கேபிள் TV-க்கு டாட்டா.. இனி இந்த சிங்கிள் Airtel பிளான் போதும்.. 3.3TB டேட்டா, 350 சேனல்கள், 20 ஓடிடி!
ஏர்டெல் (Airtel) நிறுவனமானது அதன் 4 திட்டங்கள் மீது பண்டிகை கால சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்கீழ் குறிப்பிட்ட 4 திட்டங்களின் மீதும் 22 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களுக்கான நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒருவேளை உங்களுக்கு ஓடிடி நன்மைகள் மட்டுமே போதாது என்றால்.. இருக்கவே இருக்கு ஏர்டெல்லின் 100எம்பிபிஎஸ் ஐபிடிவி பிளான்!
பாரதி ஏர்டெல்லின் ஐபிடிவி சேவைகள் இப்போது நாட்டின் பெரும்பாலான நகரங்களில் கிடைக்கின்றன. இதன் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 100எம்பிபிஎஸ் ஐபிடிவி பிளான்கள் ஆனது கேபிள் டிவி கனெக்ஷனை கட் செய்ய விரும்பும் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக உள்ளது!

ஏனெனில் இவைகள் பட்ஜெட் விலையில் கிடைப்பது மட்டுமின்றி, லைவ் டிவி சேவைகள் மற்றும் ஓடிடி (ஓவர்-தி-டாப்) சேவைகள் மற்றும் போதும் போதும் என்கிற அளவிலான டேட்டா நன்மையையும் வழங்குகிறது. ஏர்டெல் சேவையின் கீழ் 4 வகையான 100 எம்பிபிஎஸ் திட்டங்கள் உள்ளன. பேஸிக் பிளான் மாதத்திற்கு ரூ.799 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.
அடுத்தடுத்து உள்ள திட்டங்கள் முறையே ரூ. 899 க்கும், ரூ.999 க்கும் மற்றும் ரூ.1199 க்கும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. பாரதி ஏர்டெல்லின் ரூ.899 பிராட்பேண்ட் திட்டம் 100 எம்பிபிஎஸ் ஸ்பீடின் கீழ் 3.3டிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகம் ஒரே மாதிரியாக இருக்கும்.
இதில் ரூ.899 தான் பெஸ்ட்! ஏனென்றால் இந்த 100 எம்பிபிஎஸ் திட்டம் ஆனது வாடிக்கையாளர்களுக்கு ஐபிடிவி சேவைகளை ஒருங்கிணைக்கிறது. இதன் 350 க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள், அமேசான் பிரைம் சோனி லைவ் உட்பட 22 க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாக்கள் மற்றும் Perplexity Pro AI சந்தா கிடைக்கும்.
மேலும் பயனர்கள் இன்னும் விலை அதிகமான (லாங் வேலிடிட்டி) திட்டங்களைத் தேர்வுசெய்தால் வைஃபை ரூட்டர் மற்றும் இலவச இன்ஸ்டாலேஷனை பெறலாம். இந்த திட்டங்களுக்கான இருந்து விலைகளில் வரிகளும் அடங்கும் என்பதை நினைவில் கொள்க. எனவே ஒட்டுமொத்த விலை ரூ.1000 க்கு மேல் இருக்கும்.
ஏர்டெல்அறிவித்துள்ள 2025 பண்டிகை கால சலுகைகள்: இதன் கீழ் 1 டேட்டா பேக் (ரூ.100) மற்றும் 3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கள் (ரூ.349, ரூ.379 மற்றும் ரூ.449) என மொத்தம் 4 ஏர்டெல் திட்டங்களின் நன்மைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. ஏர்டெல்லின் ரூ.349 திட்டமானது, 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் - அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது.
இதோடு ஏர்டெல் ரிவார்ட்ஸ்-ன் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (22 க்கும் மேற்பட்ட ஓடிடிகள் - 28 நாட்கள்), பெர்ப்ளக்ஸிட்டி ப்ரோ ஏஐ (12 மாதங்கள்) மற்றும் ஆப்பிள் மியூசிக் பிரீமியம் (6 மாதங்கள்) ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.
மேலும் 1 மாத வேலிடிட்டி உடன் வரும் ஏர்டெல்லின் ரூ.379 திட்டமானது, அன்லிமிடெட் வாய்ஸ், 100 எஸ்எம்எஸ்கள், டெய்லி 2ஜிபி டேட்டாவுடன் ஏர்டெல் ரிவார்ட்ஸ்-ன் கீழ் 30ஜிபி கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ், 6 மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ மற்றும் இலவச ஹெலோடியூன்ஸ் (30 நாட்களுக்கு இலவசமாக ஏதேனும் ஒரு ட்யூனை செட் செய்யலாம்) ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.
ஏர்டெல்லின் ரூ.449 திட்டமானது, 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் - அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ஒரு நாளைக்கு 4ஜிபி டேட்டா (முன்னதாக இது 3ஜிபி டேட்டாவாக இருந்ததது) ஆகிய நன்மைகளை வழங்குகிறது. தினசரி டேட்டா ஒதுக்கீடு முடிந்த பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக இருக்கும்.
இதிலும் ஏர்டெல் ரிவார்ட்ஸ் நன்மைகள் உண்டு: கூகுள் ஒன் (30 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (22 ஓடிடிகளுக்கான அணுகல்கள் - 28 நாட்களுக்கு), ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (28 நாட்களுக்கு), ஆப்பிள் மியூசிக் சந்தா (6 மாதங்களுக்கு), பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ சந்தா (12 மாதங்களுக்கு) மற்றும் இலவச ஹெலோடியூன்ஸ் (30 நாட்களுக்கு).


Click it and Unblock the Notifications