போட்றா ரீசார்ஜ்ஜ.. மாசம் ரூ.335 கூட இல்ல.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2.5GB டேட்டா!
ஏர்டெல் சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு அதிகபட்ச சலுகைகளை கொடுக்கும் வருடாந்திர திட்டமானது மாதத்துக்கு ரூ.335 கூட செலவில்லாமல் கிடைக்கிறது. இந்த விலைக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக கூடுதல் சலுகைகள் அள்ளி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 1 வருட திட்டத்தின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மாசத்துக்கு ரூ.333 செலவில் இந்த திட்டம் கிடைக்கிறது. ஆகவே, அந்த தொகை மட்டுமே போதுமா என்றால், அதுதான் கிடையாது. இதுவொரு 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இருப்பதால், மாதத்துக்கு ரூ.333 வீதம் மொத்தமாக ரூ.3,999 விலை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதிக விலை கொண்ட திட்டத்தில் எப்போதும் மாத செலவு கம்மியாகவே இருக்கிறது.

அதேபோலத்தான் இந்த திட்டமும் கிடைக்கிறது. சரி இப்போது சலுகைகளுக்கு வருவோம். இந்த வருடாந்திர திட்டத்தில் இல்லாத சலுகைகளே கிடையாது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், வழக்கமான வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஓடிடி, ஏஐ அசிஸ்டன்ட், ஸ்பேம் அலெர்ட் போன்ற ஏகப்பட்ட சலுகைகளை கொடுக்கிறது.
ஏர்டெல் ரூ 3999 திட்ட விவரங்கள்
முன்பே சொன்னதை போல 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகை கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 2.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இதுபோக கூடுதல் டேட்டா சலுகைகள் உள்ளன.
அதாவது, 4ஜி வேகத்தில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, டேட்டாவில் அதிகபட்ச நன்மைகள் கிடைக்கின்றன. மேலும், 2.5 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படும்.
இந்த டேட்டாவுக்கு ஏற்ப அதிகப்படியான ஓடிடி ஆப்களின் சந்தாவும் இந்த வருடாந்திர திட்டத்துக்கு கிடைக்கிறது. ஆகவே, ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை 1 வருடத்துக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், ஏர்டெல் கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும் எக்ஸ்ட்ரீப் பிளே (Xstream Play) சந்தாவும் கிடைக்கிறது.
ஆனால், இதில் பிரீமியம் சந்தா கிடைக்காது. இலவசமாக கொடுக்கப்படும் கன்டென்ட்கள் மட்டுமே கிடைக்கின்றன. இந்த வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சந்தா ஆகிய சலுகைகள் போக பெர்ப்லெக்சிடி ப்ரோ ஏஐ சந்தா கொடுக்கப்படுகிறது. இதை 12 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மதிப்பு ரூ.17,999ஆக இருக்கிறது.
மேலும், அனைத்து கஸ்டமர்களுக்கும் கிடைக்கும் ஸ்பேம் வாய்ஸ் கால்கள் (Spam Voice Calls) மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் (Spam SMS) அலெர்ட் சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது. மேலும், 12 மாதங்கள் வேலிடிட்டியில் மாதத்துக்கு ஒரு ஹலோ டியூனை வைத்து கொள்ளலாம். மேற்கண்ட சலுகைகளை மாதத்துக்கு ரூ.333 செலவில் ஏர்டெல் நிறுவனம் கொடுக்கிறது.
ஏர்டெல் கஸ்டமர்களுக்கு அதிகபட்ச விலை கொண்ட திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, அதிகபட்ச சலுகைகளை கொண்ட திட்டமாகவும் இது இருக்கிறது. மொத்தமாக பார்க்கையில் கொஞ்சம் அதிக விலை கொண்ட திட்டம் போல தெரிந்தாலும், இது அதற்கேற்ப சலுகைகளை கொடுத்து இருக்கிறது. வருடாந்திர திட்ட ஆப்ஷன்களில் இது பெஸ்ட்டாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications