெயர் தெரியாத மற்றும் அடையாளம் காணப்படமுடியாத (Unidentified source) ஒரு தகவலின் படி, ஏர்டெல் நிறுவனத்தின் மீது வரலாறு காணாத ஒரு பயங்கரமான ஹேக்கர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது. இந்த மோசமான தாக்குதலை ஏர்டெல் முழுமையாக மூடி-மறைக்க பார்க்கிறது என்றும் இணையத்தில் வதந்திகள் காட்டு தீ போல பரவி வருகிறது. இதனால், ஏர்டெல் பயனர்கள் தற்போது அச்சத்திற்கும், குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

Airtel மீது குறிவைத்து தாக்குதல்.. ஆபத்தில் 373 மில்லியன் பயனர்கள் (373 Million Airtel User Data Breached):
முதலில் என்ன நடந்தது? அடுத்து உண்மையிலேயே என்ன தான் நடந்தது? என்று ஆராய்ந்த போது, நேரடியாக ஏர்டெல் நிறுவனத்திடமிருந்தே ஒரு விடை கிடைத்துள்ளது. உங்களிடம் பயன்பாட்டில் உள்ள ஒரு ஏர்டெல் சிம் கார்டோ (SIM card) அல்லது பயன்பாட்டில் இல்லாத ஒரு சிம் கார்டோ இருந்தால், அல்லது ஏர்டெல் நெட்வொர்க்கின் கீழ், உங்கள் தகவல்களை வழங்கி ஒரு சிம் கார்டை நீங்கள் பெற்றிருந்தால், இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்.
முதலில் என்ன நடந்தது என்ற கேள்விக்கான விடையை தெரிந்துகொள்வோம். சமீபத்தில் வெளியான தகவலின் படி, 375 மில்லியன் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண் (Mobile Number), மின்னஞ்சல் (Mail), முகவரி (Address), ஆதார் எண் (Aadhaar number) உள்ளிட்ட பல முக்கியமான அடையாள விவரங்களை ஹேக்கர்கள் ஏர்டெல் சர்வரிலிருந்து திருடிவிட்டதாக கூறப்படுகிறது. திருடப்பட்ட 373 மில்லியன் ஏர்டெல் பயனர்களின் தகவல்கள் அனைத்தும் இப்போது டார்க் வெப்பில் விற்பனைக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த தரவு மீறல் அறிக்கையின் நம்பகத்தன்மையை பற்றி ஆராய்ந்த போது, தெளிவுபட எந்தவொரு நம்பிக்கையான முடிவுகளும் கிடைக்கவில்லை என்பது குறிப்பித்தக்கது. 'xenZen' என அடையாளம் காணப்பட்ட ஒரு ஹேக்கர் மூலம், டார்க் வெப் தளத்தில் ஏர்டெல் பயனர் தகவல்கள் என்ற பெயரிடப்பட்ட ஒரு ஃபைல் (File) விற்பனைக்கு பட்டியலிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஃபைலை பெற டார்க் வெப் தளத்தில் (Dark web) சுமார் $50,000 அமெரிக்க டாலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Airtel சொன்ன ஒரே நேரடி பதில் என்ன தெரியுமா?
இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ. 41,74,915 தொகையை குறிக்கிறது. வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால், திருடப்பட்ட ஏர்டெல் பயனர் தகவல்களை அந்த ஹேக்கர் இந்தியா மதிப்பில் சுமார் 41 லட்சம் (41 Lakh) விலைக்கு விற்பனைக்காக பட்டியலிட்டுள்ளார். இந்த பைலில் உண்மையிலேயே ஏர்டெல் பயனர்களின் தகவல் இருக்கிறதா என்பதிலும் தெளிவு இல்லை. அதுவும் மர்மமாகவே இருக்கிறது.
இதற்கு நடுவே, ஏர்டெல் பயனர்களை அச்சுறுத்தும் வகையில் பல வதந்திகள் பரவி வருகிறது. இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனத்திடம் நேரடியாக கெடக்கப்பட்ட கேள்விக்கு நிறுவனம் அப்படி எந்தவொரு தாக்குதலும் ஏர்டெல் மீதும், ஏர்டெல் சர்வர்கள் மீதும் நடத்தப்படவில்லை என்று உறுதியாக கூறியுள்ளது. ஏர்டெல் பயனர்கள் வீணாக அஞ்ச வேண்டாம் என்றும், பயனர்களின் தகவல் எப்போதும் போல பாதுகாப்பாக இருக்கிறது என்று ஏர்டெல் நிறுவனம் பதில் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications








