Home
News

இறங்கி அடிச்ச Airtel.. இந்தியா முழுவதுமான புதிய ஆபர்.. 30 நாட்களுக்கு 300GB அன்லிமிடெட் டேட்டா!

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஆன பாரதி ஏர்டெல், சமீபத்தில் அதன் அனைத்து போஸ்ட்பெய்டு திட்டங்களிலும் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குவதாக அறிவித்து இருந்தது. ஆனாலும் சில நாட்களுக்கு முன்பு வரை, இந்த நன்மை ஒரு சில டெலிகாம் சரக்கிள்களில் (தொலைத்தொடர்பு வட்டங்களில்) மட்டுமே சோதனை செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து இப்போது இது அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் அணுக கிடைக்கிறது. அதாவது இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த நன்மையை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் பாரதி ஏர்டெல் நிறுவனம் ஆனது பெரிய எண்ணிக்கையிலான பயனர்களை ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது; இதனால் ஏர்டெல்லின் ஒரு பயனருக்கான சராசரி வருவாயும் (ARPU) மேம்படுத்தப்படும்.

Airtel புதிய ஆபர்.. 30 நாட்களுக்கு 300GB அன்லிமிடெட் டேட்டா!

ஏர்டெல்லின் போஸ்ட்பெய்டு திட்டங்கள் மாதத்திற்கு ரூ.449 முதல் (வரி இல்லாமல்) தொடங்குகின்றன. இந்த திட்டங்களின் பைனல் பில்லிங் விலையில் 18% ஜிஎஸ்டி சேர்க்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் - ஏர்டெல் வழங்கும் வரம்பற்ற டேட்டா உண்மையிலேயே வரம்பற்றது அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது

ஏர்டெல் 30 நாட்களுக்கு 300 ஜிபி வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. வோடபோன் ஐடியா (Vi) உடனான வரம்பற்ற டேட்டா சலுகையிலும் கிட்டத்தட்ட இதே லிமிட் தான் உள்ளது. வி நிறுவனத்தின் சலுகையில் கீழ் 28 நாட்களுக்கு 300 ஜிபி என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரூ.649 போஸ்ட்பெய்டு மொபைல் திட்டத்துடன் வரம்பற்ற டேட்டாவை பெறும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய வரம்புகள் எதுவும் இல்லை.

குறிப்பிட்டுள்ளபடி வி நிறுவனமும் இதுபோன்ற ஒரு சலுகையை சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தியது. ஆனால் இப்போதைக்கு, இந்த ஆபர் ஆந்திரப் பிரதேச வட்டத்தில் உள்ள பயனர்களுக்கு அணுக கிடைக்கிறது. இந்த நன்மைக்கான திட்டங்கள் ரூ.451 இல் தொடங்கி ரூ.1,201 வரை செல்கிறது.

வோடபோன் ஐடியாவின் தனிப்பட்ட போஸ்ட்பெய்டு திட்டங்கள் வெறும் ரூ.451 இல் தொடங்குகின்றன. இந்த விலை வரம்பில், நீங்கள் வரம்பற்ற டேட்டாவை (4G மற்றும் 5G) பெறுகிறீர்கள் என்றால் உண்மையிலேயே இது மிகவும் அருமையான விஷயம் ஆகும். வி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களை போஸ்ட்பெய்டு திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்ய ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இதில் இன்னொரு சிறப்பான விஷயம் என்னவென்றால், வரம்பற்ற டேட்டாவை தவிர, பயனர்கள் வி-யின் இந்த திட்டத்தின் மூலம் ஓடிடி (ஓவர்-தி-டாப்) நன்மைகளையும் பெறுகிறார்கள். இந்த மாற்றங்கள் தற்போது வோடபோன் ஐடியாவின் வலைத்தளத்தில் பிரதிபலிக்க தொடங்கியுள்ளன. இது போஸ்ட்பெய்டு மொபைல் வணிகத்தை விரைவுபடுத்தவும் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கவும் வி-க்கு உதவும். போஸ்ட்பெய்டு மொபைலை பொறுத்தவரை வி ஏற்கனவே சிறந்த போட்டியாளர்களில் ஒன்றாக உள்ளது. இதன் மூலம், போட்டியில் இது இன்னும் முன்னேறும்.

இந்த விலைப் பிரிவில் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு வரம்பற்ற 4ஜி டேட்டாவை அறிமுகப்படுத்த மீதமுள்ள ஒரே நிறுவனம் - முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே உள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களில் பலரும் போஸ்ட்பெய்டு சேவைகளை பயன்படுத்த விரும்புகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் ஒரு வசதி ஆகும்.

டெலிகாம் சந்தையை பொறுத்தவரை போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் "இயற்கையிலேயே" அதிக விசுவாசமுள்ளவர்கள் ஆவார்கள். மேலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் தங்கள் திட்டங்களில் சேர்த்துக் கொள்கிறார்கள். இது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிக ஏஆர்பியு-வை ஏற்படுத்துகிறது, மேலும் சலசலப்பு விகிதமும் (Churn rate) குறைவாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel Introduced 30 Days 300GB Unlimited Data Offer in All Postpaid Plans All Telecom Circles in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X