Home
News

புது வருடம்.. இனி Airtel ப்ரீபெய்ட் ரீசார்ஜ்.. ரூ.259-க்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 1 ஜிபி டேட்டா.. 2 திட்டங்கள்!

2025ஆம் ஆண்டில் பார்தி ஏர்டெல் (Bhari Airtel) கஸ்டமர்கள் 1 ஜிபி டேட்டா (1GB Data) சலுகையுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், அவர்களுக்கு 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) மட்டுமே கிடைக்க இருக்கின்றன. இந்த திட்டங்கள் அடிமட்ட விலையில் கிடைக்கும் தினசரி டேட்டா திட்டங்களாகும். இனிமேல் 1 ஜிபி டேட்டா திட்டத்தை ரீசார்ஜ் செய்வதாக இருந்தால், முதலில் இந்த சலுகைகளை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

ரூ.300 விலைக்குள் இந்த திட்டங்கள் இருக்கின்றன. ஒரு திட்டம் ரூ 249 விலையிலும், மற்றொரு திட்டம் ரூ 299 விலையிலும் கிடைக்கிறது. இதற்கு ஏற்ப வேலிடிட்டியில் மட்டும் மாற்றங்கள் இருக்கின்றன. இதுபோக எஸ்எம்எஸ் ஸ்பேம் அலெர்ட் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கான சலுகைகளையும் கொடுத்து இருக்கிறது. ரூ 249 திட்டத்தை முதலில் தெரிந்து கொள்வோம்.

புது வருடம்! இனி Airtel ப்ரீபெய்ட் ரீசார்ஜ்.. ரூ.259-க்கு வாய்ஸ் கால்!

ஏர்டெல் ரூ 249 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 249 Prepaid Plan): இந்த திட்டத்தில் தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எஸ்எம், ஸ்பேம் அலர்ட் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 1 ஜிபி டேட்டாவானது, தினமும் பயன்படுத்த கொடுக்கப்படுகிறது. இதற்கு பிறகும் டேட்டா கொடுக்கப்படுகிறது.

ஆனால், 64 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே டேட்டா கொடுக்கப்படும். இந்த திட்டத்தில் 24 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. ஆகவே, 24 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அதேபோல இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) ஏர்டெல் கஸ்டமரகள் செய்து கொள்ளலாம்.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். இந்த வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் போக, ஓடிடி, ஸ்பேம் மற்றும் ஹலோ டியூன்ஸ் சலுகைகள் கூடுதலாக வழங்கப்படுகின்றன. ஆகவே, உங்களது போனுக்கு வரும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் ஸ்பேம் அலர்ட் கொடுக்கப்படும். இந்த சேவைக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படாது.

ஓடிடி சலுகைகளை பார்க்கையில், பிரீமியம் சலுகைகள் இல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்பை கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். ஒரு மாதத்துக்கு ஒரு டியூனை மட்டுமே பயன்படுத்தும்படி ஹலோ டியூன்ஸ் சலுகையும் கிடைக்கிறது. இதைவிட கூடுதல் வேலிடிட்டி வேண்டுமானால், ஏர்டெல் ரூ 299 மதிப்பிலான திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம்.

ஏர்டெல் ரூ 299 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 299 Prepaid Plan): இந்த ஏர்டெல் திட்டத்திலும் 1 ஜிபி டேட்டா சலுகை தினசரிக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைப்பதால், 28 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக 1 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் (64 Kbps) வேகத்தில் போஸ்ட் டேட்டாவையும் நீங்கள் பெற்று கொள்ளலாம்.

மற்ற சலுகைகளை பார்க்கையில், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் இந்த திட்டத்துக்கும் கிடைக்கின்றன. அதேபோல எஸ்எம்எஸ் சலுகைகளும் 100 வீதம் தினசரிக்கு கொடுக்கப்படுகின்றன. இதுபோக மற்ற சலுகைகளை பார்க்கையில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு ஸ்பேம் அலெர்ட் சலுகை கொடுக்கப்படுகிறது.

மேலும், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) சலுகையும் கிடைக்கிறது. ஆனால், ஓடிடி சலுகைகள் கொடுக்கப்படவில்லை. ஆகவே, முந்தைய திட்டத்தில் வேலிடிட்டி குறைவாக இருந்தாலும், கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி கிடைப்பதால், டேட்டா மட்டுமே கூடுதலாக கிடைக்கின்றது. இதில் உங்களுக்கான பெஸ்ட் திட்டத்தை ஆப்ஷனில் எடுங்கள்.

Best Mobiles in India

English summary
Airtel 1GB Daily Data Plan 2025 24 Days For Rs 249 And 28 Days For Rs 299 With Unlimited Voice Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X