Home
News

Airtel போட்ட போடு.. Jio காலி.. மாதாந்திரம் ரூ.149 மட்டுமே.. 365 நாள் வேலிடிட்டி.. அள்ளிக்கொடுக்கும் நன்மை..

ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை கவர புதிய-புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல், பழைய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் புதிய மாற்றங்களையும் மேற்கொண்டு வருகிறது. அப்படி நிறுவனம் வழங்கியுள்ள ஒரு முழு வருட திட்டத்தை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

Airtel: முதலில் ஏன் 1 வருட திட்டங்கள் எப்போது லாபகரமானது என்பதை கட்டாயம் ஒவ்வொரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். நீண்ட நாள் பேக்கேஜை நீங்கள் செலக்ட் செய்யும் பொழுது அதில் கிடைக்கும் நன்மைகள் கூடுதலாக இருக்கும். அதேபோல், நீண்ட நாள் திட்டங்களான வருடாந்திர திட்டங்களை மாதங்கத்திர திட்டங்களுடன் ஒப்பிடுகையில் வருடாந்திர திட்டங்கள் மலிவானதாக இருக்கிறது.

Airtel போட்ட போடு.. Jio காலி.. மாதாந்திரம் ரூ.149 மட்டுமே.. 365 நாள்..

வருடாந்திர திட்டம் தான் மலிவானது: ஆம், மக்களே நீங்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் மாதாந்திர திட்டங்களின் தினசரி கட்டணத்தை பிரித்து பார்த்தால், வருடாந்திர திட்டத்துடன் கிடைக்கும் தினசரி கட்டணம் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனுடன் கிடைக்கும் நன்மைகளும் வருடாந்திர திட்டத்தில் கூடுதல் இலவசங்களுடன் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல், டெலிகாம் நிறுவனங்கள் திடீரென விலை அதிகரிப்பை அமல்படுத்தினாலும், அதன் தாக்கம் உங்கள் மீது பதியாது.

1 வருட திட்டம்: 1 வருட திட்டத்தை தேர்வு செய்த காரணத்தினால், எந்தவித விலை அதிகரிப்பும் இல்லாமல், எந்தவித கவலையுமின்றி நீங்கள் அதே திட்டத்தில் பயன்படுத்தலாம். இப்படி பல நன்மைகள் வருடாந்திர திட்டத்துடன் நமக்கு கிடைக்கிறது. இந்த வகையில் airtel வழங்கும் மிகவும் மலிவான 1 வருட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தான் ரூ.1799 திட்டம்.

மாதம் ரூ.149 மட்டுமே: இந்த திட்டத்தின் மாதாந்திர கட்டணம் வெறும் ரூ.149 மட்டுமே. வெறும் 149 ரூபாய்க்கு உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாமா? இந்த திட்டம் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 3600 SMS நன்மைகளை 365 நாட்களுக்கு வழங்குகிறது. இது 24GB மொத்த டேட்டாவை வழங்கியுள்ளது. கூடுதல் இலவச நன்மையாக இத்துடன் அமேசான் பிரைம் மொபைல் சந்தாவும் கிடைக்கிறது.

Airtel போட்ட போடு.. Jio காலி.. மாதாந்திரம் ரூ.149 மட்டுமே.. 365 நாள்..

ஏர்டெல் ரூ. 2999 திட்டம்: இத்துடன் ஷா அகாடமி, விங்க் மியூசிக் மற்றும் அப்பல்லோ 24|7 சர்க்கிள், ரூ.100 மதிப்பிலான பாஸ்ட்டேக் நன்மை போன்றவையும் கிடைக்கிறது. ஏர்டெல் நிறுவனம் இதைவிட சிறப்பான ஒரு திட்டத்தை இப்போது வழங்கி வருகிறது. அது தான் ரூ.2999 விலை கொண்ட 1 வருட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாகும்.

மாதம் 249 ரூபாய் 365 நாள் வேலிடிட்டி: இந்த திட்டத்தின் மாதாந்திர கட்டணம் வெறும் ரூ.249 மட்டுமே. இது உங்களுக்கு தினசரி 2GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் தினமும் 100 SMS நன்மை போன்றவற்றை 365 நாள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. மேற்கூறிய ரூ. 1799 திட்டத்துடன் கிடைக்கும் எல்லா இலவச நன்மைகளும் இந்த திட்டத்துடன் கிடைக்கிறது. இத்துடன் கூடுதல் சேர்ப்பாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மையும் கிடைக்கும்.

பலே இலவச நன்மை: ரூ. 499 மதிப்பிலான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் உங்களுக்கு இந்த ரூ. 2999 திட்டத்துடன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் ரூ.249 மாத கட்டணத்துடன் உங்களுக்கு இப்படிப்பட்ட நன்மைகளை எந்தவொரு மாதாந்திர திட்டமும் வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel 1799 and 2999 plan 1 year recharge plan best prepaid plan for the users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X