1 ரீசார்ஜ்.. 1 வருடம்.. முடிச்சு விட்ட Airtel.. மாசம் ரூ.299-க்கு வருது.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கும் பல்வேறு திட்டங்களை வைத்திருக்கின்றன. இதில் ஏர்டெல் நிறுவனம் மாதத்துக்கு ரூ.300 விலைக்கும் கம்மியாக 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை வைத்திருக்கிறது. இதில் தினசரி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா உடன் சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது. இந்த ப்ரீபெய்டு திட்டத்தின் விலை சலுகைகள் என்னென்ன என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் மட்டுமல்ல உங்களிடம் எந்த சிம் கார்டு இருந்தாலும் சரி மாதத்துக்கு ரீசார்ஜ் செய்வதை விட வருடத்திற்கு ரீசார்ஜ் செய்யும்போது உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். அதாவது ஒரு மாதத்திற்கு ரூ 299 விலைக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கொண்ட திட்டம் கிடைக்காது.

அதுவே ரூ 3,599 விலை கொண்ட வருடாந்திர ப்ரீபெய்டு திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்போது அந்த திட்டத்துக்கான மாத செலவு ரூ 300-க்கும் குறைவாக இருக்கிறது. ஆகவே இந்தத் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம். இது ரூ 299 செலவில் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.
ஏர்டெல் 1 வருட திட்ட விவரங்கள் (Airtel 1 Year Plan Details): இந்த ஏர்டெல் திட்டத்தில் முன்பே சொன்னதைப் போல 365 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா சலுகைகளுடன் எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகளும் கிடைக்கும். தினசரி டேட்டாவை பார்க்கையில் நாளொன்றுக்கு 2 ஜிபி பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல இதற்குப் பிறகு போஸ்ட் டேட்டாவும் கிடைக்கும்.
இது 64கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த வருடாந்திர திட்டத்திற்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைப்பதால், தினசரி டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா அல்லாமலேயே வருடம் முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இது 5ஜி வேகத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும். ஆனால் தினசரி டேட்டா 4ஜி வேகத்தில் மட்டுமே கிடைக்கும்.
அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையின் கீழ் லோக்கல் கால்கள், எஸ்டிடி கால்கள் மற்றும் ரோமிங் கால்களை கஷ்டமார்கள் செய்து கொள்ளலாம். எஸ்எம்எஸ்களை பார்க்கையில், அனைத்து திட்டங்களிலும் வழக்கமாக கிடைப்பது போல ஒரு நாளுக்கு 100 எண்ணும் கணக்கில் கொடுக்கப்படுகிறது. ஆகவே வாய்ஸ் கால்கள் லேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளில் இந்த திட்டம் லாபமாகவே இருக்கிறது.
இதர சலுகைகளை பார்க்கையில் இந்த ஒரு வருட திட்டத்தில் இன்கமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றில் ஸ்பேம் டிடெக்சன் கிடைக்கிறது. மேலும் 30 நாட்களுக்கு ஒன்று என்னும் கணக்கில் இலவச ஹலோ டியூன் சலுகையும் இந்த ஒரு வருட திட்டத்தில் கிடைக்கிறது. இந்தத் திட்டத்துக்கு ஓடிடி சந்தா எதுவும் கிடைக்காது. அது வேண்டுமானால் ரூ 3999 விலை திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.
இந்தத் திட்டத்தில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் ஒரு வருடத்துக்கான ஜியோஹாட்ஸ்டார் (Jio Hotstar) சந்தா கொடுக்கப்படும். அதேபோல ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சந்தாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கும். இந்த சலுகைகள் தவிர மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஒரு வருட வேலிடிட்டியில் இந்த திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








