Home
News

Airtel-ன் மலிவு விலை 365 நாள் பிளான்.. TRAI சொன்னா செஞ்சு தானே ஆகணும்.. பட்ஜெட்ல நான் ஸ்டாப் காலிங் நன்மை..

ஏர்டெல் (Airtel) நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ளது. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ (Jio) நிறுவனத்துடன் போட்டியில் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் சுமார் 38 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர் வசதி மற்றும் திருப்தியை மேம்படுத்துவதற்காக, நிறுவனம் பல்வேறு வகையான ஈர்க்கக்கூடிய ரீசார்ஜ் திட்டங்களை (Airtel recharge plans) இப்போது வழங்கி வருகிறது. ஏர்டெல் நிறுவனம் அனைத்து வகையான பயனர்களையும் பூர்த்தி செய்ய பட்ஜெட்டுக்கு ஏற்ற மற்றும் பிரீமியம் திட்டங்கள் இரண்டையும் வழங்கி வருகிறது.

குறிப்பாக, ஏர்டெல் (Airtel) நிறுவனம் இப்போது பட்ஜெட் விலையில் 365 நாட்கள் செல்லுபடியாகும் பல விருப்பங்களையும் வழங்குகிறது. கடந்த ஆண்டு ஏர்டெல் தனது ரீசார்ஜ் திட்ட விலைகளை கணிசமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களை மிகவும் மலிவு விலையில் டேட்டா இல்லாத ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தியது.

Airtel-ன் மலிவு விலை 365 நாள் பிளான்.. TRAI சொன்னா செஞ்சு தானே ஆகணும்

TRAI இன் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, ஏர்டெல் அதிக செலவில்லாமல் பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது நியாயமான விலையில் ஒரு வருடம் முழுவதும் செல்லுபடியாகும் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டது. ​​2,000 ரூபாய் விலைக்கு குறைவான விலையில், நீங்கள் ஒரு 365 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை தேடுகிறீர்கள் (Airtel 365 days plan under Rs 2000) என்றால், இந்த பிளான் உங்களுடையது. இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மை விபரங்களை பார்க்கலாம்.

குறைந்த செலவில் அதிக நாள் நீடிக்கும் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை ஏர்டெல் இப்போது வழங்குகிறது. குறைந்த செலவில் நீண்ட கால செல்லுபடியாகும் ரீசார்ஜ் விருப்பத்தை விரும்புவோருக்காக நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் தான் ஏர்டெல் ரூ.1849 திட்டம் (Airtel Rs 1849 Plan). இந்தத் திட்டம் அதன் பயனர்களுக்கு 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை (Airtel 365 days validity plan) வழங்குகிறது. இது மில்லியன் கணக்கானவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

குறிப்பாக இந்த திட்டம் 365 நாட்களுக்கு வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் டேட்டா நன்மை எதுவும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. TRAI உத்தரவின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் இது என்பதனால், இதில் இது டேட்டா நன்மை இணைக்கப்படவில்லை. இணைய தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது. டேட்டா நன்மை தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் மலிவ் விலையில் மற்றொரு திட்டத்தையும் வழங்குகிறது.

ஏர்டெல் (Airtel) வழங்கும் இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. கூடுதலாக, இந்தத் திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ் சேவைகள் கிடைக்கிறது. இந்த திட்டம் 365 நாட்களுக்கு மொத்தம் 3600 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டம் வெறும் ரூ. 1849 விலையில் இப்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ப்ரீபெய்ட் சிம் வைத்துள்ள யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

ஒருவேளை, நீங்கள் டேட்டா நன்மையுடன் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் ஒரு மலிவு விலை திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால், ஏர்டெல் வழங்கும் ஏர்டெல் ரூ.2249 திட்டத்தை (Airtel Rs 2249 Plan) தேர்வு செய்யலாம். இந்த திட்டம் 365 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் சேவை, தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் 30GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இதுவொரு மொத்த டேட்டா நன்மையாகும். கூடுதல் டேட்டா நன்மைக்கு டேட்டா ஆட் ஆன் பேக்குகளை நீங்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Airtel 365 Days Plan With Voice and SMS Benefits Launched Check Price and Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X