Airtel அண்ணே.. இது புதுசா இருக்குனே.. Airtel-ன் புது 219 ப்ரீபெய்ட் திட்டம்.. கூடுதல் ரிவார்டுடன் மாஸ் நன்மை.
ஏர்டெல் (Airtel) நிறுவனம் இந்த 2025 ஆம் புது வருடத்தில் ஒரு புதுமையான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வெறும் ரூ. 219 விலைக்கு அறிமுகம் செய்து இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புதிய ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Airtel prepaid recharge plan), 3GB டேட்டா நன்மையோடு, வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ் நன்மையுடன் 11 கூடுதல் ரிவார்ட் (11 extra reward) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் முழுமையான நன்மைகள் என்ன? இதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி எத்தனை நாட்கள்? என்ற முழு விபரங்களை இப்போது விரிவாக பார்க்கலாம்.
கடந்த வருடம் ஜூலை மாதத்தில் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கண்முடித்தனமாக அவற்றின் அணைத்து ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்தன. இதனால், பல கோடி வாடிக்கையாளர்களை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இழக்க நேரிட்டது. இதில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்ற வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் வலுவாக அடி வாங்கின. இதன் காரணமாக பெரியளவு இழப்பை இந்நிறுவனங்கள் சந்தித்தன.

இது ரொம்ப புதுசா இருக்கே.. Airtel அறிமுகம் செய்த புது ஏர்டெல் 219 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel 219 Prepaid Plan):
இழப்பை சமாளிக்க தனியார் டெலிகாம் நிறுவனங்கள் (private telecom companies) பல்வேறு விதமான ரீசார்ஜ் திட்டங்களை புதுமையான நன்மையுடன் அறிமுகம் செய்து மக்களை மீண்டும் கவர முயற்சி செய்து வருகின்றன. இருப்பினும், மக்கள் பிஎஸ்என்எல் (BSNL) பக்கம் மாறிக்கொண்டே இருக்கின்றனர். இந்த போக்கை சமாளிக்க ஏர்டெல் நிறுவனம் இந்த 2025 ஆண்டில் ஒரு புதுமையான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய மக்கள் மலிவு விலையில் சிறந்த நன்மை கொண்ட திட்டங்களை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்ற காரணத்தினால், ஏர்டெல் நிறுவனம் தற்போது 219 ரூபாய்க்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏர்டெல் ரூ. 219 திட்டம் (Airtel Rs 219 Plan) என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம். இந்த திட்டம் 219 ரூபாய் விலையில் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை (Airtel 30 days validity plan) வழங்குகிறது.
ஏர்டெல் ரூ. 219 திட்டம் (Airtel Rs 219 Plan):
இதுவொரு முழுமையான 1 மாத வேலிடிட்டி பேக் (Truly 1 month validity pack) ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐர்தேல் 219 பிளான் (Airtel 219 Plan) அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் நன்மையை வழங்குகிறது. இதில் அணைத்து நெட்வொர்க்கிற்குமான லோக்கல் (local), STD மற்றும் ரோமிங் அழைப்புகளும் (roaming calls) அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் மொத்தமாக 300 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது.
என்ன தான் 300 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை மொத்தமாக வழங்கினாலும், தினசரி உங்களால் 100 SMS வரை மட்டுமே அனுப்ப முடியும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த திட்டம் 3GB டேட்டா நன்மையை வழங்குகிறது. 30 நாட்களுக்கு 3GB டேட்டா என்பது மிகவும் குறைந்த அளவு தான் என்றாலும், உங்கள் தேவைக்கேற்ப ஏர்டெல் டேட்டா வவுச்சர்களை (Airtel data vouchers) நீங்கள் இந்த திட்டத்துடன் இணைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஏர்டெல் தேங்க்ஸ் வழங்கும் 11 வகையான ஏர்டெல் ரிவார்டு நன்மை:
இந்த திட்டத்துடன் கிடைக்கும் டேட்டா முடிந்த பிறகு, 1 MB டேட்டாவுக்கு 50 பைசா என்ற கட்டணம் வசூலிக்கப்படும். இந்த திட்டத்துடன் ஏர்டெல் நிறுவனம் புதுமையாக 5 ரூபாய் மதிப்பிலான டாக் டைம் (5 rupee worth talktime) நன்மையை வழங்கியுள்ளது. இதை நீங்கள் 3GB டேட்டா முடிந்த பிறகு பயன்படுத்திக்கொள்ளலாம். இத்துடன் இந்த திட்டம் ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) நன்மையாக 11 வகையான ஏர்டெல் ரிவார்டு நன்மையை வழங்குகிறது. வீட்டில் வைஃபை இணைப்புடன் அதிக டேட்டா நன்மை தேவைப்படாத மக்களுக்கு இந்த திட்டம் மலிவு விலையில் சிறந்த தேர்வாக அமைகிறது.


Click it and Unblock the Notifications








